ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆஸ்திரேலியாவில் Bar-க்குள் நுழைந்த கங்காரு - பின்னர் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் Bar-க்குள் நுழைந்த கங்காரு - பின்னர் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் Bar-க்குள் நுழைந்த கங்காரு

ஆஸ்திரேலியாவில் Bar-க்குள் நுழைந்த கங்காரு

Bar-ன் ஒரு வாசல் வழியே நுழைந்த கங்காரு நேராக நடந்து சென்று மறு வழியாக அமைதியாக வெளியே செல்வதை வீடியோ காட்டுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் தங்களிடமிருந்து பறித்த மற்றும் ஆக்கிரமித்த இடங்களில் தான் விலங்குகள் உலா வருகின்றனவே தவிர, பெரும்பாலும் மனிதர்களின் வாழ்விடங்களுக்குள் விலங்குகள் நுழைவது அரிதானது.

சில சமயங்களில் அவை மனித வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மாறுகின்றன. சில நேரங்களில் மனித மோதல்களுக்கிடையே சிக்கித் தவிக்கின்றன. ஆஸ்திரேலியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவலை தற்போது பார்க்கலாம்.

கங்காருக்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவில் வாழும் விலங்கு வகை ஆகும். குறிப்பாக சொல்வதென்றால் கங்காருக்கள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. எனவே அந்நாட்டில் காணப்படும் விலங்குகளில் கங்காருக்கள் பொதுவானவை. எனவே நாய், பூனை போல அந்நாட்டு வீதிகளில் கங்காருக்கள் பொது இடங்களில் உலவுவதை சாதாரணமாக பார்க்க முடியும். கடந்த 2013-ல் 53.2 மில்லியனாக இருந்து கங்காருக்களின் எண்ணிக்கை கடந்த 2019-ல் 42.8 மில்லியனாகி விட்டதாக ஆஸ்திரேலிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கங்காரு ஒன்று சர்வ சாதாரணமாக ஒரு பாருக்குள் நுழைந்தது நடமாடும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. வைரலாகி வரும் வீடியோவில், கங்காரு ஒன்று பாருக்குள் சாதாரணமாக நடந்து செல்வதை காண முடிகிறது. பெரிய வாலுடன் கூடிய கங்காரு ஒன்று குறிப்பிட்ட பாருக்குள் நுழைவதில் இருந்து வீடியோ ஸ்டார்ட் ஆகிறது.

உள்ளே நுழையும் கங்காரு இடது புறம் சென்று டேபிள், சேர் மற்றும் மனிதர்கள் நிற்பதற்கு இடையில் நுழைந்து நடந்து செல்கிறது. கங்காருவை பாருக்குள் பார்த்த அங்கிருக்கும் சிலர் வியப்படையாமல் அது நடந்து செல்வதற்கு வழி விட்டு விலகுகிறார்கள். அங்கிருக்கும் மக்கள் யாரையும் அந்த கங்காரு தொந்தரவு செய்யவில்லை, அதே போல மக்களும் அந்த கங்காருவை விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை.


Bar-ன் ஒரு வாசல் வழியே நுழைந்த கங்காரு நேராக நடந்து சென்று மறு வழியாக அமைதியாக வெளியே செல்வதை வீடியோ காட்டுகிறது. இதை பார்க்கும் நமக்கு மிகவும் வியப்பாக இருந்தாலும், அந்நாட்டு மக்களுக்கு வழக்கமான ஒன்று என்பதால் அதற்கு வழி விட்டு அமைதியாக அவரவர் வேலையே கவனிக்கிறார்கள். எனினும் ஆஸ்திரேலியாவை தவிர பிற நாட்டு நெட்டிசன்கள் "எதிர்பாராத விசிட்டரின்" இந்த வீடியோவை பார்த்து விட்டு சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.

Also read... ஒரே சைக்கிளை ஓட்டும் 2 சிறுவர்களின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ட்வீட் வைரல்

Unexpected visitor என்ற கேப்ஷனில் ஆஸ்திரேலியன். அனிமல்ஸ் என்ற இன்ஸ்டா பேஜில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடியோவிற்கு பல நெட்டிசன்கள் awesome என்று கமெண்ட்ஸ் செய்து உள்ளனர். ஒரு யூஸர் கங்காருவை பார்த்து விட்டு யாரும் எந்த ரியாக்ஷ்னும் காட்டாமல் இருப்பதை பார்த்தால்அது அந்த பாருக்கு ரெகுலர் கஸ்டமர் போல தெரிகிறது என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் இது எதிர்பாராமல் நடந்ததாக தெரியவில்லை, ஏனென்றால் எல்லோரும் அதை ஒரு நபரைப் போல கடந்து செல்ல அனுமதிக்கிறார்களே என்று வியப்புடன் கூறி உள்ளார். இந்த வைரல் வீடியோ 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கலையும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kangaroo