ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தந்தைக்கு கிடைத்த புதிய வேலை.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த சிறுமி.! மனதை கவரும் வைரல் வீடியோ..

தந்தைக்கு கிடைத்த புதிய வேலை.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த சிறுமி.! மனதை கவரும் வைரல் வீடியோ..

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த சிறுமி

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த சிறுமி

குழந்தைகள் குறிப்பாக பெண் பிள்ளைகளை பொறுத்த வரை அவரவர் தந்தைகள் தான் சூப்பர் ஹீரோக்கள். ஒரு தந்தைக்கும் - மகளுக்கும் இடையிலான பந்தம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மிகவும் தூய்மையான ஒன்று. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  குழந்தைகள் குறிப்பாக பெண் பிள்ளைகளை பொறுத்த வரை அவரவர் தந்தைகள் தான் சூப்பர் ஹீரோக்கள். ஒரு தந்தைக்கும் - மகளுக்கும் இடையிலான பந்தம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மிகவும் தூய்மையான ஒன்று.

  ஒரு மகள் கேட்கும் அனைத்தையும் நிறைவேற்றி தருவதில் தந்தை மிகவும் ஆர்வம் காட்டுவதாலும், மிகவும் பாசமுடன் இருப்பதாலும் ஒரு தகப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான உறவை பார்க்கும் போது நம் மனதுக்கு இதமாக இருக்கிறது. தன்னை சூப்பர் ஹீரோவாக பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் தங்கள் மகள்களை ஒவ்வொரு அப்பாக்களும் தேவதைகளாகவே பார்க்கிறார்கள்.

  வாழ்க்கையில் எத்தனை ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் தந்தை - மகள் பாசத்திற்கு பஞ்சமில்லை. தற்போது அப்படி ஒரு வீடியோ அழகான வீடியோ ஒன்று தான் நெட்டிசன்களை நெகிழ செய்துள்ளது. தனக்கு கிடைத்த புதிய வேலையை பற்றிய செய்தியுடன் தனது மகளை ஆச்சரியப்படுத்தி உள்ளார் ஒரு தந்தை.

  சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் பள்ளி சிறுமி ஒருவர் கண்களை மூடிக்கொண்டு நிற்கிறார். அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அருகில் நிற்கும் அவரது தந்தை பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான Swiggy-ன் யூனிஃபார்ம் டீ-ஷர்ட்டுடன் நிற்கிறார். இப்போது கண்களை திறந்து பார் என்று அந்த தந்தை மக்களிடம் சொல்ல, ஆர்வமுடன் கண்களை திறந்து பார்க்கும் அந்த பள்ளி சிறுமி தனது தந்தையின் கையில் ஆரஞ்சு கலர் Swiggy டீ-ஷர்ட் இருப்பதை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாள்.
   
  View this post on Instagram

   

  A post shared by pooja avantika (@pooja.avantika.1987)  உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் மகள் தனது தந்தையை கட்டி அணைத்துக் கொள்கிறான். ஓடி வந்து கட்டி பிடித்து கொண்ட மகளின் மகிழ்ச்சியைக் கண்டு தந்தையின் முகத்தில் உற்சாகம் தாண்டவமாடுகிறது. சில வினாடிகள் கழித்து மேம்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தந்தையின் கழுத்தை எட்டி கட்டி கொண்டு தந்தையின் கன்னத்தோடு கன்னம் வைத்து மகிழ்ச்சி கொள்கிறார் சிறுமி.

  சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ pooja.avantika.1987 என்ற இன்ஸ்டா அக்கவுண்ட்டிலிருந்து ஷேர் செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடியோவிற்கு இதுவரை ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். குறிப்பாக வீடியோ முடிவடையும் போது, ​​அந்தப் பெண் தனது தந்தையிடம் பேசுவதையும் மீண்டும் மற்றொரு அன்பான அரவணைப்பை கொடுப்பதும் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

  Read More: ஆமையை சப்பிட்டு அதன் ஓட்டை தலையில் மாட்டிக்கொண்ட உடும்பு - ஷாக்கிங் வீடியோ

   இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் "இது மிகவும் இனிமையான தருணம்" என்றும் , "உங்களுக்கு பெண் குழந்தையாக தேவதை கிடைத்துள்ளதால் நீங்கள் அதிர்ஷ்டசாலி" என்றும், "அப்பா - மகள் உறவு என்றாலே அது மிகவும் இனிமையானது" என்றும் பல கருத்துக்களை கமெண்ட்ஸ் செய்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Father, Swiggy, Viral News, Viral Video