ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மாமியாருடன் இணைந்து விவசாயம் பார்க்கும் வெளிநாட்டு மருமகள் - குவியும் பாராட்டு

மாமியாருடன் இணைந்து விவசாயம் பார்க்கும் வெளிநாட்டு மருமகள் - குவியும் பாராட்டு

மாமியாருடன் இணைந்து விவசாயம் பார்க்கும் வெளிநாட்டு மருமகள்

மாமியாருடன் இணைந்து விவசாயம் பார்க்கும் வெளிநாட்டு மருமகள்

Trending Video | இந்திய ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண், கிராமம் ஒன்றில் உள்ள வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலுக்கு கண்கள் இல்லை என்ற பழமொழி உன்மையில் இப்போது பழையதாகி விட்டது. காதலுக்கு எல்லையே இல்லை என்பது தான் தற்போது ட்ரெண்டாக உள்ளது. முன்பு ஏதோ அத்திப்பூத்தாற் போல இந்தியர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் இந்திய - வெளிநாட்டவர் கலப்பு திருமணம் என்பது இப்போது நாடு முழுவதும் சகஜமாகி விட்டது. இந்த திருமணங்களிலும் கூட சில பாகுபாடு உள்ளது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை, அவரை கட்டி கொள்ளும் இந்திய பெண் ஃபாரினில் செட்டிலாகி விடுவார். ஆனால் வெளிநாட்டை சேர்ந்த பெண் என்றால் இந்திய குடும்பத்திற்கு செட்டாக மாட்டார் என்ற கருத்து உள்ளது.

இந்த கருத்தை மெய்பிக்கும் விதமாக இந்திய ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டுப் பெண்கள் நம் நாட்டிற்கு வந்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வாழ்வது என்பது அரிதிலும் அரிது மிக அரிதாக இருக்கிறது. இந்த பிம்பத்தை உடைத்துள்ளது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் ஒரு வீடியோ. குறிப்பிட்ட வைரல் வீடியோவில் காணப்படும் இந்திய ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண், கிராமம் ஒன்றில் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் காட்சி காணப்படுகிறது. இந்திய விவசாய கலாச்சாரத்தை தழுவி களத்தில் இறங்கி விவசாய பணியில் ஈடுபடும் அந்த ஃபாரின் பெண்ணை பார்த்து நம்மவர்கள் வியப்பில் ஆழ்ந்து விட்டனர்.

குறிப்பிட்ட வைரல் வீடியோவில் காணப்படும் அந்த வெளிநாட்டு பெண் இந்திய ஆடைகளை அணிந்து வயலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு நிலத்தில் வெங்காயம் விதைக்கிறார். இந்த வெளிநாட்டு பெண் வயல்வெளியில் வேலை செய்வதை பார்த்து அவரின் கணவன் அவரிடம் வந்து ‘நான் உன்னிடம் ஏதாவது கேட்கலாமா’ என்று கூற, அதற்கு அவள் ஆங்கிலத்தில் ‘யெஸ் ஷ்யூர்’ என்று பதிலளிக்கிறார்.

Also Read : காதலித்த மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை

இதனை தொடர்ந்து அந்த கணவன் தன் வெளிநாட்டு மனைவியிடம் ‘நீ எங்கிருந்து வருகிறாய்’ என்று கேட்க, அதற்கு அப்பெண் 'ஜெர்மனியில் இருந்து வருகிறேன்’ என்று சொல்கிறார். இப்போது என்ன செய்கிறாய் என்ற கேள்விக்கு அந்த வெளிநாட்டு மருமகள் வயலில் வெங்காயம் விதைக்கிறேன் என்கிறார். அப்போது அவரது கணவன், ‘ஜெர்மனியில் இருந்து வெங்காயம் நடுவதற்காகவா ஏழு கடல் கடந்து இந்தியா வந்திருக்கிறாய்’ என்று நகைச்சுவையாக கேட்க அவரது அருமை மனைவி மகிழ்ச்சியுடன் ‘ஆம்’ என்கிறார். பின் அந்த கேமரா அதே வயலில் சற்று தூரத்தில் விவசாய பணியில் இருக்கும் வெளிநாட்டு பெண்ணின் மாமியாரை காட்டுகிறது.


நமஸ்தே ஜூலி என்ற இன்ஸ்டா அக்கவுண்ட்டில் இருந்து ஷேர் செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோவின் கேப்ஷன் "நான் குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை மிகவும் ரசிக்கிறேன்! நான் ஏற்கனவே 1 மாதமாக எனது கணவரின் கிராமத்தில் தங்கி இருக்கிறேன், குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாகவும், இயற்கையுடன் நெருக்கமாகவும் வாழ்கிறேன்" என்பதாகும். இதிலிருந்து வயலில் வெங்காயம் விதைத்த அந்த வெளிநாட்டு மருமகளின் பெயர் ஜூலி என்பதையும், தனது இன்ஸ்டாவில் இந்த வீடீயோவை ஷேர் செய்திருப்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

Also Read : இந்த படத்தில் ஒளிந்துள்ள புலிகளை 11 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ கிளிப் நெட்டிசன்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக்ஸ் செய்துள்ள நிலையில் பல யூஸர்கள் இந்த வீடியோ மிகவும் ஃபன்னாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். பல நெட்டிசன்கள் வெளிநாட்டு மருமகளான ஜூலியை மனதார பாராட்டி இருக்கிறார்கள். இந்திய கலாச்சாரத்தை மதிக்கும் உங்கள் மாண்பிற்காக கடவுள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வாதிப்பார் என்று ஒரு யூஸர் கூறி இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்கு மருமகளாகி உள்ள ஒருவர் இந்திய கலாச்சாரத்தை மிகவும் அரவணைத்து ஏற்று கொண்டுள்ளதை பார்ப்பதற்கு எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்று பல யூஸர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Viral Video