Home /News /trend /

பாட்னாவில் ஜூம் மீட்டிங்கின்போது மதிய உணவை சாப்பிட்ட வக்கீல் - வைரலாகும் வீடியோ!

பாட்னாவில் ஜூம் மீட்டிங்கின்போது மதிய உணவை சாப்பிட்ட வக்கீல் - வைரலாகும் வீடியோ!

ஜூம் மீட்டிங்கின்போது மதிய உணவை சாப்பிட்ட வக்கீல்

ஜூம் மீட்டிங்கின்போது மதிய உணவை சாப்பிட்ட வக்கீல்

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் சோகத்துடன் விர்ச்சுவலாக இணைந்திருந்தாலும் அதில் சில வேடிக்கைகளும் நிகழ்வதுண்டு.

  • News18
  • Last Updated :
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்குதலால் உலகமே இன்று வீடியோ மீட்டிங்கில் இயங்கி வருகிறது. இணையம் இல்லை என்றால் என்று வேலைகளை நடைபெறாத வண்ணம் பள்ளி படிக்கும் மாணவர்கள் முதற்கொண்டு அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்கள் என பலரும் ஆன்லைன் மீட்டிங், சாட் வழியாக தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நீதிமன்றங்களும் நீதிமன்ற அமர்வுகளை ஜும் போன்ற ஆப்ஸ்கள் மூலம் நடத்த முடிவு செய்தனர். அதை பற்றிய செய்தியைத்தான் இந்த பதிவில் இப்போது நாம் காண இருக்கிறோம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் சோகத்துடன் விர்ச்சுவலாக இணைந்திருந்தாலும் அதில் சில வேடிக்கைகளும் நிகழ்வதுண்டு. அந்த வகையில் பாட்னாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது அமர்வு முடிந்த பின் கேமராவை ஆப் செய்ய மறந்து, தான் கொண்டுவந்திருக்கும் மதிய உணவை சாப்பிடுகிறார். இதை சொலிசிட்டர் ஜெனரல் பார்த்தும் விடுகிறார். இந்த சம்பவத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் என்ன செய்தார் என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு சொலிசிட்டர் ஜெனரலின் ரியாக்ஷன் தான் இப்போது இண்டர்நெட்டில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த குறுகிய வீடியோ கிளிப்பில், க்ஷத்ராஷல் ராஜ் என அடையாளம் காணப்பட்ட வழக்கறிஞர் அமர்வு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் கேமராவில் மதிய உணவு சாப்பிடுவதைக் காணலாம். சிறிது நேரம் கழித்து இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வீடியோ அழைப்பின் மறுமுனையில் தோன்றி ராஜ் இன்னும் லைவில் தான் இருக்கிறார் என்பதைக் குறிக்க முயற்சிக்கிறார். பின்னர் மேத்தா ராஜை தனது தனிப்பட்ட தொலைபேசியில் அழைத்து நிலைமை குறித்து எச்சரிக்கிறார். சூழ்நிலையை உணர்ந்தவுடன், ராஜ் உடனடியாக தனது தட்டைத் தள்ளி வைத்து, அட்டென்க்ஷனில் உட்காருகிறார்.

இந்த சம்பவத்தின்போது மேத்தா ராஜிடம், "யஹான் பெஜோ" என்று நகைச்சுவையாக கேட்கிறார். அதாவது ராஜிடம் மேத்தா தனக்கும் கொஞ்சம் உணவை அனுப்பும்படி கேட்கிறார்.

இந்த வீடியோ விரைவில் சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்களை குஷிப்படுத்தியுள்ளது.B இண்டர்நெட் மீம்ஸாக மாறும் ஜூம் கூஃப்-அப்கள் இப்போது பிரபலமாக உள்ளன. சமீபத்தில், இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், நீதிபதி ராய் பெர்குசன் பிப்ரவரி தொடக்கத்தில் ஜூம் மீட்டிங்கின்போது டெக்சாஸில் 394 வது நீதித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் மெய்நிகர் நடவடிக்கைகளுக்காக ஜூம் மீட்டிங்கில் இணைந்தார், அப்போது அவர் இரண்டு வழக்கறிஞர்களையும், ஒரு பூனைக்குட்டியையும் மீட்டிங்கின் போது பார்த்தார். அது அப்போது பயங்கர வைரலாகியது.

"மிஸ்டர் பொன்டன் அவர்களே உங்கள் வீடியோ அமைப்புகளில் பில்டர் இயக்கப்பட்டிருப்பதாக நான் நம்புகிறேன்,” ஏனெனில் எனக்கு வீடியோவில் பூனை உருவம் தெரிகிறது என்று நீதிபதி கூறினார். அமைப்புகளை சரிசெய்ய எனது உதவியாளர் முயற்சிப்பதாக பொன்டன் கூறினார்.

"நான் இங்கே லைவில் தான் இருக்கிறேன், நான் பூனை இல்லை," என்னை நம்புங்கள் என்று அவர் கூறினார்.

"நான் அதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்," என்று நீதிபதி கூறினார்.

Also read... விமான அதிகாரிகளை தாக்கியதற்காக பிரெஞ்சு விமானத்தில் இருந்து பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட இந்தியப்பயணி!

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில், பெர்குசன் ஒரு ட்வீட்டில் “முக்கியமான ஜூம் உதவிக்குறிப்பு: நீங்கள் ஒரு மெய்நிகர் விசாரணையில் சேருவதற்கு முன்பு உங்கள் குழந்தை உங்கள் லேப்டாப்பை பயன்படுத்தினால், ஜூம் முடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஜூம் வீடியோ விருப்பங்களைச் சரிபார்க்கவும்.” என்று எழுதினார்.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், மீட்டிங்கில் கலந்து கொள்ள ஜூம் அழைப்புகள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. கொரோனா காலத்தில் வீடியோ கான்பரன்சிங் அழைப்புகள் முக்கியமானதாக மாறியுள்ளது. ஆனால், சாதாரண காரியங்களை செய்யும் போது அதிலிருந்து மாறுபட்டு ஏதேனும் நடந்தால், அது உலகத்தாரால் கவனிக்கப்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Zoom App

அடுத்த செய்தி