வாழ்நாள் எல்லாம் நாம் சாமானியராக வாழுகின்ற போதிலும், நம்முடைய திருமண தினத்தில் மட்டும் நாம் ஹீரோ, ஹீரோயினாக மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமாக இருக்கும். இதுவரையிலும் இல்லாத அளவு அன்றைக்கு அழகாக காட்சியளிக்க வேண்டும் என்று நாம் மிகவும் மெனக்கெடுவோம்.
அதற்காக தான் பட்டு வேட்டி, சட்டை, பட்டுச்சேலை அல்லது கோட் சூட், லெஹெங்கா போன்ற கண்கவர் ஆடைகளை நாம் அணிந்து கொள்வதுடன், மிக நேர்த்தியாக நம்மை அழகுபடுத்திக் கொள்கிறோம். இவையெல்லாம், அனைத்து தரப்பு மக்களும் செய்ய கூடியவை தான் என்றாலும் கூட, ஒரு சில ஜோடிக்கள், விருந்தினரை ஈர்க்க இன்னும் வித்தியாசமான முயற்சிகளை கையாளுவார்கள்.
ஸ்டண்ட் ஜோடிக்கு திருமணம்
அமெரிக்காவில் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கபே ஜேஸஃப் மற்றும் ஆம்பிர் பாமிர் என்ற ஜோடியும், வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். தொழில் ரீதியாக இவர்கள் இருவருமே ஸ்டண்ட் கலைஞர்கள் ஆவர்.
ஆகவே, தங்கள் திருமணத்திலும் ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்றும், அது அனைத்து விருந்தினர்களையும் கவரக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் கையில் எடுத்த விஷயம் தான் ஃபயர் வாக் (Fire Walk).
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைத்து விருந்தினர்களும் சுற்றி நிற்க, சாகசம் நிறைந்த நிகழ்வுக்கு மணமக்கள் தயாராகினர். அவர்களது பின்பக்க ஆடையில் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சில அடி தூரத்துக்கு ஒய்யாரமாகவும், கொஞ்சம் வேகமாக நடைபோட்டு அவர்கள் அசத்தினர். ஏற்கனவே செய்து வைக்கப்பட்ட முன் ஏற்பாடுகளின்படி, தீயணைப்பான் பயன்படுத்தி அவர்களது ஆடையில் இருந்த தீ அணைக்கப்பட்டது.
View this post on Instagram
பிரம்மிப்பூட்டும் ஏற்பாடுகள்
பொதுவாக திருமண நிகழ்வுகளில் இதுபோல பிரம்மிப்பூட்டும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வது என்பது ஒரு ஃபேஷனாக மாறி வருகிறது. அவரவர் வசதிக்கு ஏற்ப இந்த ஏற்பாடுகள் மாறுபடுகின்றன. மணமக்கள் சிலர் ஹெலிகாப்டரில் வட்டமடிப்பது குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம்.
Also Read : ஊழியர்களுக்கு இலவச மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் மதுரை ஐடி நிறுவனம்!
வெளிநாட்டில் அண்மையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஏற்பாடு குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. “வானத்தில் இருந்து உனக்காக ஒரு தேவதை வருவாள்’’ என்று ஆண்களிடம் சொந்த, பந்தங்கள் வேடிக்கையாக சொல்வது உண்டு.
Also Read : திருமண மேடையில் ஒருவரை ஒருவர் சராமாரியாக அறைந்து கொண்ட மணமக்கள் - வைரல் வீடியோ
அதை மெய்ப்பிக்கும் வகையில், விருந்தினர்களுக்கு மத்தியில் மணமகள் வானத்தில் இருந்து தேவதையைப் போல இறங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, ஹீலியம் பலூன்களோடு இணைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து திருமண விழாவிற்கு மணப்பெண் அழைத்து வரப்பட்டார்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவ்வபோது வெளியாகும் இதுபோன்ற பிரம்மாண்ட அல்லது சாகச திருமண நிகழ்வுகள் வைரல் ஆகி வருகின்றன. அவற்றை பார்க்கும் பலரும் அதேபோன்று தங்களுக்கும் செய்ய வேண்டும் என்ற ஆசை பிறப்பதாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video, Wedding plans