ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வட்டமாக நடைபோட்ட செம்மறி ஆடுகள்.. ஷாக்கான ஓனர்.. விலகாத மர்மம்... வைரல் வீடியோ.!

வட்டமாக நடைபோட்ட செம்மறி ஆடுகள்.. ஷாக்கான ஓனர்.. விலகாத மர்மம்... வைரல் வீடியோ.!

Sheep Viral Video | செம்மறி ஆடுகள் குறித்து சமீபத்தில் வெளியான செய்தி மற்றும் சிசிடிவி காட்சிகள் நம்மை குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளன.

Sheep Viral Video | செம்மறி ஆடுகள் குறித்து சமீபத்தில் வெளியான செய்தி மற்றும் சிசிடிவி காட்சிகள் நம்மை குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளன.

Sheep Viral Video | செம்மறி ஆடுகள் குறித்து சமீபத்தில் வெளியான செய்தி மற்றும் சிசிடிவி காட்சிகள் நம்மை குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே மாதிரியான தவறை செய்கின்றபோது, அவர்களைப் பார்த்து “ஏன் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல நடந்து கொள்கிறீர்கள்?’’ என்று சிலர் திட்டுவதுண்டு. உங்களில் சிலர் இதுபோன்ற வசவுகளை கேட்காமல் இருக்கலாம் அல்லது கேட்டிருந்தாலும் அதன் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம்.

பொதுவாக, மற்ற விலங்குகளை ஒப்பிடுகையில் செம்மறி ஆடுகளுக்கு தனித்த சிந்தனை அல்லது செயல்பாடு என்பது இருக்காது. முதலாவதாக ஒரு ஆடு என்ன செய்கிறதோ, அதையே தான் மற்ற அனைத்து ஆடுகளும் செய்யும். உதாரணத்திற்கு மாடுகள் மேய்ச்சலுக்கு செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். அங்கே வெள்ளம் புரண்டு ஓடும் காட்டாற்றில் ஒரு மாடு தவறி குதித்துவிட்டது என்றால், உடனே மற்ற மாடுகளும் அப்படி விழுந்துவிடாது. ஆபத்தை உணர்ந்து ஒதுங்கி நிற்கும்.

ஆனால், செம்மறி ஆடுகள் அப்படியல்ல. ஒரு ஆடு தவறிப்போய் காட்டாற்றில் விழுந்துவிட்டால் மற்ற ஆடுகளும் அணிவகுத்துச் சென்று அப்படியே விழுந்து விடும். சரியோ, தவறோ, தனக்கு முன்னே செல்லும் ஆடு என்ன நடவடிக்கையை பின்பற்றுகிறதோ, அதையேதான் மற்ற ஆடுகளும் பின்பற்றும். இதனால், தான் ஆபத்தை உணராமல் தவறு செய்யும் ஒரு நபரை பார்த்து திருந்தாமல், மற்ற நபர்களும் அதே தவறை செய்யும்போது, செம்மறி ஆடுகளை சுட்டிக்காட்டி கண்டிக்கின்றனர்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். செம்மறி ஆடுகள் குறித்து சமீபத்தில் வெளியான செய்தி மற்றும் சிசிடிவி காட்சிகள் நம்மை இன்னும் குழப்பத்திற்கு உள்ளாக்குகின்றன. சீனாவில் மியோ என்பவர் 34 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

Also Read : வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

இதில் திடீரென்று 13 ஆடுகள் ஒரு வட்டமாக சுற்றி, சுற்றி நடக்க தொடங்கின. ஏன் இப்படி வட்டம் போடுகிறது? என்ன செய்ய முயற்சிக்கிறது என எதுவும் புரியவில்லை. ஆனால் 12 நாட்களாக இது தொடர்ந்துள்ளது. இடையிடையே உணவு உண்ணவும், தண்ணீர் அருந்தவும், தூங்கவும் ஆடுகள் இடைவெளி விட்டதா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால், கனக்கச்சிதமாக ஒரே வட்டத்தில் தொடர்ந்து அந்த ஆடுகள் உலா வந்திருக்கின்றன. கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. ஒருவேளை ஆடுகளுக்கு ஏதேனும் நோய் இருந்து, அதன் காரணமாக வட்ட நடை போட்டிருக்கலாம் என்று சொன்னால், அதன் உரிமையாளர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுக்கிறார்.

அனைத்து ஆடுகளுமே ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், ஒவ்வொரு பயனாளரும் வெவ்வேறு விதமான கண்ணோட்டங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

சிலர் இதை கேலி, கிண்டல் செய்து நகைச்சுவையாக பதிவிடுகின்றனர். சிலர், இதன் பின்னணியில் ஏதேனும் , மர்மமான காரணம் இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையில் இந்த விசித்திர நடவடிக்கைக்கு பின்னால் உள்ள மர்மம் என்னவென்பது யாருக்கும் தெரியவில்லை.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Viral Video