Home /News /trend /

160 அடியில் ரோலர் கோஸ்ட்டர் நின்றுவிட்டதால் பதறிய பயணிகள் - நடந்தது என்ன?

160 அடியில் ரோலர் கோஸ்ட்டர் நின்றுவிட்டதால் பதறிய பயணிகள் - நடந்தது என்ன?

160 அடியில் ரோலர் கோஸ்ட்டர் நின்றுவிட்டதால் பதறிய பயணிகள்

160 அடியில் ரோலர் கோஸ்ட்டர் நின்றுவிட்டதால் பதறிய பயணிகள்

ரோலர் கோஸ்ட்டரில் சவாரி செய்து கொண்டிருக்கும் போதே பாதியில் நின்றுவிட்டது. அதுவும் உச்சியில் செங்குத்தாக நின்றுவிட்டதால், மக்கள் மிகவும் அலறினர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பெரிய பெரிய சாகசம் செய்ய வேண்டும் என்கிற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். இதற்காக சிலர் மலையயேற்றம், அருவி நீச்சல் அடித்தல், ஆழமான கடலுக்கு செல்லுதல் போன்றவற்றில் பலவித சாகசங்களை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய தன்மையும் இருப்பதால் பெரும்பாலும் மக்கள் இதனை தவிர்க்க பார்ப்பார்கள். ஆனால், இதை காட்டிலும் சிறிய அளவிலான சாகசங்களை முயற்சி செய்ய ரோலர்கோஸ்டர் போன்றவற்றில் தில்லாக சவாரி செய்வார்கள். இதில் பொதுவாக உயிருக்கும் ஆபத்து தரக்கூடிய விஷயங்கள் இல்லாததால் மக்கள் இதில் விரும்பி சவாரி செய்வார்கள்.

    அந்த வகையில், ரோலர் கோஸ்ட்டர் சவாரிகள் மிகவும் பிரபலமானவை. இவை சிலிர்ப்பான அனுபவத்தை அளிப்பதால் மக்கள் இதை விரும்பி செய்கின்றனர். அதே போன்று ரோலர்கோஸ்டர்கள் பலரை ஈர்க்க முக்கிய காரணம் இது திகில் தரும் வகையில் இருப்பதால் தான். இதில் சவாரி செய்யும்போது நிச்சயம் புது வித அனுபவத்தை இது தரக்கூடும். அதனால் தான், சிறிய வகையிலான சகாசங்களை செய்ய விரும்புவோர் ரோலர் கோஸ்ட்டரை தேர்வு செய்கின்றனர். ஆனால், சில நேரங்களில் இந்த ரோலர் கோஸ்ட்டரில் கூட ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இப்படி ஒரு நிகழ்வு தான் ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தின் உள்ள தீம் பார்க் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு 'பார்க்யூ டி அட்ராசியோன்ஸ்' என்கிற இந்த தீம் பார்க்கில் தான் நடந்தது. எல்லா வகையான தீம் பார்க்களை போன்றே இந்த பூங்காவிலும் பல பயணிகள் ரோலர் கோஸ்டரில் சவாரி செய்ய ஆசைப்பட்டுள்ளார். அதன்படி, இதில் ஏறிக்கொண்டு சவாரியும் செய்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு நேர்ந்தது மிக மோசமான நிகழ்வாக அமைந்தது. ஆம், அந்த ரோலர் கோஸ்ட்டரில் சவாரி செய்து கொண்டிருக்கும் போதே பாதியில் நின்றுவிட்டது. அதுவும் உச்சியில் செங்குத்தாக நின்றுவிட்டதால், மக்கள் மிகவும் அலறினர்.

    Also Read : திருநங்கை, திருநம்பி தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தை - வியப்பில் மக்கள்... பதில் இதோ!

    மாட்ரிட்டில் உள்ள இந்த தீம் பார்க்கில் மக்கள் சவாரி செய்து நடுவில் நின்ற ரோலர் கோஸ்டர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உலகின் கண்கவர் ரோலர் கோஸ்டர்களில் ஒன்றான அபிஸ்மோ ரோலர் கோஸ்டர், 50 மீட்டருக்கு (160 அடி) மேல் அமைக்கப்பட்டுள்ளது. இது மேலும், கீழேயும் செல்லும்போதும் குறைந்தது 105 கிமீ வேகத்தில் செல்ல கூடும். மிக சுவாரஸ்யமாக அமைய வேண்டிய இந்த ரோலர் கோஸ்டர் பயணம், ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதில் உள்ள மக்களுக்கு மோசமான திகில் பயணமாக அமைந்தது. இதில் பயணித்த மக்கள் உச்சியில் சிக்கித் தவித்து வானத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தனர்.

    மாட்ரிட் நகரில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறி வருகின்றனர். மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, தீம் பார்க் அதன் கதவுகளை பயணிகளை சுற்றி மூடியதால், அவர்கள் அசௌகரியமான சூழ்நிலையில் இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளனர். சில நிமிடங்களுக்கு பிறகு தொழில்நுட்ப கோளாறை சரி செய்யப்பட்டதால், அதில் பயணித்த எல்லோரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி