Home /News /trend /

திடீரென நீச்சல் குளத்தில் குதித்த குழந்தை - லாவகமாக தூக்கி காப்பாற்றிய தாய்.!

திடீரென நீச்சல் குளத்தில் குதித்த குழந்தை - லாவகமாக தூக்கி காப்பாற்றிய தாய்.!

Trending

Trending

Trending Videos | ஆபத்தில் சிக்கும் மனித உயிர்களை காக்க கடவுள் எப்போதும் உடன் இருப்பதில்லை. அதற்காகத் தான் அம்மா என்னும் கடவுளின் மறு உருவத்தை அவர் எப்போதும் நம்முடன் இருக்க செய்கிறார். அதை உண்மை என நிரூபிக்கும் வகையிலேயே மேற்கண்ட இந்த 2 வீடியோக்களும் அமைந்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மனித உயிர் ஒன்றின் வாழ்வில் ஒரு தாயின் பங்கு மிக முக்கியமானது. குழந்தையை பெற்றெடுத்து, அதற்கு ஒரு ஆசானாக வழிகாட்டி வருபவர் தாய். குழந்தைக்கு ஆபத்து என்றால் சற்றும் தாமதிக்காமல் ஓடோடி வந்து உதவுபவர் தான் தாய்.

அப்படியொரு சூப்பர் அம்மா குறித்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. எதிரே இருப்பது ஆபத்து எனத் தெரியாமல் குறும்புத்தனமாக ஓடிப் போய் சிக்கிக் கொள்வது குழந்தைகளின் வழக்கம். அத்தகைய சூழலில், தாய் அருகாமையில் இருந்தால் குழந்தையிடம் இருந்து அந்த ஆபத்து விலகி விடும்.

நீச்சல் குளத்தில் குதித்த சிறுவன்

பொதுவாக தண்ணீரைப் பார்த்தாலே, துருதுருவென வளரும் குழந்தைகள் துள்ளி குதித்துவிடுவார்கள். இந்த சம்பவத்திலும் அப்படித்தான். நீச்சல் குளம் அருகே நின்று கொண்டிருந்த சின்னஞ்சிறு பையன் திடீரென தண்ணீரில் குதித்து விட்டான். பையன் குதிக்கத் தயாராகும் முன்பே அங்கு ஓடோடி வந்த அவனது அம்மா, குழந்தையின் டி-ஷர்டை லாவகமாக ஒற்றை கையில் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து, குழந்தையை தண்ணீரில் இருந்து தூக்கி அவர் காப்பாற்றினார்.டிவிட்டரில் தி ஃபைஜன் என்னும் யூசர் இதுகுறித்த வீடியோவை வெளியிட, ஏறத்தாழ 5 லட்சம் பேர் அதைப் பார்வையிட்டுள்ளனர். சுமார் 15 ஆயிரம் பேர் வீடியோவை லைக் செய்துள்ளனர். தக்க சமயத்தில் ஓடோடி வந்த தாயின் செயலை பலரும் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

Also Read : தினசரி சொந்த சிறுநீரை பருகி வரும் மனிதர் - 10 ஆண்டுகாலம் இளமையாக உணர்வதாக பெருமிதம்!

தவறி விழும் சிறுவனை காப்பாற்றிய தாயார்

ஆபத்தில் இருக்கும் குழந்தைகளை அவர்களது தாயார் காப்பாற்றுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. லிஃப்டில் இருந்து தாயும், மகனும் ஒரு கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இறங்கினர். அப்போது, தாய் எதையோ விசாரிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

Also Read : McDonalds-இல் இலவசமாக சாப்பிட ரூ.1 லட்சம் சம்பளமாம்..

ஏதேச்சையாக துருதுருவென ஓடிய சிறுவன், அருகாமையில் உள்ள லேண்டிங் அருகே சென்றதுடன், அங்கிருந்த மர அடைப்பின் இடைவெளி வழியாக கீழே விழ பார்த்தான். ஏறக்குறைய முக்கால்வாசி உடல் அந்தரத்தில் சென்றுவிட்டது. இரண்டு கால்களும் நழுவியிருந்தால் குழந்தை கீழே விழுந்து உயிரிழக்க நேரிட்டிருக்கும். ஆனால், அந்த சமயத்தில் பதறியபடி ஓடிய தாய் சிறுவனின் காலை பிடித்து இழுத்து மேலே தூக்கி விட்டார். இதுகுறித்து பதிவான சிசிடிவி வீடியோ அப்போது வைரல் ஆனது. 
View this post on Instagram

 

A post shared by Meme wala (@memewalanews)


கடவுளின் அவதாரமாக

ஆபத்தில் சிக்கும் மனித உயிர்களை காக்க கடவுள் எப்போதும் உடன் இருப்பதில்லை. அதற்காகத் தான் அம்மா என்னும் கடவுளின் மறுஉருவத்தை அவர் எப்போதும் நம்முடன் இருக்க செய்கிறார். அதை உண்மை என நிரூபிக்கும் வகையிலேயே மேற்கண்ட இந்த 2 வீடியோக்களும் அமைந்துள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி