நீண்ட தூரம் டிரைவ் செய்வது அல்லது பயணம் செல்வது ஒரு சில நேரங்களை தவிர எப்போதுமே வேடிக்கையாக இருக்கும். ஆனால் ட்ராஃபிக்கில் சிக்கி ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பது அல்லது ட்ராஃபிக் நெரிசலில் நீண்ட நேரம் காரில் பயணிப்பது என்பது சில நேரங்களில் மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும்.
கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் தனது நீண்ட நேர பயணத்தை எப்படி என்ஜாய் செய்தார் என்பதை காட்டும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது ஐந்து முறை கோப்பையை வென்ற ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் மென்ட்டாராக உள்ளார். இதனிடையே மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஏப்ரல் 6 அன்று நடைபெற்றது.
இந்த போட்டிக்காக மும்பை அணியின் விக்கெட்கீப்பிங் கோச் கிரண் மோருடன், சச்சின் புனே நோக்கி காரில் சென்றார். அப்போது சச்சின் மற்றும் கிரண் மோர் சென்ற கார் ட்ராஃபிக்கில் சிக்கியது. பொதுவாக ட்ராஃபிக் ஜாமில் மாட்டி கொண்டால் எல்லோரும் டென்ஷனாவது தானே வழக்கம். ஆனால் சச்சினும், கிரண் மோரும் சேர்ந்து காருக்குள் உட்கார்ந்தபடியே அந்த ட்ராஃபிக் ஜாமை என்ஜாய் செய்தனர்.
இது தொடரான வீடியோவை சச்சின் தனது ட்விட்டரில் ஷேர் செய்து உள்ளார். ட்விட்டரில் ஹேமந்த் குமாரின் பிரபலமான மராத்தி பாடலை ட்ராஃபிக்கில் சிக்கிய போது பாடும் வீடியோவை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் ஷேர் செய்து உள்ளார். புகழ்பெற்ற மராத்தி பாடலான ‘மி டோல்கரா தர்யாச்சா ராஜா’ (Mi Dolkara Daryacha Raja) என்ற பாடலை காருக்குள் ஒலிக்கவிட்டு மகிழ்ச்சியுடன் பாடி கொண்டே லேசான உடலசைவால் நடனமாடினார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள சச்சின், புனே செல்லும் போது ட்ராஃபிக்கில் சிக்கி கொண்டோம். அப்போது இந்த அருமையான பாடலைக் கேட்க நினைத்தேன்” என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார்.
Also Read : உடல் எடையை குறைத்தால் கூடுதல் சம்பளமாம்..வைரல் ட்வீட்
மேலும் அந்த ட்விட்டில் பாடலின் சில வரிகளை மராத்தியில் சச்சின் எழுதியுள்ளார். சச்சின் ஷேர் செய்துள்ள இந்த ஜாலி வீடியோவை இதுவரை 2.62 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து உள்ளனர். பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு சச்சின் சைகைகளை பயன்படுத்தி டான்ஸ் ஆடுவதை பல ரசிகர்கள் வெகுவாக ரசித்து கமெண்ட்ஸ் செய்து உள்ளனர்.
Also Read : மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள்
சச்சினின் இந்த வீடியோவை பார்த்த பலர் தங்களது குழந்தை பருவ நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்து விட்டதாக குறிப்பிட்டனர். தாங்களும் சிறுவயதில் இந்த பாடலை ஜாலியாக பாடி, டான்ஸ் ஆடியதை பல யூஸர்கள் நினைவு கூர்ந்து கமெண்ட்ஸில் பதிவு செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.