ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நீருக்கடியில் சுறா மீனோடு டூயட் பாடி நடனமாடிய நபர்... இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.!

நீருக்கடியில் சுறா மீனோடு டூயட் பாடி நடனமாடிய நபர்... இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.!

சுறா

சுறா

Shark Viral Video | நீருக்கடியில் மனிதர் ஒருவர் சுறா மீனை கட்டியணைத்தபடி ஒரு கதாநாயகியுடன், கதாநாயகன் டூயட் பாடுவது போன்ற அதே நடன அசைவுகளை சுறா மீனோடு ஆடி கொண்டிருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுறா மீன் என்றதும் நம் அனைவருக்கும் அதன் கூரான பற்களும், வேட்டையாடும் குணமும் தான் ஞாபகத்திற்கு வரும். அதையும் தாண்டி “ஜாஸ்” போன்ற ஹாலிவுட் படங்களின் வரவும், அது எப்படி எல்லாம் வேட்டையாடிக் கொல்லும் என்ற காட்சிகளும் மனத்திரையில் விரியும். ஆனால் உலகம் வித்தியாசமானது, மனிதர்கள் வித்தியாசமானவர்கள். முக்கியமாக இணையத்தில் இந்த வித்தியாசமான மனிதர்களை பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வைரலாகிவிடும். அவ்வாறு வைரலாகும் சில வீடியோக்கள் நம்பவே முடியாதபடியும், உண்மைக்கு புறம்பானதாகவும் தோன்றும். யாராவது அதை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் அந்த வீடியோக்கள் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் ட்விட்டர் வலைத்தளத்தில் பதியப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதைப் பார்த்த இணையவாசிகள் பலர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் நீருக்கடியில் மனிதர் ஒருவர் சுறா மீனை கட்டியணைத்தபடி ஒரு கதாநாயகியுடன், கதாநாயகன் டூயட் பாடுவது போன்ற அதே நடன அசைவுகளை சுறா மீனோடு செய்து கொண்டிருக்கிறார். இசைக்கு ஏற்றபடி அவர் ஆடுவதும், அதற்கு அந்த சுறாமீனும் ஒன்றும் செய்யாமல் அவருக்கு இசைந்து கொடுப்பதும், பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும், அழகாகவும் அதே சமயத்தில் நம்ப முடியாதபடியும் இருக்கிறது.

இந்த வீடியோ வெளியிடப்பட்டு சில மணி நேரங்களிலேயே அதிக அளவில் வைரல் ஆகிவிட்டது. சுறா மீனுடன் அவர் நடனமாடிக் கொண்டிருக்க, அதனை வெளியில் இருந்து பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த சுறா மீனும் அவரது காதலியை போலவே மிக அமைதியாக அவருடன் சேர்ந்து அவரது நடனத்திற்கு இசைந்து கொடுத்து, அதுவும் நடனம் ஆடுவதைப் போலவே இருக்கிறது.

Also Read : ”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

இந்த வீடியோ பகிரப்பட்டவுடன் அதன் கமெண்ட்ஸ் செக்ஷனில் ட்விட்டர் வாசி ஒருவர், ஃப்ளோரிடாவை சேர்ந்த அந்த மனிதனின் மற்றொரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் அம்மனிதர் ஏற்கனவே ஒரு அலிகேட்டர் முதலையை கட்டியணைத்து நடமாடி கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை பதிவிட்டு “மீண்டும் அசத்தும் ஃப்ளோரிடா மனிதர்” என்ற வாசகத்தையும் இணைத்துள்ளார்.

செப்டம்பர் 18 ஆம் தேதி பதியப்பட்ட இந்த வீடியோவானது, தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வருகிறது. மேலும் இவரது இந்த தைரியமான செயலை பாராட்டியும் பலர் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read : வனத்திற்குள் மறைந்திருக்கும் கொரில்லா எங்கே.? 12 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் மேதாவி தான்.!

“வாவ், இந்த மனிதர் நீர்வாழ் உயிரினங்களுடன் நடனம் ஆடுவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது” என ஒருவர் பதிவிட்டுள்ளார். “மிக அற்புதமாக இருக்கிறது” என்று மற்றொருவரும். “என்ன? என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. இதை போன்ற ஒன்றை இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை” என்று மற்றொருவரும் பதிவிட்டுள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Trending, Viral Video, Whale shark