• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அடடே! என்னா ஒரு மூளை... பறவைகளை விரட்ட விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

அடடே! என்னா ஒரு மூளை... பறவைகளை விரட்ட விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பயிர்களை காப்பதற்காக வயில்களுக்குள் பறவைகளை புகுவதைத் தடுக்க விவசாயி கையாண்டுள்ள புதுமையான விஷயம் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • Share this:
சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, பறவைகளே பெரும் ஆபத்தாக இருக்கிறது. கூட்டமாக வயல்வெளிக்குள் நுழைந்தால், விளைந்த பயிர்களை மொத்தமாக காலி செய்துவிட்டு சென்றுவிடும். விளைச்சலுக்காக விதைக்கப்பட்ட பயிர்களினால் ஏற்படும் இந்த சேதம், வணிகரீதியில் பெருத்த அடியை விவசாயிகளுக்கு கொடுக்கும். இதனால், காலம்காலமாக, பயிர்களை பறவைகளிடம் இருந்து காப்பதற்காக வித்தியாசமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதாவது, இதற்கு முனபெல்லாம் சோளக்காட்டு பொம்மைகளை பரவலாக வயல்களில் பார்க்க முடியும். பழைய துணிகளில் வைக்கோல்கள் உள்ளிடவைகளை நிரப்பி, சட்டியை வைத்து வயல்களின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைத்திருப்பார்கள்.

இது, வயல்களில் மனிதர்கள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை கொடுக்கும். இதனால் பறவைகளும் அந்த வயல்வெளி பக்கம் செல்லாது. இன்னும் சிலர், பறவைகளை அடித்து உயரமான குச்சி ஒன்றில் வயல்வெளிகளில் கட்டி வைத்துவிடுவார்கள். ஒரு பறவை இறந்திருக்கும் வயலில் மற்ற பறவைகள் சாப்பிட வராது என்ற எண்ணத்தில் சிலர் இந்த முறையை கையாள்வார்கள். இந்த டெக்னிக்குகளை பறவைகளும் அறிந்து கொண்டுவிட்டன. இதனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கொத்தாக காட்டிற்குள் புகுந்துவிடுகின்றன. ஆனால், இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், விவசாயி பறவைகளை விரட்ட கையில் எடுத்திருக்கும் புது டெக்னிக், நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.

Also Read : மணப்பெண் அணிந்து வந்த 60 கிலோ நகை - அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருமணம்!

சோளக்கருது பயிரிடப்பட்டுள்ள அந்த வயலில், மின்விசிறியின் மோட்டாரில் சங்கிலியை இணைத்துள்ளார். அந்த சங்கிலி, வேகமாக சுழலும்போது அருகே வைக்கப்பட்டுள்ள அலுமினிய கப்மீது மோதி பலத்த சத்தத்தை எலுப்புகிறது. பறவைகளுக்கு சத்தம் என்றால் எரிச்சலடைபவை என்பதால், அவரின் இந்த டெக்னிக்குக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 
View this post on Instagram

 

A post shared by JUGAAD (@jugaadu_life_hacks)


அதேபோல், நெட்டிசன்களும் விவசாயின் இந்த சூப்பரான டெக்னிக்கை வரவேற்றுள்ளனர். பறவைகளுக்கும் துன்பம் இழைக்காமல், பயிர்களையும் காக்கும் வகையில் இந்த காலத்துக்கு ஏற்ற டெக்னிக்கை அவர் கையாண்டிருப்பதாக கூறியுள்ளனர். சில நெட்டிசன்கள், விவசாயிக்கு என்னா மூளை... செம கண்டுபிடிப்பு என தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேலான பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றுள்ளது.

Jugaadu_life_hacks என்ற பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுமையான, மற்றும் கிரியேட்டிவான கண்டுபிடிப்பு வீடியோக்கள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டு வருகின்றன. அதனால், ஏராளமான பின்தொடர்பாளர்களை வைத்துள்ள Jugaadu_life_hacks பக்கத்தில் போடப்பட்டுள்ள இந்த வீடியோ உடனடியாக நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஸ்மார்டாக விவசாயி ஒருவர் சிந்தித்து செயல்படுத்தியிருக்கும் இந்த ஐடியா உண்மையில் பாராட்டப்பட வேண்டும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: