கொரோனா தொற்றுநோய் மக்களின் தினசரி வாழ்க்கையை வெகுவாக மாற்றியது, கல்வி, வேலை என பலவும் டிஜிட்டலுக்கு மாறியதால், ஒரு புதிய மெய்நிகர் உலகம் (virtual world) உருவானது. வீட்டிலிருந்து வேலை செய்வது நியூ நார்மலாக மாறியதுடன், மக்கள் அவர்களின் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட ஒரு வாய்ப்பையும் இது அளித்துள்ளது. பெற்றோர்களுடன் வசிப்பவர்களுக்கு வாழ்க்கை சூப்பராக மாறியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். WFHல் இருப்பவர்கள் வீட்டில் சமைத்த உணவை என்ஜாய் செய்து சாப்பிட்டுவருகின்றனர்.
அந்தவகையில் ஒர்க் ப்ரம் ஹோமில் பிஸியாக இருக்கும் மகளுக்கு அவளது ஆல்டைம் ஹீரோவான அப்பா ஒவ்வொரு நாளும் புதுப்புது உணவை சமைத்து மகளின் ரூமிற்க்கே எடுத்து வருகிறார். அவரின் இந்த செயல் தான் இண்டெர்நெட்டை இப்போது ஆனந்த கண்ணீரில் நனையவைத்துள்ளது. ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்ட வீடியோ ஆன்லைனில் படு வேகமாக பரவி வருகிறது.
பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட வீடியோ கிளிப், மகளின் WFH வேலைக்கு இடையில் அப்பா, வீட்டில் சமைத்த உணவைக் கொண்டுவருவதைக் காட்டுகிறது. வெறும் 18 விநாடிகள் கொண்ட கிளிப்பில், பெண்ணின் அப்பா அவளின் அறை கதவைத் திறந்து, ஒவ்வொரு நாளும் சுவையான உணவுடன் கூடிய பானத்தை கொண்டுவருவதைக் காணலாம். காய்கறிகளும் பழங்களும் கொண்ட ஒரு தட்டுடன் தந்தை அவளுக்கு ‘குட் மார்னிங்’ மெசேஜ்ஜை கூறி பிளேட்டை கொடுக்கிறார்.
இது அன்பின் உச்சமல்லவா? ஓர்க் ப்ரம் ஹோமை நான் உண்மையில் ஒரு வரமாக கருதுகிறேன். தினமும் என் தந்தை எனக்காக பிரஷ்ஷாக செய்யும் உணவுகளை நான் வீட்டிலிருந்து சாப்பிடுகிறேன். உண்மையில் நான் இதை ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன் என்று வீடியோவின் தலைப்பில் உணர்ச்சிகளை கொட்டியுளார் அந்தப்பெண்.
அந்த முழு வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த வீடியோவை கண்ட ஒரு யூசர் உங்களது அப்பா உங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார். உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று கூறினார்.
இதற்கு கருத்து தெரிவித்த பல யூசர்கள், ஒரு தந்தை குழந்தையை எப்படி நடத்த வேண்டும் என எண்ணுவார்களோ அதேபோலத்தான் உங்கள் தந்தையும் உங்களை கவனிக்கிறார் என்றனர்.
Also read... லாட்டரி ஸ்க்ராட்ச் கார்டு மூலம் கணவருக்கு கர்ப்பத்தை வெளிப்படுத்திய மனைவி - வைரலாகும் சர்ப்ரைஸ் வீடியோ!
இன்னொரு ட்விட்டர் யூசர், தன்னையும் தனது அப்பா இதேபோலத்தான் கவனித்துக்கொள்வர் ஆனால் இப்போது நான் அவரை மிகவும் மிஸ் பண்றேன் என்றும் இந்த வீடியோ என் இதயத்தை காயப்படுத்திவிட்டது என்று எழுதியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு சில குசும்புத்தன கமெண்டுகளும் இல்லாமல் இல்லை. இந்த வீடியோ இதுவரை 2.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் 16,000 க்கும் மேற்பட்ட முறை ரீட்வீட்டும் செய்யப்பட்டுள்ளது. அப்பாவிற்கும் மகளுக்குமான இந்த பாச பிணைப்பு பலரையும் கண் கலங்கத்தான் வைத்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.