Home /News /trend /

97ஆவது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர் - மனைவியை இழந்து வாடுவதாக உருக்கம்!

97ஆவது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர் - மனைவியை இழந்து வாடுவதாக உருக்கம்!

Trending Video

Trending Video

Trending Video | 74 ஆண்டுகளாக பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாடிய அவர், முதன் முதலாக அவரை இழந்து வாடும் துயரத்தை பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலமாக, கணவன், மனைவி எந்த அளவுக்கு அன்யோன்யமாக வாழ வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
மன நலனும், உடல் நலனும் சீராக இருந்தால் மட்டுமே ஒருவர் நீண்ட ஆயுளுக்கு வாழுவது சாத்தியம். அத்தைகைய நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து தற்போது 97ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கும் முதியவருக்கு, முன்னெப்போதும் இல்லாத பெரும் துயரம் மனதில் குடிகொண்டுள்ளது.

அதாவது, திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து கடந்த 74 ஆண்டுகளாக தன் மனைவியுடன் பிறந்தநாளைக் கொண்டாடி வந்த அவர், தற்போது முதல் முறையாக பிறந்தநாளை தனியாகக் கொண்டாடியுள்ளார். அண்மையில் அவரது மனைவி காலமாகிவிட்டார் என்பதே இந்த பெருந்துயரத்திற்கு காரணமாகும்.

இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு

இன்ஸ்டாகிராமில் உள்ள கிரிஷண் குமார் கண்ணா என்ற யூசரின் பேஜில், 3 நாட்களுக்கு முன்பாக இதுகுறித்த வீடியோ வெளியானது. அந்த பதிவில், “இன்று எனக்கு 97 வயது நிரம்பியிருக்கிறது. கடந்த 74 ஆண்டுகளில் என் மனைவி என்னுடன் இல்லாமல் நான் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுதான். நாங்கள் அனைவருமே உன்னை (மனைவி) ஒவ்வொரு நாளும் தவற விடுகிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியான 3 தினங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. சுமார் 1.85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவை லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இந்த முதியவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதுடன், மனைவியை இழந்து வாடும் அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கின்றனர்.
பாகிஸ்தானில் பிறந்தவர்

பிரிவுபடாத பாரத தேசத்தில், கடந்த 1925ஆம் ஆண்டு பாகிஸ்தான் பகுதியில் பிறந்தவர் கிஷன் குமார் கண்ணா. இளமைக் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு தொழிலதிபராகவும், சமூக சேவகராகவும் இருந்திருக்கிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுயவிவர பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2,800 பேர் ஃபாலோ செய்கின்றனர். கிஷன் குமார் கண்ணாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவரது பேரன் நிர்வகித்து வருகிறார்.

Also Read : ‘காத்து வாக்குல மூன்று காதல்’.. திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்..

சமூகத்திற்கு இவர் உணர்த்தியுள்ள பாடம்

பொதுவாக இன்றைய சமூக வலைதள உலகில், திரும்பும் திசையெங்கும் திருமண வாழ்க்கையை ஏதோ நரகம் போல சித்தரித்து பதிவுகள் கணக்கில்லாமல் வெளிவருகின்றன. குறிப்பாக, மனைவி என்றாலே தொல்லை தருபவர், மிகுந்த கோபம் கொண்டவர் என பல ரூபங்களில் சித்தரிக்கின்றனர். இதனை மையமாக வைத்து மீம்ஸ், பிராங்க் வீடியோக்கள், குறும்படங்கள் என ஏராளமான பதிவுகள் வெளிவருகின்றன.

Also Read : தாடி மீசையுடன் புடவைக்கட்டி வலம் வரும் இவர் யார் தெரியுமா?

ஆனால், இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக கிஷன் குமார் கண்ணாவின் வாழ்க்கை அமைந்துள்ளது. முதலில் அவரது வயது 97 என்னும்போது இத்தனை ஆண்டுகளாக அவரது உடல் நலனும், மன நலனும் சிறப்பாக இருந்ததற்கு அவரது இல்லற வாழ்க்கை சிறப்பாக இருந்ததே காரணம் என்பதை உணர முடிகிறது. 74 ஆண்டுகளாக பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாடிய அவர், முதன் முதலாக அவரை இழந்து வாடும் துயரத்தை பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலமாக, கணவன், மனைவி எந்த அளவுக்கு அன்யோன்யமாக வாழ வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Relationship, Trending, Viral Video

அடுத்த செய்தி