சிங்கம் கம்பீரமா காட்டுல நடந்து பார்த்திருப்பீங்க, வேட்டையாடி பார்த்திருப்பீங்க, ஏன் ஆண் சிங்கம் பெண் சிங்கத்துகிட்ட அடி வாங்குறத கூட பார்த்திருப்பீங்க. ஆனால் ஒரு ஆண் சிங்கம் உசுர காப்பத்திக்கிறதுக்காக மரம் ஏறி பார்த்திருக்கீங்களா... இல்லைன்னா இப்ப பார்ப்பீங்க.
சிங்கங்கள் எப்போதுமே காட்டின் ராஜா என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றைக் கண்டு அனைத்து விலங்குகளும் பயப்படுகின்றன என்பதால் தான். ஆனால் பொதுவாக சிங்கம் சோம்பேறி மிருகம் என்றும் கூறப்படுகிறது. சமவெளி பகுதிகளில் தனது கூட்டத்துடன் தான் சிங்கம் வசிக்கும், அதில் பல பெண் மற்றும் சிங்க குட்டிகள் அடங்கும். ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடாது, பெண் சிங்கங்கள் மட்டுமே வேட்டைக்குச் செல்லும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. சாதாரணமாக ஒரு ஆண் சிங்கம் 9 அடி நீளம் வரை வளரும் .வால் மட்டும் 3 அடி இருக்கும் .உயரம் 3.5 அடி இருக்கும்.எடை 550 பவுண்ட் இருக்கும். சிங்கம் 12 அடி உயரத்திலும் 40 அடி பள்ளத்தில் தாவக்கூடியது .
டிஸ்கவரி முதல் சோசியல் மீடியாக்கள் வரை சிங்கங்கள் பற்றிய வீடியோ என்றாலே அது காட்டில் கம்பீரமாக உலவுவது அல்லது வேட்டையாடுவது தொடர்பான வீடியோவாக தான் பார்க்க முடியும். ஆனால் சிங்கம் தனது உயிரைக் காப்பாற்ற மரத்தை பிடித்துக் கொண்டு தொங்குவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இன்று அப்படிப்பட்ட ஒரு வீடியோவைத் தான் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.
இந்த வீடியோவில் மிகப்பெரிய காட்டெருமை கூட்டத்தை கண்டு அஞ்சிய ஆண் சிங்கம் ஒன்று, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மரத்தில் ஏறி தொங்குகிறது. ஆனால் காட்டெருமை கூட்டமோ ‘எவ்வளவு தொங்கினாலும், நீ கீழே வந்து தானே ஆகனும்’ என்பது போல் காத்திருக்கின்றன.
View this post on Instagram
சிங்கம் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மரத்தின் மீதேறி தொங்குவது போன்ற வீடியோக்களை எல்லாம் அரிதிலும், அரிதானவை. எனவே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ‘வைல்ட் அனிமல் ஷார்ட்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர் நீங்கள் காட்டின் ராஜா இல்லையா?, உங்கள் அரியணை பறிபோய்விட்டதா? என கலாய்த்துள்ளார். இன்னொருவரோ ‘ஆமா, சிங்கத்துக்கு தான் தப்பிச்சி போக வழி இருக்கே அப்புறம் ஏன் மரத்தை பிடித்துக் கொண்டு தொங்குது?’ என கேள்வி எழுப்பியுள்ளார். பலரும் காட்டிற்கே ராஜா என அழைக்கப்படும் சிங்கத்திற்கே இந்த கதியா? என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read : சிங்கத்திடம் இரையை பங்கு கேட்ட குட்டி கழுதைப்புலி! சிங்கம் செய்த செயல்...வைரல் வீடியோ
பொதுவாக சிங்கங்கள் கூட்டமாக சேர்ந்து தான் காட்டெருமைகளை வேட்டையாடும் ஏனென்றால் அதன் பலம் அப்படி. சிங்கிள் காட்டெருமை கடைசி வரை 7 சிங்கங்களைக் கூட சமாளிக்க கூடிய திறமை வாய்ந்தது. இதில் தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியுடன் போராடும். அப்படிப்பட்ட காட்டெருமையின் பெரிய கூட்டத்தையே பார்த்து தான் சிங்கம் பயந்து போய் பின்வாங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lion, Trending, Viral Video