ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மணப்பெண் உடையணிந்த வயதான மனைவியை கண்டு குழந்தை போல் கைதட்டி ரசித்த கணவர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

மணப்பெண் உடையணிந்த வயதான மனைவியை கண்டு குழந்தை போல் கைதட்டி ரசித்த கணவர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Trending Video | சோசியல் மீடியாவில் வரக்கூடிய சில வீடியோக்கள் நம்மை பொறாமைப்பட வைக்கும் அளவிற்குத் தான் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

'காதல், திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கும் மறக்க முடியாத சுவாரஸ்ய நிகழ்வுகளாகும்'. இளம் வயதில் காதலிக்கும் போது இருக்கும் அதே பாசமும், நேசமும் வயதான காலத்திலும் இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் நமக்கானவர்கள் அப்படி இருந்தால் நிச்சயம் நாமும் அதிர்ஷ்டசாலிகள் தான். ஆனால் அனைவருக்கும் சந்தோஷமான வாழ்க்கை அமைந்து விடாது. சிலர் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். இது தான் தன்னுடைய வாழ்க்கை என்று கடந்து சென்றாலும், தற்போது சோசியல் மீடியாவில் வரக்கூடிய சில வீடியோக்கள் நம்மை பொறாமைப்பட வைக்கும் அளவிற்குத் தான் உள்ளது. ஆம் டிக்டாக், இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியாவில் இளம் தம்பதியினர் முதல் வயதான தம்பதியினர் வரை செய்யும் க்யூட்டான வீடியோக்கள் அனைத்தும் நெட்டிசன்களிடம் வைரலாகி வருகிறது.

அப்படியொரு வீடியோ தான் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி, அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. அப்படி என்ன தான் அந்த வீடியோவில் இருந்தது? என்பது குறித்து நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம். சோசியல் மீடியாவில் வைரலாகும் இந்த வீடியோ தொடக்கத்தில், வயதான பெண்மணி ஒருவர், வெல்வெட் துப்பட்டா ஒன்றையும், ட்ரெண்டான காதணிகள் மற்றும் நெத்திச்சூடு இட்டு சோபாவில் அமர்ந்திருக்கிறார். அந்த அறைக்குள் அருகில், நின்றிருந்த வயதான மணப்பெண்ணின் கணவரை அழைத்து பார்க்கச்சொல்கிறார்கள் இவர்களுடைய குழந்தைகள்.

அப்போது வயதான நபர், தன்னுடைய மனைவியை மணப்பெண் அலங்காரத்தில் பார்த்ததும், உற்சாகமாக ஒரு குழந்தைப் போல கைதட்டி ஆரவாரம் கொள்கிறார். பின்னர் முகம் முழுவதும் புன்னகையுடன் மனைவியை நோக்கி செல்லும் இவர் அருகில் சென்றதும் அவளின் துப்பட்டாவை சரிசெய்து அவரது அருகில் அமர்கிறார். இதற்கிடையில், அங்கிருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் உற்சாகத்துடன் இந்த தருணத்தை கொண்டாடுகின்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by Devika Sandhu (@devikalalala)இன்ஸ்டாவில் வெளியான இந்த வீடியோ இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது மற்றும் 379,666 க்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது. இதோடு இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், தம்பதியினருக்கு இடையிலான உணர்ச்சிபூர்வமான அன்பை இச்செயல் வெளிப்படுத்துகிறது என்றும், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும் இது தான் உண்மையான காதல் என்றும், நிச்சயம் இவர்களின் சந்தோசம் நிலைத்திருக்கட்டும் என்பது போன்ற கமெண்ட்டுகளையும், இமோஜிகளையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்று தான் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒரு திருமண விழாவில் சீக்கிய தம்பதியினர் ஆடிய டான்ஸ் சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read : உயரமான மலைகளுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி படுத்துக் கொண்ட நபர் - வைரலாகும் வீடியோ.!

இவர்களை போன்று வயதான காலத்திலும், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள அன்பைப் பார்க்கும் போது நம்மில் அனைவருக்கும் நிச்சயம் பொறாமை வரத்தான் கூடும். இவர்களை போன்று புரிந்து வாழ இனி நாமும் கற்றுக்கொள்வோம்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Viral Video