கடலில் வாழும் இரண்டு நம்ப முடியாத உயிரினங்கள் ஒரு அரிய தருணத்தை நம் கண் முன் கொண்டு வந்துள்ள மேஜிக் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடல் எப்போதுமே பல அழகான மற்றும் அற்புதமான விஷயங்களை தன்னுள் கொண்ட இடமாகும். வேட்டையாடும் கொடூரமான சுறாக்களில் ஆரம்பித்து கடற்பயணிகளின் நண்பனான டால்பின்கள் வரை கணக்கிடலங்காத எண்ணிக்கையில் அற்புத உயிரினங்கள் கடலில் வாழ்கின்றனர். இதில் டால்பின்கள் மற்றும் ஹம்பேக் திமிங்கலம் ஆகியவற்றின் ரசிக்க கூடிய, குறும்புத்தனமான வீடியோக்கள் ஏராளமாக இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் ஹம்பேக் திமிங்கலத்துடன், டால்பின்கள் ஒன்றாக உலவுவது போன்ற வீடியோக்களை பார்த்திருப்பது அரிது. இந்நிலையில் ஹம்பேக் திமிங்கலத்துடன் சேர்ந்து, டால்பின்கள் கடலுக்கு அடியில் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், சோசியல் மீடியாவை கலக்கி வரும் அந்த கண்கொள்ளாத காட்சிகள் அடங்கிய வீடியோ பற்றி தான் தற்போது பார்க்கப்போகிறோம்.
ஹவாய் புகைப்பட கலைஞரான ஜேக்கப் வாண்டர்வெல்டே என்பவர் ஓஹுவின் வடக்கு கடற்கரை பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு சில காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கடலுக்கு அடியில் அவர் கண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. ஆம், ஹம்பேக் திமிங்கலத்துடன், டால்பின் ஒன்று ஜாலியாக சுற்றிச் சுழன்று நீந்திச் செல்லும் காட்சி தான் அது. இது எப்போதும் பார்ப்பது போன்ற திமிங்கலம் அல்லது டால்பின்களின் வழக்கமான கடல் பயணம் கிடையாது என்பதை உணர்ந்த ஜேக்கப், உடனடியாக படம் பிடித்ததோடு அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
ஜேக்கப் வாண்டர்வெல்டே என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், கடலில் மிகப்பெரிய உயிரினமான ஹம்பேக் திமிங்கலம், டால்பின் உடன் சுற்றி சுழலும் காட்சிகள் பதிவாகியுள்ளது. நீல நிற கடலில் நம்பவே முடியாத இரு உயிரினங்கள் ஒன்றாக இணைந்து டான்ஸ் ஆடுவது போல் நீந்தி செல்லும் அரிய தருணத்தை பார்க்கும் வாய்ப்பு எல்லா நாட்களிலும் கிடைக்க கூடியது அல்ல என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பாசம், காதல், நட்பு போன்ற உணர்வுகள் உள்ளது என்பதை பல ஆய்வுகள் மூலமாக விஞ்ஞானிகள் நிரூபித்தாலும், இதுபோன்ற உயிரேட்டமான காட்சிகள் தான் அவற்றை நாம் புரிந்துகொள்ள வைக்கிறது. இதனை நெட்டிசன்கள் டால்பின், திமிங்கலத்தின் நடனம் என வர்ணித்து வருகின்றனர்.
Also Read : மேஜிக் செய்து குரங்கை அசரடித்த இளைஞர் - வீடியோ
சில சமயங்களில் ட்ரோன் கேமராக்கள் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களை படமாக்குவது உண்டு. Rann of Kutch என்ற பகுதியில் ஃபிளமிங்கோ பறவை கூடு கட்டுவது, புளோரிடாவில் ஒருமுறை தன்னைச் சுற்றி பறந்த ட்ரோன் கேமராவை பறவை என நினைத்து அலிகேட்டர் முதலை வாயால் கவ்வி பிடித்து சாப்பிட முயன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.