ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

9 குழந்தைகளுடன் சைக்கிளில் பயணித்த நபர் - வைரலாகும் வீடியோ.!

9 குழந்தைகளுடன் சைக்கிளில் பயணித்த நபர் - வைரலாகும் வீடியோ.!

ட்ரெண்டிங் வீடியோ

ட்ரெண்டிங் வீடியோ

Viral Video | ஒரு நபர் சைக்கிளில் 9 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்றுக்கும் மேற்பட்ட பலதார மணம் புரிந்த நபர்கள் அல்லது அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்ட நபர்கள் குறித்த செய்திகள் இணையத்தில் அவ்வபோது டிரெண்டிங் ஆவது புதிய விஷயமல்ல. டிவிட்டரில் தற்போது அதுபோன்றதொரு வீடியோ டிரெண்ட் ஆகியுள்ளது. வீடியோவில் வரும் நபர் சைக்கிளில் 9 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பயணம் செய்கிறார்.

அந்த வீடியோவை ஜெய்கி யாதவ் என்ற நபர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடியை தொட்டுள்ளது. இந்த சாதனையை எட்டுவதில், இதுபோன்ற நபர்கள் பெரிய அளவுக்கு பங்களிப்பு செய்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ எப்போது, எங்கு, எந்த சமயத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

டிவிட்டரில் கிளம்பிய பலதரப்பட்ட விவாதங்கள்

இதுகுறித்து டிவிட்டரில் கமெண்ட் செய்துள்ள பதிவாளர் ஒருவர், “நாம் பார்க்கும் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உண்மை நிலையில் இருந்து நம் கண்ணோட்டம் வேறு மாதிரியாக இருக்கலாம். முதலில், இந்தக் குழந்தைகள் அனைவருமே அவருடைய குழந்தைகளாக இருக்க வாய்ப்பில்லை. அடுத்ததாக, இவர்களுக்கு பொதுப் போக்குவரத்து வசதி கிடைத்திருக்காது. வீடியோவை பாருங்கள், அது ஏதோ பின்தங்கிய கிராமப்புற பகுதியாக தெரிகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரித்தேஷ் கத்தாரி என்ற நபர் வெளியிட்டுள்ள கமெண்டில், “இதுபோன்ற நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அதிகாரத்தில் இருப்பவர்களுடைய கடமையாகும்’’ என்று தெரிவித்துள்ளார். வருண் பத் என்பவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “உலகின் கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து வசதி இப்படித்தான் இருக்கிறது. ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே நிறைய இடைவெளி இருப்பதையே இந்த வீடியோ உணர்த்துகிறது’’ என்று கூறியுள்ளார்.

Also Read : நான்கு கண்டங்கள் கடந்து, 30,000 கி.மீ பயணித்து உணவு டெலிவரி செய்த பெண்... சுவாரஸ்ய சம்பவம்

விமர்சனத்திற்குள்ளான ஆனந்த் மஹிந்திரா

டிவிட்டரில் இதேபோன்ற வைரல் புகைப்படம் ஒன்றை அண்மையில் பகிர்ந்து கொண்ட மஹிந்திரா மோட்டார்ஸ் நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அவர் பகிர்ந்து கொண்ட பதிவில், எக்ஸ்எல் வாகனத்தில் பயணிக்கும் நபர் ஒருவர், ஏராளமான சேர்களை பின்பக்கத்தில் ஏற்றி வைத்துக் கொண்டு, முன்பக்கம் அவரது மனைவியையும் உட்கார வைத்துக் கொண்டு செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது.

அந்தப் பதிவில், “இதற்காகத்தான் உலகில் அதிகப்படியான இரு சக்கர வாகனங்களை இந்தியா தயாரிக்கிறது. ஒரு சக்கரத்தின் ஒவ்வொரு இன்ச் அளவுக்கும், எவ்வளவு அதிகமான எடையை ஏற்றலாம் என்பது நமக்கு மட்டுமே தெரியும். நாம் எல்லோரும் இப்படித்தான். தேவைகள் தான் புதிய கண்டுபிடிப்பை உருவாக்குகின்றன’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read : உயரமான மலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி படுத்துக் கொண்ட நபர் - வைரலாகும் வீடியோ.!

ஆனால், இந்த இடத்தில் தேவை என்பது வறுமையின் காரணமாக உருவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், அவரது பதிவுக்கு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Viral Video