நாம் கடக்கும் ஒவ்வொரு நாளிலும் ராணுவ வீரர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. தற்போது ஒரு சிறுமி ராணுவவீரர் ஒருவரின் பாதங்களைத் தொடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஒரு இனிமையான தருணத்தின் அடையாளம் என்றே சொல்ல வேண்டும். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலானதோடு, இதை 10 லட்சத்திற்க்கும் அதிகமானவர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர் மற்றும் இந்த வீடியோவை பலர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தும் வருகின்றனர்.
இந்த வீடியோவை பி.சி.மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மில் தேசப்பற்று உணர்வை தூண்டும் வகையில் இத்தகைய வீடியோக்கள் அமைகின்றன என்றும் பலர் கூறியுள்ளனர். இதுபோன்ற பதிவுகள் அன்றாடம் நாம் கடந்து செல்லும் நாட்களை நிச்சயம் மகிழ்ச்சியான நாளாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை….
உங்கள் இன்றைய தினத்தை உற்சாகமாக தொடங்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.
தற்போது சோஷியல் மீடியாவை இன்பத்தில் திலைக்க வைத்த இந்த வீடியோவில், ஒரு சிறுமி மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் சிலரை நோக்கி நடந்து செல்வதை நம்மால் காண முடிகிறது. அவர்களில் ஒருவர் அந்த குழந்தையை கொஞ்சுவதற்காக ,அக்குழந்தையின் கன்னங்களை கிள்ள குனிந்தார், ஆனால் அந்த குழந்தை அவரின் இதயப்பூர்வமான ஆசியை பெறும் வகையில் அந்த ராணுவ வீரரின் கால்களைத் தொட்டு வணங்கினாள். இந்த காட்சி அனைவரையும் நெகிழ செய்தது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட பி.சி.மோகன் தேசபக்தியுள்ள இளம் மனங்களை வளர்ப்பது இந்த தேசத்திற்கு ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டிய முக்கியமான கடமை என்றும் அந்த வீடியோவின் தலைப்பில் கூறியிருந்தார்.
Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ
இந்த வீடியோ தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலானது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.பொதுவாக குழந்தைகள் என்றாலே அழகுதான். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். குறுநடை போட்டு நடந்துவரும் குழந்தையின் சைகைகளை ரசித்ததோடு அந்த குழந்தையின் தேசப்பற்றையும் பலர் பாராட்டியுள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்க்கும்போது வாத்து ஒன்று நடந்து வருவதை போல் உள்ளது என்றும் ஒரு யூசர் எழுதியுள்ளார்.
மற்றொரு யூசர் எனது கண்கள் மகிழ்ச்சியான கண்ணீரால் நிரம்ப செய்துவிட்டது இந்த வீடியோ என்றும், ராணுவவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் பாதத்தை தொட்ட இந்த சிறுமியை கடவுள் ஆசீர்வதிப்பார் என்றும் கூறியுள்ளார்.
Also Read : மலிவான மீன்களை சாப்பிட முடியாது... அடம்பிடிக்கும் பென்குயின்களின்
தற்போது சோஷியல் மீடியாவில் பல வீடியோக்கள் வைரலானாலும், இது போன்ற தேசப்பற்றை வளர்க்கும் வீடியோக்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இது ராணுவ வீரர்கள் மேல் நாம் செலுத்தும் மரியாதையாகவே கருதப்படுகிறது. இந்த வீடியோ நம்மில் பலரிடையே தேசப்பற்றை தூண்டும் ஒருநிகழ்வாக அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.