Home » News » Trend

பல மடங்கு பலம்வாய்ந்த முதலை வாயிலிருந்து தப்பிய ஆமை - வியக்கவைக்கும் வீடியோ

Viral Video | ஆமையை கவ்வியபடியே தனது வாயின் உள்ளே நுழைக்க நினைக்கும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

பல மடங்கு பலம்வாய்ந்த முதலை வாயிலிருந்து தப்பிய ஆமை - வியக்கவைக்கும் வீடியோ
வீடியோ காட்சிகள்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 4:26 PM IST
  • Share this:
பசியிலிருக்கும் முதலையின் வாயில் சிக்கி மரணத்தின் உச்சிக்கே சென்று தப்பிய ஆமையின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

காடுகளில் எண்ணற்ற எதிர்பாராத விஷயங்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகள் மனிதர்களால் கவனிக்கப்படாமல் போகின்றன. அதில் எதிர்பாராத விதமாக சில சமயங்களில் ஒரு சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் தள்ளிவிடும். அதுபோல் தற்போது விலங்குகளிடையே நடந்த ஒரு வித்தியாசமான காட்சியை படம்பிடித்த ஒரு நபர் அந்த வீடியோவை அவரது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தனித்துவமான வீடியோவில், ஒரு முதலை தனது பசியை போக்க ஒரு ஆமையை தனக்கு இரையாக்க முயற்சிக்கிறது. ஆமையை கவ்வியபடியே தனது வாயின் உள்ளே நுழைக்க நினைக்கும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. ஆனால் முதலைக்கு தெரியவில்லை ஆமையின் கடினமான ஓட்டை எளிதில் உடைத்து விட முடியாது என்று, ஆகவே முதலில் வாயிலிருந்து அதிர்ஷடவசமாக ஆமை தப்பிச் சென்று விடுகிறது. இந்த வீடியோ, தற்போது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.


பெரும்பாலும் முதலைகளால் தங்கள் இரையை முழுவதுமாக விழுங்கவும், மெல்லவும் முடிகின்றது. அவை வழக்கமாக சிங்கம் போன்று சதையை கிழித்தோ அல்லது பாலூட்டிகளை போல அடித்தோ உண்ணாது. ஆனால் ஆமையை முழுவதுமாக விழுங்கி சாப்பிடாமல் என எண்ணிய முதலைக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஆமை அதன் ஓட்டால் பாதுகாக்கப்படுகிறது. ஆகையால் தன்னை வேட்டையாடும் விலங்குகளின் வாயிலிருந்து எளிதாக நழுவுகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஆமை முதல்முறை நழுவிய பின்னரும் முதலை மீண்டும் முயற்சிக்கிறது. ஆனால் அதுவும் பலனளிக்கவில்லாததால் ஆமை தப்பித்து மெதுவாக நகர்ந்து செல்கின்றது. முதலையும் அதை பின்பற்ற முயற்சிக்கவில்லை. கடைசியில் வாய்க்கு எட்டியதை உண்ண முடியாமல் வெறும் வயிற்றுடன் படுத்துக் கொள்கிறது அந்த முதலை.இந்த வீடியோ இதுவரை 32,000 பார்வைகளை பெற்றுள்ளது. இந்திய வருவாய் சேவையில் பணிபுரியும் நவீத் ட்ரம்பூ என்பவர் இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். அதில் "இந்த உலகில் நீங்கள் வாழ விரும்பினால் அடர்த்தியான சருமமும், வலிமையான மனமும் அவசியம். நீங்கள் அனுமதிக்காவிட்டால் உங்களை யாரும் வீழ்த்த முடியாது" என்று எழுதியுள்ளார்.இருப்பினும் அந்த ஒரிஜினல் வீடியோவானது அமெரிக்காவின் தென் கரோலினாவின் ஹில்டன் ஹெட் தீவில் இருந்து வந்தது. இந்த வீடியோ முதலில் யூடியூப்பில் பகிரப்பட்டது. மேலும் இது ஒருவர் வீட்டின் பின்புறத்தில் நடந்த சம்பவம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading