'மை பீச் ரொட்டீன்’.. பீச்சில் ஜாலியாக விளையாடும் நாய் - வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

நாய் ஒன்று பீச்சில் மனிதர்களை போல விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
நாய்கள் மனிதனின் சிறந்த நண்பராகக் கருதப்படுகின்றன. இந்த நன்றியுள்ள பிராணி சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகள் என எதையும் பொருட்படுத்தாமல் எப்போதும் மனிதர்களை உற்சாகப்படுத்தத் தவற மாட்டார்கள். மனிதர்கள் நாள் முழுவதும் உற்சாகமாக நேர்மறையான மனநிலையில் இருப்பதை இந்த செல்லப்பிராணிகள் உறுதி செய்கிறது.

எல்லா நேரங்களிலும் மனிதர்களின் மனநிலையை உற்சாகப்படுத்த நாய்கள் தங்கள் வாலை ஆட்டுதல், சேறும் சகதியுமான முத்தங்கள் மற்றும் அரவணைப்பு என தங்களது அன்பை வெளிப்படுத்துகிறது.. இதனாலேயே பலரால் மிகவும் விரும்பக்கூடிய பிராணியாக நாய்கள் இருக்கின்றன. குறிப்பாக அது வீட்டில் ஒரு செல்ல குழந்தை போல வளரும். மேலும் அவை செய்யும் சில சேட்டைகள் இணையத்தில் எப்போதும் வைரலாகி வருவதும் உண்டு. பொதுவாக செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களை உற்சாகப்படுத்த அதனை வெளியே கூடி செல்வது வழக்கம். அந்த வகையில், ஒரு நாய் தனது பீச் டே அவுட்டை கொண்டாடியது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Labrador dog page என்ற ஒரு இன்ஸ்டா பக்கத்தில் உள்ள ஒல்லி என்ற ஒரு நாயின் வீடியோ, கடற்கரையில் உள்ள அனுபவத்திற்கு மேலும் வேடிக்கை சேர்க்கும் வகையில் ஒரு நாயின் உரிமையாளர் அதனை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அதற்கு உதவுவதைக் காட்டுகிறது. வீடியோ கடற்கரையில் நாய் தனது வேடிக்கையான நாளை ஒரு குழந்தை போல செலவழிப்பதை காட்டுகிறது. இது நிச்சயமாக மற்ற நெட்டிசன்களைப் போல உங்கள் இதயத்தை உருக வைத்து உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 
View this post on Instagram

 

A post shared by Good Boy Ollie (@labradolliedog)

சுவாரஸ்யமான வீடியோவின் பதிவு ஒல்லி நாய் கடற்கரைக்குச் செல்வதிலிருந்து ஆரம்பமாகிறது. தனது டே அவுட்டில் மனிதர்களைப் போலவே, நாய்க்கும் சில சன்ஸ்கிரீன் க்ரீம்களை அதன் உரிமையாளர் போட்டுவிடுகிறார். அதன் பிறகு, அது குழந்தை போல மணலில் விளையாடுவது கடலில் ஸ்விம்மிங் செய்வது இறுதியில் தனது ரோமங்களில் இருக்கும் நீரை டவல் கொண்டு உரிமையாளர் எடுத்து விடுவது என அதன் நாள் சிறப்பாக சென்றது. அதிலும் குளித்தவுடன் அதன் உடல் முழுவதும் டவலால் போர்த்தப்பட்டு இருந்த போது மிகவும் அழகாவும் ஸ்டைலிஷாகவும் போஸ் கொடுத்திருந்தது.

Also Read : இரவு ஊரடங்கு - மதியம் வரை கடைகள் திறப்பு : மேற்கு வங்கத்தில் தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

இந்த வீடியோ கிளிப் ஜூன் 23 அன்று ஒல்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது மற்றும் 8,900 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பல ரியாக்சன்களையும் பெற்று தந்துள்ளது. மேலும் சமூக ஊடக நண்பர்கள் தங்களது அன்பை நாய்க்குட்டிக்கு கமெண்ட்ஸில் பொழிந்தனர். இதேபோல மற்றோரு வைரல் வீடியோ உங்கள் மனதை காட்டாயம் கவரும்.

 


அந்த வீடியோவில் நாய் ஒன்று ரோட்டில் ஓடும் மழை நீரில் படுத்து புரள்வதைக் காணலாம். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் சுமார் 4.7 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published: