Home /News /trend /

திரண்டு நிற்கும் கருமேகம்.. கிரீடம் போல் கலர்ஃபுல்லாக வானவில் - சீனாவில் தோன்றிய அதிசயக் காட்சி.!

திரண்டு நிற்கும் கருமேகம்.. கிரீடம் போல் கலர்ஃபுல்லாக வானவில் - சீனாவில் தோன்றிய அதிசயக் காட்சி.!

வானவில்

வானவில்

Rainbow | வானில் மழைத்துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது ஏற்படும் போது நிகழும் ஒளிப்பிரிகை தான் வானவில்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வானவில்.. கண்களைக் கவர்ந்திழுக்கும் கொள்ளை அழகோடு நமக்குக் காட்சியளிக்கும் அற்புதமான இயற்கை நிகழ்வு“… சிறு வயதில் மழை பெய்து சற்று வெயில் அடிக்கும் நேரத்தில் வானில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ மற்றும் வயலட் என ஏழு வண்ணங்களில் தோன்றும் வானவில் எப்போது வருகிறது? என்பதைக் காண ஆவலுடன் காத்திருப்போம்.

வானில் அரைவட்டத்தில் வில்போன்று வளைந்து தோன்றும் அற்புதமான இந்த நிகழ்வை நாம் மட்டுமில்லாமல் நம்முடைய நண்பர்களுக்கும் சொல்லி மகிழ்வோம்.“ மழை நேரத்தில் சூரிய ஒளியில் மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் மீது பட்டு ஏழு நிறங்களாக பிரிந்துக் காட்சியளிக்கும் வானவில், சீனாவில் கொஞ்சம் வித்தியாசமாக தோன்றியது மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அப்படி என்ன தான் அந்த வானவில்லில் இருந்தது தெரியுமா?

சீனாவில் வித்தியாசமாகத் தோன்றிய வானவில்….

வானில் மழைத்துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது ஏற்படும் போது நிகழும் ஒளிப்பிரிகை தான் வானவில். மேகத்திற்கு நடுவில் வில்போன்று வளைந்துக் காட்சியளிக்கும். ஆனால் மேகமே வானவில்லாக இருந்தால்? யோசித்துப்பார்க்க முடிகிறதா? ஆம் சீனாவில் உள்ள ஹைகோ நகரில் சில தினங்களுக்கு முன்னதாக வானத்தில் வித்தியாசமாக வானவில் தோன்றியுள்ளது. எப்போதும் போல அரைவட்ட வடிவில் வளைந்துக் காணப்படாமல், திரண்டு நிற்கும் மேகம் போலக் காட்சியளித்தது அனைவரையும் மெய்மறந்துப் பார்க்க வைத்துள்ளது.



கருமேகங்களுக்கு நடுவில் மேகங்களுக்கு கிரீடம் வைத்தது போல் காணப்படும் அந்த அற்புதக் காட்சியை வீடியோவாக எடுத்த நெட்டிசன் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய வித்தியாசமான வானவில்லை சில நாள்களிலேயே இதுவரை 28.3 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். என்னடா..இயற்கையின் அழகு, இது நிஜமாகவே வானவில்லா? அல்லது ஏதேனும் பெயிண்டிங்கா? என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோடு கடவுள் மக்களுக்குக் காட்சியளிக்கிறார் என்றும் யாருடா? வெறும் 9 வினாடிகளுக்கு மட்டுமே வீடியோ எடுத்துள்ளது? என்பது போன்ற பல கமெண்ட்டுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : வரலாறு காணாத வெப்பத்தில் சீனா.. சூப்பர் மார்க்கெட்டுக்குள் நாற்காலியுடன் குவியும் முதியவர்கள்... வைரல் வீடியோ.!

இதுப்போன்று பல கருத்துக்களை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வந்தாலும், ஏன் இயற்கைக்கு மாறாக இதுப்போன்று வானவில் தோன்றியுள்ளது? என மக்களிடம் அச்சமும் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தான் ஏன் வித்தியாசமாக வானவில் தோன்றியுள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

Also Read : நீதிபதி, போலீசாரை பாடாய்படுத்திய குறும்புக்கார குரங்கு - வைரல் வீடியோ

வித்தியாசமான வானவில்… ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன.?

சீனாவில் தோன்றிய வானவில்லின் வித்தியாசமான தோற்றத்தை ‘ scarf cloud’ மற்றும் pileus என்று அழைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது ஈரப்பதம் மிகுந்த காற்றில் நீர்த்துளிகள் சில நேரங்களில் பனிக்கட்டியாக மாறும். அந்த நேரத்தில் நீர்த்துளிகள் மற்றும் பனிக்கட்டிகள் மீது சூரிய ஒளி படும் போது தான் வித்தியாசமான தோற்றம் உருவாகின்றது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். என்னவாக இருந்தாலும் இதுவரை யாரும் பார்த்திராத இந்த வானவில் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: China, Trending, Viral Video

அடுத்த செய்தி