திருடன் வந்திருப்பது கூட தெரியாமல் நகை கடையில் அசந்து தூங்கிய காவல் நாய்!

திருடன் வந்திருப்பது கூட தெரியாமல் அசந்து தூங்கிய நாய்

பெரும்பாலான வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக, வலம்வருபவை செல்லப்பிராணிகள்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பெரும்பாலான வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக, வலம்வருபவை செல்லப்பிராணிகள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் அவற்றோடு விளையாடுவது பிடிக்கும். அதிலும் குறிப்பாக நாய்களுக்கு அதில் தனி இடம் உண்டு. நாய்கள் வேடிக்கை விளையாட்டை விட, பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களால் வளர்க்கப்படுகிறது. அதை தான் 'காவல் நாய்' என்று சொல்வோம்.

  காவல் நாய்கள் முரட்டுத் தோற்றத்தையும், ஆக்ரோசமான பண்பையும் கொண்டிருக்கும். இவை அன்னியர்களைக் கண்டால் தாக்கும் இயல்பு கொண்டவை. இவை வீட்டையோ அல்லது குறிப்பிட்ட இடத்தையோ காப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. திருடர்களை விரட்டியடிக்கவும் குற்றத்தை கண்டறியும் பல்வேறு பணிகளுக்கு நாய்கள் பண்ணை முதல் பாதுகாப்புப் படைகள் வரை பயன்படுகின்றன. இந்த ஓநாய் வம்சத்தை சார்ந்த நாய்கள் மக்களை தீங்கிலிருந்து காக்கும் ஒரு சரியான பாதுகாவலனாக இருக்கிறது.

  ஆனால் இப்போது ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்றைத்தான் நாம் காண இருக்கிறோம். தாய்லாந்தில் உள்ள ஒரு சைபீரியன் ஹஸ்கி நாயானது தனது பிரதான கடமைகளை விட்டுவிட்டு அமைதியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்தது. பேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நகை கடையில் இருக்கும் ஒரு காவல் நாய் “திருடன்” வந்தது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்குகிறது. நாய் விரைவில் நகைக் கடையில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது. இப்போது நாய் ட்ரைனிங் கட்டத்த்தில் உள்ளது. ஆனால் அந்த பிளானை நகை கடை உரிமையாளர் கைவிடுவார் என்று பலரும் யூகிக்கின்றனர். ஏனெனில் அந்த நாய் கடைக்கு காவல் இருக்காமல் சுகமாக படுத்து தூங்கிகொண்டுள்ளது.

  கடை உரிமையாளர் வோராவட் லோம்வானாவோங் தனது நாய் லக்கிக்கு தேவையான சூழ்நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்யவேண்டுமென்ற பயிற்சியை அளித்து வருகிறார். ஆனால் அதற்குள் ஒரு சோகமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

  Also read... Explainer : தோல்வி பயம் இருக்கு... ஆனால்? சிக்னல் செயலி நிர்வாக இயக்குநர் பிரையன் ஆக்டன் ஓபன் டாக்!

  "ஆயுதமேந்திய திருடன்" ஒருவன் கடைக்கு வந்து, ஊழியரை அச்சுறுத்தி, பணத்தை திருடிச்சென்றான். அப்போது லக்கி, திருடனை பிச்சி உதறும் என்று நாய் உரிமையாளர் நம்பினார். "துப்பாக்கியை" ஏந்திய திருடன் ஒருவன் தனது கடைக்குள் நுழைந்ததை லோம்வானாவோங்க் செய்தி நிறுவனங்களிடம் சுட்டிக்காட்டினார். இந்த சம்பவம் பிப்ரவரி 16 அன்று சியாங் மாவில் உள்ள அவரது கடையின் சிசிடிவி கேமராவில் படம்பிடிக்கப்பட்டது.

  சம்பவத்தின்போது கேமரா மூலம் லோம்வானாவோங் பல முறை லக்கியைப் பார்த்தார், கடைசி நேரத்திலாவது லக்கி திருடனை கடித்து குதறும் என்று அதன் ஓனர் எதிர்பார்த்தார். ஆனால் பாவமான அந்த நாய் திருடனை கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், துப்பாக்கியுடன் வந்த திருடன் நகை கடையில் இருந்த பணப்பையை ஊழியரை மிரட்டி திருடிச்சென்றுவிட்டான். அந்நேரத்தில் நாய் கனவுலகத்தில் மிதந்துகொண்டிருந்ததோ என்னமோ.

  ஆனால் இது போன்ற சூழ்நிலைகளை கையாள பயிற்சியை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நாய் எந்த தண்டனையும் பெறவில்லை. இதுபற்றி பேசிய லோம்வானாவோங் தான் முன்பு போலவே லக்கியை நேசிப்பதாக கூறினார். "காவல் நாய் எனக்கு அதிர்ஷ்டம் தருவதால் நான் அந்த அதற்கு லக்கி என்று பெயரிட்டேன். என் காவல் நாய் கடையை பாதுகாக்காமல், சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைத்ததோ என்னமோ" என்று தனது ஆதங்கத்தை சிம்பிளாக முடித்துக்கொண்டார் நாயின் உரிமையாளர். நாய்களில் செல்ல நாயோ காவல் நாயோ அதற்கென்று ஒரு மனநிலை உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: