Home /News /trend /

கோக் மற்றும் ஓரியோவில் ஆம்லெட்டா.? வைரலாகும் புதிய வீடியோ.!

கோக் மற்றும் ஓரியோவில் ஆம்லெட்டா.? வைரலாகும் புதிய வீடியோ.!

Trending

Trending

Trending Video | ஒரு இந்திய உணவக விற்பனையாளர், கோக் மற்றும் ஓரியோவை சேர்த்து ஆம்லேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மக்கள் தங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும் ஒரு பொருளாக முட்டை உள்ளது. முட்டையில் செய்யப்படும் உணவுகளை பொதுவாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆம்ப்லேட், ஆப்பாயில், கலக்கி என இந்த முட்டையை பல வகைகளில் நாம் சமைக்கிறோம். தற்போது ஒரு இந்திய உணவக விற்பனையாளர், கோக் மற்றும் ஓரியோவை சேர்த்து ஆம்லேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அந்த கடை விற்பனையாளர் கடாயில் சில துளிகள் எண்ணெய்யை சூடாக்குவதுடன் அந்த கடாயில் மேலும் ஒரு சிறிய கோக் பாட்டிலை முழுவதுமாக ஊற்றினார். அதன் பிறகு கடாயில் அவர் ஓரியோ பிஸ்கட்களின் ஒரு சிறிய பேக்கெட்டை எடுத்து அதிலுள்ள அனைத்து பிஸ்கட்களையும் நசுக்கி போட்டு, ஆம்லெட்டுக்கு சுவையான மற்றும் விசித்திரமான ஒரு சார்ஸைத் தயார் செய்தார். இது பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் வினோதமாக தோன்றலாம்

ஓரியோவில் நாம் நிறைய வகையான டிஷ்களை பார்த்திருக்கிறோம். ஓரியோ மில்க் ஷேக், ஓரியோ கேக், என லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகும் ஆனால் இந்த டிஷ் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருப்பது ஆச்சரியமானதாகவும் உள்ளது.சார்ஸ் செய்து முடித்தபின் அந்த விற்பனையாளர் ஒரு கிளாஸில் நன்கு கலக்கிய முட்டையை ஏற்கனவே ரெடி செய்து வைத்த அந்த சார்ஸில் சேர்க்கிறார். இந்த உணவு சாதாரண ஆம்லெட்டைப் போல திருப்பி போட முடியாத அளவுக்கு ஈரமானதாக இருந்தாலும் அதை அவர் கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் அடுத்த வேலையை செய்ய ஆரம்பிக்கிறார்.

Also Read : இந்த ஃபிரெஞ்ச் ஃபிரைஸின் விலையை கேட்டால் அதை சாப்பிடும் ஆசையே உங்களுக்கு வராது

உணவுக்கான ரொட்டி தயாரிப்பதைத் தொடங்கிய அவர், கிட்டத்தட்ட 4-5 பழுப்பு ரொட்டி துண்டுகளை வெட்டி, பின்னர் அவற்றை வாணலியல் ரெடி செய்த கலவையுடன் சேர்த்து கலக்கினார்.அந்த ஆம்லெட்டை புரட்டுவது மிக கடினமாக இருந்த போதிலும், அவர் முயற்சியை கைவிடவில்லை, அதிலுள்ள உணவுகளில் சில துளிகள் கீழே விழுந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவர் கவனம் முழுவதையும் அந்த டிஷ் தயாரிப்பதில் மட்டுமே செலுத்தினார்.

Also Read : போட்டிக்கு நீங்களும் வரலாம்..! 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு

பின்னர் அவர் சமைத்த ரொட்டியின் மீது சிறிதளவு வெங்காயம், கொத்தமல்லி மற்றும் நொறுக்கப்பட்ட ஓரியோ பிஸ்கட்கள் சேர்த்து பரிமாறினார்.

இந்த வீடியோவை பார்த்தவர்களில் சிலர் அசுரத்தனம் என்று கூறினாலும், ஒருவர் அந்த வீடியோவை கேலி செய்யும் வகையில் நீங்கள் சமையல் செய்வதை விட்டு விட்டு அந்த பாத்திரத்தை சாக்கடையில் வீசுவது நல்லது எனவும், மற்றொருவர் ஆம்லெட் புரட்டுவதை பார்த்து தான் வியப்படைந்ததாகவும் மேலும் உங்களுக்கு தேவைப்பட்டால் fevicol பயன்படுத்துங்களேன் ஆம்லெட் அடுத்த முறை கடாயில் ஒட்டிக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.ஆம்லெட்டிற்கான செய்முறை காலம் காலமாக ஒன்றுதான், அது ஒவ்வொரு குடும்பங்களிலும், உணவகங்களிலும் வேறுபடலாம் . இருப்பினும், உணவை தயாரிப்பதற்கான அடிப்படை பொருள்கள் பொதுவாக முட்டை, எண்ணெய், வெண்ணெய், உப்பு மற்றும் மிளகு இவை தான், நாம் விரும்பினால் காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம்.

இந்த புதிய கோக், ஓரியோ ஆம்லெட் சோஷியல் மீடியாவில் வைரலானாலும் இது பெரும்பாலான மக்களிடையே தேவையற்ற ஒரு விஷயமாகவே பேசப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Food, Trending

அடுத்த செய்தி