Home /News /trend /

சைக்கிளில் 100 வகையான தோசை விற்பனை... தாறுமாறு வைரலாகும் ‘தோசை மேன்’ வீடியோ!

சைக்கிளில் 100 வகையான தோசை விற்பனை... தாறுமாறு வைரலாகும் ‘தோசை மேன்’ வீடியோ!

Dosa

Dosa

Trending | கடந்த 27 ஆண்டுகளாக மும்பையின் மலாட் பகுதியில் சைக்கிளில் தோசை சுட்டு விற்று வருகிறார். ஆரம்பத்தில் ரூ.35க்கு மசாலா தோசை விற்று வந்தவர், தற்போது தனது தோசை பட்டியலில் 100க்கும் மேற்பட்ட வகைகளை சேர்த்துள்ளார்.

மும்பையில் 27 ஆண்டுகளாக தோசை விற்று வரும் நபரின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து அவருடைய அன்றாட தோசை விற்பனை வேற லெவலுக்கு அதிகரித்துள்ளது.

ஃபைவ் ஸ்டார் ஓட்டல் முதல் கையேந்தி பவன் வரை நீங்கள் பலதரப்பட்ட இடங்களில் விதவிதமான வகைகளில் தோசைகளை வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். ஆனால் ஒரே ஒரு சைக்கிளை வைத்துக் கொண்டு தோசை வியாபாரம் செய்யும் நபரை எங்கும் பார்த்திருக்க முடியாது. ஆம் அப்படியொரு நபர் தான் தற்போது சோசியல் மீடியா மூலமாக உலக உணவுப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சைக்கிளில் தோசை சுட்டு விற்கிறாரா? யார் அந்த நபர் என அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ‘தோசை மேன்’ யார் என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க.

இன்ஸ்டாகிராமில் ஒர்க்அவுட், டயட் தொடர்பான வீடியோக்கள் வைரலாவதைப் போலவே விதவிதமான உணவு வகைகள் பற்றிய வீடியோக்களுக்கும் டிமாண்ட் அதிகம். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன்களில் வியூஸ்களை அள்ளும் அளவிற்கு இன்ஸ்டாகிராமில் உணவு தொடர்பான வீடியோக்களுக்கு உணவுப்பிரியர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அப்படி உணவு சம்பந்தமான வீடியோக்களை பதிவிடும் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில், மும்பையைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரது சைக்கிள் தோசைக்கடை வீடியோ வெளியானது. ஸ்ரீனிவாஸ் தனது சைக்கிளிலேயே 100க்கும் மேற்பட்ட தோசைகளை தயாரித்து வீதி, வீதியாக விற்பனை செய்து வருகிறார்.

Also Read : உக்ரைன் பெண்மணியின் கண்ணீர் வீடியோ வைரல்!

வீடியோவில், ஸ்ரீனிவாசனின் சைக்கிளில் சிறிய கேஸ் அடுப்பு, ஒரு தவா மற்றும் தோசை மாவு வைத்திருக்கும் பாத்திரம், காய்கறிகளை வெட்டும் பலகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கட்சிதமாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஸ்ரீனிவாஸ் வெஜிடபிள் தோசையில் ஆரம்பித்து, அதன் நவீன வடிவமான பீட்சா தோசை வரை சைக்கிளில் இருக்கும் சிறிய இடத்திலேயே லாவகமாக சுட்டு எடுப்பதை காட்டுகிறது. பீட்சா தோசைக்கு மாவை ஒரு தவாவில் ஊற்றி அதில் நிறைய காய்கறிகள், செஸ்வான் சாஸ், பூண்டு சட்னி மற்றும் துருவிய சீஸ் உடன் தயார் செய்யும் காட்சிகளை பார்க்கும் போது நாவின் சுவை அரும்புகள் மொட்டு விடுவதை கட்டுப்படுத்த முடியாது.




ஸ்ரீனிவாசன் ஒரு கடின உழைப்பாளி. கடந்த 27 ஆண்டுகளாக மும்பையின் மலாட் பகுதியில் சைக்கிளில் தோசை சுட்டு விற்று வருகிறார். ஆரம்பத்தில் ரூ.35க்கு மசாலா தோசை விற்று வந்தவர், தற்போது தனது தோசை பட்டியலில் 100க்கும் மேற்பட்ட வகைகளை சேர்த்துள்ளார். இதில் சீஸ் பீட்சா தோசை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 8 மணிக்கு சைக்கிள் தோசையுடன் விற்பனைக்கு கிளம்பினால், இரவு 8 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் பிசியாக விற்பனை செய்கிறார்.

Also Read : இண்டர்வியூக்கு வருபவர்களிடம் கூகுள் எப்படி கேள்வி கேட்கும் தெரியுமா?

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானதை அடுத்து ஸ்ரீனிவாசனின் பல வாடிக்கையாளர்களும் கமெண்ட்களில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். அவருடைய தோசையின் சுவை, அதை அவர் செய்து கொடுக்கும் விதம் என பலவற்றையும் பாராட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து ஸ்ரீனிவாசனின் விற்பனையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Dosa, Mumbai, Trending

அடுத்த செய்தி