நீரில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களுக்கு வாத்து ஒன்று தரையில் நின்று கொண்டு தன்னுடைய வாயால் உணவை எடுத்து ஊட்டி விடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் பல விதங்களில் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். ஆனால் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அவ்வாறு வெளிப்படுத்த முடியாது என்பதால் சில நேரங்களில் தன்னுடைய செயல்களின் மூலம் அவைகளும் மனிதர்களுக்கு இணையாக தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் நீரில் நீந்தி கொண்டிருக்கும் மீன்களுக்கு உணவை தன்வாயால் எடுத்து எடுத்து ஊட்டி விடும் வாத்து ஒன்றின் வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது
“கேப்ரியல் கார்னோ” என்னும் நபர் தன்னுடைய வலைதளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். “உணவை அனைவருடனும் பகிர்ந்து உண்பதே வாழ்வின் அடிப்படை” என்ற வாசகத்தையும் அவர் இணைத்துள்ளார்.
அந்த வீடியோவில் “நீரின் மேற்பரப்பிற்கு அருகில் தீவனமானது நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த தீவனத்திற்கு அடியில் பல மீன்கள் அதற்காக வட்டமடித்து நீந்தி கொண்டிருக்கின்றன. அப்போது அங்கிருந்த வாத்து ஒன்று, அருகில் அடுக்கி வைத்திருந்த தட்டுகளில் இருந்த தீவனங்களை தன்னுடைய அலகினால் எடுத்து, மீன்களுக்கு ஊட்டி விடுகிறது. இதைப் பார்த்து உற்சாகமடையும் மீன்கள் அதிகமான எண்ணிக்கையில் ஒன்று கூடி அந்த உணவை உட்கொள்கின்றன”.
The sharing of food is the basis of social life. pic.twitter.com/96bXxRO84g
— Gabriele Corno (@Gabriele_Corno) August 29, 2022
சமூக வலைதளமான ட்விட்டரில் இந்த வீடியோ வெளியாகி அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகிறது. வாத்தின் இந்த செயலினால் கவர்ந்திழுக்கப்பட்ட பலர் பல விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். “நாம் விலங்குகளிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று ஒருவரும்” இது போன்ற ஒரு காட்சியை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை” என்று ஒருவரும் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளனர்.
Also Read | நீ வேண்ணா சண்டைக்கு வா... இரவில் நடுரோட்டில் கெத்து காட்டிய காட்டு யானை.! - வைரல் வீடியோ
இது ஒரு புறம் இருக்க “நீங்கள் பார்க்கும் வீடியோ உண்மையானது தான் என்றாலும் நீங்கள் கூறுவது போல் அந்த வாத்து மீன்களுக்கு உணவளிப்பதற்காக அவ்வாறு செய்யவில்லை. நமக்கு பற்கள் இருப்பது போல் பறவைகளுக்கு இல்லை சில நேரங்களில் இது போன்ற உணவை உட்கொள்ளும் போது அவை செரிமானத்தை எளிதாக்குவதற்காக தீவனத்தை வாயில் எடுத்துக்கொண்டு அவற்றை நீரில் நனைத்து ஊறவைப்பதின் மூலம் அதை மிக எளிதாக செரிமானம் செய்ய உதவி செய்கிறது. அவ்வாறு அந்த வாத்து உணவை வாயில் எடுத்து நீரில் நனைக்கும் போது அங்குள்ள மீன்கள் அங்கு சிதறும் தீவனத்தை உண்பதாகவும் அதை பார்க்கும் போது நமக்கு வாத்து மீன்களுக்கு உணவளிப்பது போல் தெரிவதாகவும்” அவர்கள் மாறி மாறி தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இப்படி பலதரப்பட்ட கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பார்வைகளையும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று அந்த வீடியோ மிகப் பெரும் அளவில் வைரல் ஆகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fish, Food, Trending, Viral Videos