Home /News /trend /

தனக்கான நிரந்தர வீட்டை அடைய 5 நாட்கள் விமான பயணம் செய்த இந்திய நாய்!

தனக்கான நிரந்தர வீட்டை அடைய 5 நாட்கள் விமான பயணம் செய்த இந்திய நாய்!

Indy Dog

Indy Dog

Indy Dog | "நாய்கள் - நன்றி மிக்கது" என்பதற்கு பதிலாக, "நாய்கள் - நட்பு மிக்கது; நண்பர்களுக்கு சமமானது" என்று கூறினால் "சந்தேகமே வேண்டாம்... கண்டிப்பாக!" என்கிற பதிலே பெரும்பான்மை மிக்கதாய் இருக்கும்.

நாய்கள் விசுவாசம் மிக்கவைகள், பாசமுள்ள ஜீவன்கள், நம்மையும் நம் அன்புக்கு உரியோரையும் பாதுகாப்பவைகள், நம் குடும்பத்தில் உள்ள நபர்களை போன்றவைகள் - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனவே தான் ஆதிகால மனிதர்கள் முதல் இந்த அதிநவீன யுகம் வரையலாக நாய்கள் - செல்லப்பிராணிகள் பட்டியலின் முதல் இடத்தில் உள்ளன.

நாய்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன, நாய்கள் இல்லாத ஒரு உலகத்தை, ஒரு வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. நாய்களுக்காக மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்; நாய்களும் தான். இதற்கு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த ஒரு நிகழ்வை பற்றியே இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

ஒரு நாய் தன் மறுவாழ்விற்காக மற்றும் மீதமுள்ள வாழ்நாளுக்கான நிரந்தரமான வீட்டை சென்றடைய இந்தியாவிலிருந்து விமானம் வழியாக கனடா வரை சென்றுள்ளது!

ஹவிலா ஹெகர் விலே மற்றும் ஸ்டீபன் ஆகியோர் "மீட்கப்பட்ட" ஒரு இந்திய நாயை தத்தெடுத்தனர், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள இவர்களின் கைகளுக்குள் சென்றடைவதற்காக இந்த பெண் நாய் கண்டங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொண்டது. மேலும் இந்த நாய்க்கு 'இண்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது.ஹவிலா - ஸ்டீபன் தம்பதியினர், தங்கள் குடும்பத்தில் புதிதாக இணையும் 'இண்டி'யை சந்திக்கும் - மனதை உருக்கும் - ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ள இந்த வீடியோ தான் 'டாக் லவ்வர்களுக்கு' மத்தியில் தற்போது வைரல்! இந்த ஜோடி குறிப்பிட்ட வீடியோவில், 'இண்டி'யை முதல் முதலாக நேரில் சந்திக்க காத்திருக்கும் தருணம் எப்படி இருந்தது? இண்டி உடனான அவர்களின் முதல் சந்திப்பு எப்படி இருந்தது? போன்றவைகளை ஆவணப்படுத்தி உள்ளனர்.

Also Read : டிக் டாக் வீடியோ மூலம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய நபர்..

இந்த வைரல் வீடியோவுக்கு “முதலில் அவள் (இண்டி) கொஞ்சம் வெட்கப்பட்டாள், ஆனாலும் எங்களோடு பிணைய அவள் அதிக நேரம் எடுக்கவில்லை. வெல்கம் ஹோம் இண்டி,” என்கிற கேப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது
அடுத்த பதிவில், "இந்த - ஜென்டில், ஸ்வீட் மற்றும் குஃபீ - இந்திய நாய் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன் ஐந்து நாட்கள் பயணம் செய்ததாக ஹவிலா குறிப்பிட்டுள்ளார். மேலும் இண்டி, தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில், ஒரு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்ததையும் அவர் வெளிப்படுத்தினார்.
"இண்டி ஒரு சிறிய நாய்க்குட்டியாக இருந்தபோது அவளை ஒரு வாகனம் மோதியதில் அவளின் கால் மற்றும் வால் பகுதி மிகவும் மோசமாக காயமடைந்தது. இன்டியின் வால் ஒருபோதும் குணமடையவில்லை மற்றும் எனவே அதை துண்டிக்க வேண்டியிருந்தது, எனவே தான் இப்போது அவளுக்கு மிகவும் அழகான, குட்டையான வால் உள்ளது" என்று ஹவிலா குறிப்பிட்ட பதிவின் கேப்ஷனில் எழுதி உள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Dog, Trending

அடுத்த செய்தி