• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 'நமோ நமோ சங்கரா' பாடலுக்கு நடனமாடிய யானை - வைரலாகும் வீடியோ!

'நமோ நமோ சங்கரா' பாடலுக்கு நடனமாடிய யானை - வைரலாகும் வீடியோ!

நடனமாடிய யானை

நடனமாடிய யானை

பாலிவுட்டில் வெற்றிபெற்ற 'நமோ நமோ சங்கரா' பாடலுக்கு யானை ஒன்று நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவுவதால், தற்போது தொலைபேசியை அனைவருக்கும் பொழுபோக்கு அம்சமாக உள்ளது. சமீபத்தில் பறவை, விலங்குகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மிகவும் சோர்வான மற்றும் பரபரப்பான நாட்களில் கூட உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பதில் இதுபோன்ற வீடியோக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலையில் பாலிவுட்டில் வெற்றிபெற்ற 'நமோ நமோ சங்கரா' பாடலுக்கு யானை ஒன்று நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பெரும்பாலானோர் பாலிவுட் ரசிகர்களாக இருப்பார்கள், அந்த வரிசையில் தற்போது ஒரு யானையும் இணைந்துள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? நடனத்தை பார்க்கும் ஆர்வம் மனிதர்களுக்கு மட்டுமே என்று நீங்கள் நினைத்திருந்தால், ஒரு பாடலுக்கு யானை நடனமாடும் வீடியோவைக் காணும் வரை காத்திருங்கள்.

Also read... தனது செல்ல நாய்க்கு மாஸ்க் அணிவித்து வெளியே அழைத்து வந்த நபர் - குவியும் பாராட்டு!

இப்போது வைரலான இந்த வீடியோ கேரள யானைகள் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதில் சாரா அலி கான் மற்றும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கேதார்நாத் திரைப்படத்தின் நமோ நமோ சங்க்ராஃப்ரோம் பாடலுக்கு அழகாக நடமாடுகிறது.




லட்சுமி என்ற அந்த யானை சூப்பர்ஹிட் பாடலின் இசைக்கு ஒத்திசைந்தவாறு தலை, வால், கால்களை அசைப்பதைக் காணலாம். இந்த வீடியோவானது கர்நாடகாவில் அமைந்துள்ள கொத்யாக கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோவை பார்த்து மகிழ்ந்த நெட்டிசன்கள், ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இந்த யானை நடனமாடிய வீடியோ 6,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.

மேலும் லட்சுமி யானையை புகழ்ந்து ஏராளமானோர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஒரு யூசர், லட்சுமியின் நடன நகர்வுகளுக்கு, “ஆஹா இந்த யானை என்னைவிட நன்றாக நடனமாடுகிறது” என்றும் மற்றொருவர் “நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான யானை” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல ஏராளமானோர் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்த வண்ணம் உள்ளனர்.

முன்னதாக இதேபோல எருமைமாடு ஒன்று நடனமாடும் வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் ஒரு பெண் எருமை மாட்டிற்கு முன் நடனமாடியவாறு அந்த விலங்கையும் நடனமாட வருமாறு அழைப்பார். அவள் கோரிக்கையை ஏற்றுகொண்டவாறு, எருமை மாடு உற்சாகமாக மேலேயும் கீழேயும் குதிக்கத் தொடங்குகிறது. எருமை ஆடிய நடனத்தால் அதன் முதுகில் வைக்கப்பட்டிருந்த ஒரு போர்வை விழுகிறது, ஆனாலும் அது நடனத்தை நிறுத்தாது. அந்த வீடியோவில் எருமையின் நகர்வுகளைப் பார்த்த நெட்டிசன்கள் ஆயிரக்கணக்கான லைக்குகள் போட்டு வீடியோவை வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: