உயிரைக் காப்பாற்றிய நாய் - மனதை நெகிழவைக்கும் வீடியோ!

உயிரைக் காப்பாற்றிய நாய் - மனதை நெகிழவைக்கும் வீடியோ!

உயிரைக் காப்பாற்றிய நாய்

தென் ஆப்பிரிக்காவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சியில் நீச்சல் குளம் அருகே பொமேரியன் நாய் ஒன்று விளையாடிக்கொண்டிருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீச்சல்குளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பொமேரியன் நாயை, விடா முயற்சியால் மற்றொரு நாய் காப்பாற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சியில் நீச்சல் குளம் அருகே பொமேரியன் நாய் ஒன்று விளையாடிக்கொண்டிருக்கிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த நீச்சல் குளத்துக்குள் தவறி விழும் அந்த நாயால் மேலே ஏறிவர முடியவில்லை. இதனால் நீண்ட நேரமாக தண்ணீருக்குள்ளேயே நீந்திக்கொண்டு, உயிரைக் காபாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அங்கு ஓடி வரும் மற்றொரு நாய், நீருக்குள் பொமேரியன் நாய் ஒன்று மாட்டிக்கொண்டு தத்தளிப்பதை கண்டு உதவ முயற்சிக்கிறது.

சுமார் அரைமணி நேரமாக நீச்சல் குளத்தைச் சுற்றி சுற்றி ஓடி வரும் நாய், நீருக்குள் இருக்கும் நாயை காப்பாற்ற பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறது. எந்த முயற்சியும் உடனடியாக பலன் கொடுக்கவில்லை. பார்ப்பவர்களுக்கு கூட எப்போது இந்த நாய், நீருக்குள் த த்தளிக்கும் நாயை காப்பாற்றும் என்ற ஆவலும் ஏற்படுகிறது. ஒருவழியாக நீருக்குள் இருக்கும் பொமேரியன் நாயைக் மற்றொரு நாய் காப்பாற்றி கரை சேர்க்கிறது. பின்னர் இருவரும் சேர்ந்து வழக்கம்போல் விளையாடுகின்றனர்.மனதை நெகிழவைக்கும் இந்த நிகழ்வு தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடந்துள்ளது. பைரன் தனரையன் (Byron Thanarayen) மற்றும் மெலிசா (Melissa) தம்பதியினர் சூக்கி என பெயரிட்டப்பட்ட 15 வயதான பொமேரியன் நாய் ஒன்றையும், ஜெசி என்ற மற்றொரு நாயையும் வளர்த்து வருகின்றனர். தம்பதியினர் வீட்டைவிட்டு வெளியே சென்றபோது எதிர்பாராதவிதமாக சூக்கி நீச்சல்குளத்துக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளது. அந்த நேரத்தில் ஜெசி நாய் சரியாக சென்று சூக்கியை காப்பாற்றியுள்ளது.

Also read... காண்டாமிருகங்களை வேட்டையாட வந்தவரை மிதித்தே கொன்ற யானை கூட்டம்!

வீட்டுக்கு திரும்பிய பைரன் தம்பதியினர் நாய் நனைந்திருந்தைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். பின்னர், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பொமேரியன் சூக்கி நீருக்குள் விழுந்ததையும், அதனை மற்றொரு தோழரான ஜெசி போராடி காப்பாற்றியதையும் கண்டு நெகிழ்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த வீடியோவை முழுமையாக முகநூலில் வெளியிட்டனர். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வியப்படைந்தனர். நீச்சல்குளத்தில் தவறிவிழுந்து உயிருக்கு போராடும் நாயைக் காப்பாற்ற மற்றொரு நாய் போராடுவதையும், கடைசியாக காப்பாற்றிக் கொண்டுவந்து அதனுடன் விளையாடுவதையும் பார்க்கும் காட்சிகள் மனதை நெகிழவைப்பதாக கூறியுள்ளனர்.

எதிர்காலத்தில் இதுபோன்றதொரு விபத்து நடக்காமல் இருக்க, வெளியே செல்லும்போது நீச்சல்குளத்தை மூடிவிட்டுச் செல்ல தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்கள், நீச்சல் குளத்தை மூடுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும், வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காது என்றும் உறுதியளித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் அந்த வீடியோ அள்ளி வருகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: