ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மீட்புக் குழுவால் வெளியிடப்பட்ட ஹிமாலய கருப்பு கரடி - வைரலாகும் வீடியோ!

மீட்புக் குழுவால் வெளியிடப்பட்ட ஹிமாலய கருப்பு கரடி - வைரலாகும் வீடியோ!

ஹிமாலய கருப்பு கரடி

ஹிமாலய கருப்பு கரடி

நடந்த முழு சம்பவத்தையும் அந்த மீட்பு குழுவில் இருந்த இந்திய வன துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

காட்டு விலங்குகள் மனிதர்களின் வாழிடங்களில் அவ்வப்போது வந்து போவது பற்றிய செய்திகளை நாம் பார்த்திருப்போம். குறிப்பாக சிறுத்தை, யானை, புலி, நரி, ஓநாய், கரடி போன்ற விலங்குகள் காட்டை ஒட்டிய கிராமங்களுக்கு அடிக்கடி வந்து செல்லும். விலங்குகள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்விடத்தை மறித்து மனிதர்கள் வாழிடங்களை அமைத்ததால் வந்த வினை தான் இது. காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதை நம்மால் பெரிய அளவில் தடுக்க முடியாது என்றே சொல்லலாம்.

ஆனால் அவற்றை மீட்பு குழுவால் காப்பாற்றி மீண்டும் காட்டுக்குள்ளோ அல்லது வனவிலங்கு காப்பகத்துக்குளோ கொண்டு செல்வர். இப்படி பிடிபட கூடிய காட்டு விலங்குகள் சில காலங்களுக்கு தனது சுதந்திரத்தை இழந்தது போன்று உணர தொடங்கும். அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று தான் ஹிமாலய பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.

காட்டு விலங்குகளில் ஒன்றாக ஹிமாலய கருப்பு கரடி அங்கிருந்த கிராமத்திற்குள் அலைந்து கொண்டிருந்ததை மக்கள் பார்த்துள்ளனர். உடனே இதை பற்றி மீட்டு குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். கரடியை பிடிக்க வந்த மீட்பு குழுவினர் சில மணி போராட்டத்திற்கு பிறகு ஹிமாலய கருப்பு கரடியை பிடித்து கூண்டில் அடைத்துள்ளனர்.

பிறகு கொஞ்ச தூரம் சென்று காட்டு பகுதிக்கு அருகில் தங்களது ஜீப்பை நிறுத்தி அந்த கரடியை வெளியே விட்டுள்ளனர். நடந்த முழு சம்பவத்தையும் அந்த மீட்பு குழுவில் இருந்த இந்திய வன துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவற்றுடன் அந்த கரடியை காட்டு பகுதியில் விட்ட வீடியோவையும் இணைத்துள்ளார்.

அந்த ட்வீட்டில் "சுதந்திரம் என்றால் இப்படி தான் இருக்கும். நேற்று நாங்கள் மீட்பு செய்த ஹிமாலய கருப்பு கரடியை பிறகு வெளியிட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் கரடி இருந்த கூண்டை வனத்துறையினர் திறந்த உடன் அதில் இருந்த கரடி கீழே குதித்து சட்டென்று ஓடி விட்டது. இதை குறிப்பிட்டு தான் வனத்துறை அதிகாரியான பர்வீன் அந்த ட்வீட்டை பதிவிட்டார்.

இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. பலர் இதை பற்றி கமெண்ட்களையும் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "இந்த குட்டி கரடி தனியாக காட்டிற்குள் வாழுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை படித்த வனத்துறை அதிகாரி பர்வீன் அவருக்கு ரீ-ட்வீட் செய்துள்ளார். "இது கரடி குட்டி இல்லை. 4 கால்களை பயன்படுத்தி ஓடும்போது மட்டுமே அளவில் சிறிதாக தெரியும். ஆனால் 2 கால்களால் நின்றால் மிக பெரிதாக இருக்கும்" என்று பதில் அளித்துள்ளார்.

Also read... குடியிருப்பில் பொருட்களை திருடிவிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சென்ற திருடர்கள்!

மேலும் இந்த கரடியை பிடிப்பது அவ்வளவு எளிதான செயல் கிடையாது. இதை பிடிப்பதற்கு மக்கள் அந்த இடத்தில் கூடாமல் இருக்க 144 தடை உத்தரவை மேற்கொண்டு கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தி இந்த கரடியை பிடித்தோம் என்று அதிகாரி பர்வீன் குறிப்பிடுகிறார். மேலும் இந்த மீட்பு பணியின்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Trending