கிரிக்கெட் விளையாடாமல் ஃபுட் பால் விளையாடிய ரோஹித் சர்மா! வைரல் வீடியோ

மும்பை அணியில் அதிகபட்சமாக டி காக் 81 ரன்களும், ரோஹித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.

கிரிக்கெட் விளையாடாமல் ஃபுட் பால் விளையாடிய ரோஹித் சர்மா! வைரல் வீடியோ
மும்பை அணியில் அதிகபட்சமாக டி காக் 81 ரன்களும், ரோஹித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.
  • News18
  • Last Updated: April 23, 2019, 11:48 AM IST
  • Share this:
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் ஆகாமல் இருக்க பந்தை காலால் தடுத்த ரோஹித் சர்மாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி.

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 81 ரன்களும், ரோஹித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.


ஆட்டத்தின் போது கெளதம் வீசிய 9.5-வது ஓவரில் இறங்கி வந்து ரோஹித் சர்மா அடிக்க முயன்றார். அப்போது பந்து லெங் சைடில் போக, அதை தனது காலால் தடுத்தார் ரோஹித் சர்மா. இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 187 ரன்கள் அடித்தது. 188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் கேப்டன் ரஹானே 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்தது.

Also watch


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading