இணையதளத்தில் தினமும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தினம் தினம், புதுமையான, வேடிக்கையான வீடியோக்கள் பலவற்றை பேஸ்புக், வாட்ஸ்அப், ரீல்ஸ் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. சில சமயங்களில் சில வீடியோக்கள் கவலைகளை எல்லாம் மறந்து நம்மை சிரிக்க வைக்கும்.
அதேசமயம் சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டும் தான் நெட்டிசன்களிடையே வைரலாகிறது. இதுபோன்ற வீடியோக்கள் நம்மை மிகவும் பிரகாசமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்டதாகவும் மாற்றுகின்றன.
மேலும் இந்த மாதிரியான க்யூட்டான வீடியோக்கள் ஒருவரின் மனநிலையையே மாற்றுகின்றன. இதனால் மனநல ஆரோக்கியத்திற்கும் இவை வழி வகுக்கின்றன என்பதையே ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. அந்த வகையில் பலராலும் பரவலாக பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோ ஒன்றில், குதிரை ஒன்றின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.
படைப்பாற்றல் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல, விலங்குகள் மற்றும் பறவைகள் கூட படைப்பாற்றல் கொண்டதுதான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும். இந்த வீடியோவில், குதிரை ஒன்று பியானோ வாசிப்பதை காணலாம்.
அதில் குதிரை தனது மூக்கினால், பியானோவை இசைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எலெக்ட்ரானிக் கீபோர்டில் பியானோவை, வாய் மற்றும் மூக்கைப் பயன்படுத்தி வாசித்து இந்த குதிரை தனது அசாதாரண திறமையை வெளிப்படுத்தியுள்ளது. மனிதர்கள் வாசிப்பது போன்ற இசையை குதிரை இசைப்பது வீடியோவில் நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளது.
Also Read : எங்க காணோம்...! டிவியில் கோல்ப் ஷாட்டை பார்த்து பந்தை தேடி அழைந்த நாய் - வைரல் வீடியோ
"அற்புதமான குதிரை" என்ற தலைப்புடன் Creature Nature என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் இந்த குதிரைக்கு தகுந்த பயிற்சி அளித்தால் இதை வைத்து ஒரு live concert நடத்தலாம் என யோசனை கூறி உள்ளார்.
Also Read : நாயை வேட்டையாடிய சிறுத்தை; சிசிடிவியில் சிக்கிய திக்திக் நிமிடங்கள்!
இந்த குதிரையின் உரிமையாளர் கொடுத்து வைத்தவர் என்றும் இதுபோன்ற ஒரு குதிரையை விலைக்கு வாங்கி வீட்டில் வளர்க்க தனக்கு ஆசை என்றும் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ மனிதர்கள் மட்டுமல்ல ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் கூட திறமைசாலிகள் தான் என்பதையே இது போன்ற வீடியோக்கள் நமக்கு உணர்த்துகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.