• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • நாயை ஓநாய்போல காட்ட முயன்ற சீன மிருகக்காட்சிசாலை - நெட்டிசன்கள் எதிர்ப்பு!

நாயை ஓநாய்போல காட்ட முயன்ற சீன மிருகக்காட்சிசாலை - நெட்டிசன்கள் எதிர்ப்பு!

சீன மிருகக்காட்சிசாலையில் ஓநாய் போல வைக்கப்பட்டுள்ள ஒரு நாயின் வீடியோ கிராப்.

சீன மிருகக்காட்சிசாலையில் ஓநாய் போல வைக்கப்பட்டுள்ள ஒரு நாயின் வீடியோ கிராப்.

அப்பாவி நாயை கூண்டிலிருந்து வெளியேற்றுமாறு ஒரு பார்வையாளர் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாய் மற்றும் ஓநாயை அடையாளம் காண்பதில் நீங்கள் எப்போதாவது குழப்பமடைந்திருக்கிறீர்களா? சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியாங்வூஷன் மிருகக்காட்சிசாலையில் ஓநாய் கூண்டுக்குள் ஒரு ரோட்வீலர் நாயை கண்டு அங்குவந்த பார்வையாளர்கள் உண்மையில் அதிர்ச்சியடைந்துதான் போனார்கள். இந்த கிளிப்பை மிருகக்காட்சிசாலைக்கு வந்த பார்வையாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது இப்போது பயங்கர வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது இப்போது யூடியூப்பில் 6,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு, நெட்டிசன்களிடமிருந்து பலத்த எதிர்ப்புகளை பெற்றுள்ளது.கமெண்ட் பிரிவில், அந்த அப்பாவி நாயை கூண்டிலிருந்து வெளியேற்றுமாறு ஒரு பார்வையாளர் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தை படமாக்கிய சூ என்ற பார்வையாளர் நாய் போல தோற்றமளிக்கும் விலங்கை படமாக்கி வீடியோவில், “இது ஓநாயா? ” என்று கேள்வியெழுப்பினார்.

மிருககாட்சி சாலையில் அந்த கூண்டில், ஒரு ஓநாய் வசித்து வந்ததாகவும் ஆனால் அது முதுமையால் இறந்துவிட்டதாகவும், மிருகக்காட்சி சாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார், மேலும் அந்த இடத்தில் நாய் ஒன்று தற்காலிகமாக வைக்கப்பட்டிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. மிருகக்காட்சி சாலையின் ஊழியர் ஒருவர், இந்த மிருகக்காட்சி சாலைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது பார்வையாளர்களின் நுழைவு கட்டணம் தான் என்றார்.

மேலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் நுழைவுக்கட்டணம் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதனால் என்னை போல பல ஊழியர்களின் நிலை சிக்கலுக்குள்ளானது. சில நாட்களுக்கு முன்பு இறந்து போன ஓநாயின் கூண்டு காலியாக இருப்பதால் எங்கள் மிருகக்காட்சிசாலையின் காவல் நாயை அந்த கூண்டுக்குள் நாங்கள் வைத்துள்ளோம். எங்கள் மிருகக்காட்சிசாலையில் புலிகளும், சிங்கங்களும் இருக்கின்றன என்றார்.

Also read... ஏலத்தில் இரு குடும்பங்கள் இடையிலான கவுரவ பிரச்னை - ரூ.510 கோடிக்கு ஏலம் போன மதுபான கடை!

இதிலிருந்து மிருகக்காட்சிசாலையின் உள் இருக்கும் விலங்குகளின் பராமரிப்பு பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அந்த அறிக்கையின்படி, உள்ளூர் வனவியல் பணியகம் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம் அந்த ஓநாய் அடையாளத்தை முதலில் அகற்றுமாறு கேட்டுக் கொண்டுனர். இதுபோன்று நடப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, எகிப்தில் ஒரு மிருகக்காட்சிசாலையில் ஒரு கழுதையை ஒரு வரிக்குதிரை போல வர்ணம் பூசி பார்வையாளர்களை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2019 ஆம் ஆண்டில், காடிஸில் ஒரு திருமணத்திற்காக இரண்டு கழுதைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்படும் பலருக்கும் நினைவிருக்கலாம்.

விலங்குகள் ஒன்றும் அறியாத அப்பாவிகள். விலங்குகள் நிலையை நாம் சீண்டும் போது தான் அவை நம்மிடம் கொந்தளிக்கும். விலங்குகளை நாம் டிஸ்டர்ப் செய்யாவிட்டால் அதுவும் நம்மை டிஸ்டர்ப் செய்யாது. மேற்கண்டதை போன்ற கோமாளித்தனங்களை பலரும் உலகில் ஆங்காங்கே அரங்கேற்றி வருவதால்தான் விலங்கு நல அமைப்புகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் வேடிக்கையாக இருந்தாலும் உண்மையில் இது அசாதாரணமானது, இதனால் விலங்குகளுக்கு மன மற்றும் உடல் ரீதியாக சிக்கல் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: