ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

முதலைய எப்புடி பிடிக்கிறேன் பாரு.. கெத்தாக சென்று கடி வாங்கிய முதியவர் - பதறவைக்கும் வீடியோ

முதலைய எப்புடி பிடிக்கிறேன் பாரு.. கெத்தாக சென்று கடி வாங்கிய முதியவர் - பதறவைக்கும் வீடியோ

முதலையிடம் கடி வாங்கிய முதியவர்

முதலையிடம் கடி வாங்கிய முதியவர்

முதியவர் ஒருவர் முதலையை அசால்ட்டாக பிடிக்கிறேன் பார் என்று முயற்சித்து கடி வாங்கிய வீடியோ Reddit என்ற சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • intern, IndiaWashingtonWashington

  சட்டையை வைத்து ஒரு முதியவர் முதலை பிடிக்க முயன்று கடிவாங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினமான முதலை மிகுந்த ஆபத்தான உயிரினங்களில் ஒன்று. வெளித் தோற்றத்தில் பார்க்கும் போது மந்தமாக காணப்பட்டாலும், அது தாக்குதல் நடத்தும் போது மின்னல் வேகத்தில் செயல்பட்டு எதிராளியை வீழ்த்தி விடும். எனவே,நீர் நிலை பகுதியில் வசிக்கும் யார் ஒருவரும் தனது வாழ்நாளில் முடிந்த வரை முதலையிடம் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்றே நினைப்பார்கள்.

  ஆனால் முதியவர் ஒருவர் முதலையை அசால்ட்டாக பிடிக்கிறேன் பார் என்று முயற்சித்து கடி வாங்கிய வீடியோ Reddit என்ற சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடக்கத்தில் வாய்கல் போன்ற இடத்தில் முதலை இருக்கிறது. அதை பிடிக்க முயற்சித்து முதியவர் ஒருவர் அதன் முகப் பகுதியில் சட்டை போன்ற ஒரு துணியை வீசி கண்களை மறைத்துவிட்டார். பின்னர், முதலைக்கு பின்னால் சென்று பிடிக்க அலேக்காக முயற்சி செய்த அந்த முதியவர் மிகுந்த பயிற்சி பெற்ற நபர் போல பில்டப் எல்லாம் கொடுத்து பதுசாக சென்றார்.

  ஆனால் முதலையை தொட்ட மாத்திரத்தில் அது திரும்பி அந்த உடையை உதறித்தள்ளி முதியவரை தரையில் வீசியடித்தது. பின்னர் வீழ்ந்து கிடத்த அந்த நபரின் கை, கால்களை மின்னல் வேகத்தில் முதலை கடிக்க முயன்றது. நல்லவேளையாக அந்த நபர் சுதாரித்துக்கொண்டு முதலையிடம் இருந்து தப்பிவிட்டார்.

  இதையும் படிங்க: நிதி நிலைமை சரியில்லை... மக்களே கார், டிவி, பிரிட்ஜ் எல்லாம் வாங்க வேண்டாம் - அமேசான் ஓனர் அறிவுரை

  இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மனிதர்கள்-விலங்குகள் மோதல் குறித்த விழிப்புணர்வு தீவிரமாக பரப்பப்படும் இந்த காலத்தில் உரிய பாதுகாப்பு இல்லாமல் முதலையை துணியை வீசி அசாலட்டாக பிடிக்க முயன்ற அந்த நபரை பலரும் கமெண்டுகளில் திட்டி வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crocodile, Viral Video