ஸ்கூட்டரில் மறைந்திருந்த பாம்பு மீட்பு... பதற வைக்கும் வீடியோ

ஸ்கூட்டரில் மறைந்திருந்த பாம்பு மீட்பு

 • Share this:
  ஸ்கூட்டரில் மறைந்திருந்த பாம்பு ஒன்றை மீட்கும் காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. கனமழையின் காரணமாக பாம்பு அந்த ஸ்கூட்டருக்குள் பதுங்கி உள்ளது. சாலையின் நடுவே பொதுமக்கள் முன்னிலையில் பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் அதனை பத்திரமாக மீட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் சாலையின் நடுவே ஸ்கூட்டரின் முன்பக்கம் இருக்கும் கண்ணாடி பாகத்தை அகற்றிய உடன் அதிலிருந்து பாம்பு சீறியபடி வெளியே வருகிறது. இதை பார்த்த உடன் அங்கிருந்த பொதுமக்கள் அலறினார்கள். ஆனால் பாம்பு பிடிப்பவர் சற்றும் பதற்றம் இல்லாமல் அதனை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

  Also Read : சின்ன பாம்பு என நினைத்து வாலை பிடித்த நபர்... ஆள் உயரத்திற்கு வெளியே வந்த ராஜநாகம் - ஷாக்கிங் வீடியோ

  பாம்பை மீட்பதற்காக அவர் காலியாக இருக்கும் வாட்டர் கேன் ஒன்றை பயன்படுத்துகிறார். காலியாக இருக்கும் வாட்டர் கேனில் அந்த பாம்பினை போக வைக்க அதன் அருகே கொண்டு செல்கிறார். பாம்பின் போக்கிற்கு அவரும் சென்று லாவகமாக அதனை வாட்டர் கேனிற்குள் கொண்டு வந்தார்.  இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுப்போன்று யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஏனென்றால் பாம்பு பிடிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே இதுப்போன்ற செயல்களில் வெற்றி பெற முடியம். இந்த வீடியோவை இதுவரை பலர் பார்த்து லைக், கமெண்ட் செய்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீட்விட் செய்தும் உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: