Home /News /trend /

ஆஸ்திரேலியாவில் பனி மழை... வகுப்புகளை பாதியில் நிறுத்திய பள்ளி நிர்வாகம் - வீடியோ வைரல்.!

ஆஸ்திரேலியாவில் பனி மழை... வகுப்புகளை பாதியில் நிறுத்திய பள்ளி நிர்வாகம் - வீடியோ வைரல்.!

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

Viral Video | ஆஸ்திரேலியாவில் பெய்த பனிமழையினால் பாதியில் வகுப்புகளை நிறுத்தியது பள்ளி நிர்வாகம். இதோடு அங்கு பயிலும் மாணவர்களை பனி மழையின் அழகை ரசிப்பதற்கும் நண்பர்களுடன் துள்ளிக்குதித்து விளையாட அனுமதித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மழை பெய்தாலே சும்மா இருக்க மாட்டோம். எப்படியாவது நனைந்து விட வேண்டும் என்பதற்காக நம் பெற்றோர்களுடன் ஏதாவது ஒன்றைக் கூறி ஒரு நிமிடமாவது மழையில் வந்து நின்றுவிட்டு செல்வோம். சாதாரண மழைக்கே இப்படி செய்யும் நாம் ஆலங்கட்டி மழை, பனிப் பொழிவைப் பார்த்தால் சும்மாவ இருப்போம். அந்த இடத்துக்கு எப்படியாவது சென்று ஒரு முறை நனைந்து விட்டு வந்துவிடுவோம் அல்லவா? இப்படி நம்முடைய கனவை நினைவாக்குவது போல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி ஒன்று மேற்கொண்டிருந்தது நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது. அப்படி என்ன செய்தது? குழந்தைகள் என்ன செய்தார்கள்? 

ஆஸ்திரேலியாவின் கேப்டன்ஸ் பிளாட்டில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் செயல்பட்ட பள்ளி ஒன்று மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அற்புதமான நிகழ்வை செய்ய முடிவெடுத்தது. மாணவர்கள் பனி மழையின் அழகை ரசிக்கவும், இந்த வானிலை எப்படி இருக்கும் என அனுபவிப்பதற்காக வகுப்புகளை பாதியில் நிறுத்தியது. இதோடு மாணவர்களை உங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் விளையாடுங்கள் என்று கூறியதையடுத்து, பள்ளி மைதானத்தில் பனிமழையில் குழந்தைகள் ஆட்டம் போட்டனர்.

இதனை வீடியோவாக எடுத்த பள்ளி நிர்வாகம், தங்கள் பள்ளியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் “அடர் பனி“ என்ற தலைப்போடு பனி மழையில் குழந்தைகள் விளையாடிய வீடியோவைப் பதிவிட்டனர். இந்நிலையில் தான் மீண்டும் இந்த வீடியோ “goodnewsmovement” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட பின்னர் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததோடு, 24 மணி நேரத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வையாளர்களுடன் வைரலாகிறது. இதோடு நெட்டிசன்களும் பல்வேறு கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.




“இது தான் பள்ளிக்கூடம், மாணவர்களுக்குப் புத்தக அறிவோடு அனுபவத்தோடு கூடிய கற்றல் தான் வாழ்க்கைக்கு  பலனளிக்கும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் இச்செயல் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது, ஒரு ஆசிரியராக குழந்தைகளின் அனுபவத்திறனை அக்கறையுடன் செயல்படுத்தியிருக்கிறார்“ என்பது போன்ற கருத்துக்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் மற்றொரு பயனர் ஒருவர், நான், ஆண்டுக்கு 6 மாதங்கள் பனி இருக்கும் இடத்தில் வசிக்கிறேன் எனவும் பனி பெய்யும் போது இதுப்போன்று பள்ளி இடைநிறுத்தப்பட வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். இதோடு சூப்பர், அமேசிங், செம என்ஜாய்மென்ட் , வாழ்த்துக்கள் போன்ற மொசெஜ்களோடு ஈமோஜிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : ராணுவ வீரருக்கு நாட்டுப்பற்றுடன் சல்யூட் அடிக்கும் க்யூட் குழந்தைகள் - லைக்குகளை குவிக்கும் நெட்டிசன்கள்!

ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களாக குளிர் மற்றும் பனி வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கடந்த மே மாதத்தில் சிட்னி நகரில் உள்ள வானுயர்ந்த பிரம்மாண்ட கட்டிடங்கள், சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற நினைவுச்சின்னங்கள், துறைமுகப்பாலங்கள போன்றவை பனி படர்ந்து காணப்படுகின்றன.
Published by:Selvi M
First published:

Tags: Australia, Trending, Viral Video

அடுத்த செய்தி