ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கேன்சரால் பாதிக்கப்பட்ட தங்கையை நெகிழ வைத்த அண்ணன்! கலங்க வைக்கும் வீடியோ!

கேன்சரால் பாதிக்கப்பட்ட தங்கையை நெகிழ வைத்த அண்ணன்! கலங்க வைக்கும் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Emotional Video | தனது தங்கை ஒரு பெரும் நெருக்கடியை சந்தித்து இருக்கும் நேரத்தில் ஒரு அண்ணன் அவருக்காக துணை நிற்பதை காட்டும் வீடியோ ஒன்றை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குடும்பத்தில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் சகோதர உறவு என்பது உண்மையில் தனித்துவமானது அல்லவா.! ஏனென்றால் அற்ப விஷயங்கள் அல்லது சிறிய விஷயங்களுக்காக கூட எளிதில் மற்றும் தயக்கமின்றி சண்டை வர கூடிய ஒரே உறவு சகோதர உறவு தான்.

அது அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை, அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி என்று எந்த உறவாக இருந்தாலும் சரி. இந்த உறவுகள் சிறிய விஷயங்களுக்காக குடுமிப்பிடி சண்டையிட்டு கூழும் அதே நேரத்தில், ஒருவருக்கு ஆபத்து என்றால் மற்றவர்கள் துடித்து தான் போவார்கள். தனது சகோதர உறவு இக்கட்டான சூழலில் சிக்கி தவிக்கும் போது அவரை கவனித்து கொள்ள கூச்சப்படுவதில்லை. ஆபத்தின் போதோ அல்லது தேவைப்படும் நேரத்திலோ ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக துணை நிற்க சிறிதும் தயங்க மாட்டார்கள்.

சகோதர பாசம் முன் அனைத்தும் சிறியதாகிவிடும் என்று நிரூபிக்கும் வகையில், தனது தங்கை ஒரு பெரும் நெருக்கடியை சந்தித்து இருக்கும் நேரத்தில் ஒரு அண்ணன் அவருக்காக துணை நிற்பதை காட்டும் வீடியோ ஒன்றை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். உலகிலேயே மிகவும் கொடிய நோயாக பார்க்கப்பட்டு வருவது கேன்சர். வயது வித்தியாசம் இன்றி சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் எப்போது வேண்டுமானாலும் தாக்க கூடிய கொடூர நோயாக இருக்கிறது.

Also Read : எனக்கும் பலூன் கொடுங்க... காத்திருந்து பலூனை வாங்கிய நாயின் க்யூட் வீடியோ

பல வகை கேன்சர் இருந்தாலும் இந்த பாதிப்பை முதல் 2 கட்டத்தில் கண்டறிந்து விட்டால் தகுந்த சிகிச்சை அளித்து எளிதில் குணப்படுத்திவிடலாம். தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க உயிருக்கு ஆபத்தும் அதிகம். இந்த நிலையில் தன் அன்பு தங்கை கேன்சரால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதை கண்ட மூத்த சகோதரன் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், உறுதுணையாக தான் அவருடன் நிற்பதை வெளிப்படுத்தும் வகையிலும் செய்துள்ள செயல் காண்போரை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாக்களில் வெகுவாக வைரலாகி வருகிறது.

Also Read : இந்தப் படத்தில் மறைந்திருக்கும் 7 விஷயங்களை 15 நொடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

அந்த வைரல் வீடியோவில், கேன்சருடன் போராடி வரும் தனது தங்கையின் தலை முடியை ட்ரிம்மர் கொண்டு முழுவதுமாக மொட்டை அடித்து விடுகிறார் அந்த சகோதரர். முழுவதுமாக மொட்டை அடித்து முடித்த பின் தனது சகோதரியின் தோளை தட்டி திரும்பி பார்க்க சொல்லி சிரித்து கொண்டே தனது தலைமுடியை அதே ட்ரிம்மர் கொண்டு ட்ரிம் செய்கிறார். இதனை பார்த்து உணர்ச்சிவசப்படும் அந்த தங்கை கண்களில் கண்ணீர் மல்க சகோதரனை அரவணைத்து கொள்கிறார்.

அண்ணனின் சமாதானத்தை தொடர்ந்து சில வினாடிகள் கழித்து சேரில் இருந்து எழும் அந்த சகோதரி, கண்களில் கண்ணீருடன் தனது அண்ணனை அமர வைத்து தலையை மொட்டை அடிக்க உதவி செய்கிறார். தனது தங்கைக்கு ஒரு பிரச்னை என்று தெரிந்ததும் ஆறுதல் சொல்வதோடு நிற்காமல் அவளது வலியில் தானும் பங்கேற்று அவரை அதிலிருந்து வெளிவர ஊக்குவிக்க நினைத்த அண்ணனை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை... தற்போது வரை இந்த வைரல் வீடியோ 853.4K மேற்பட்ட வியூஸ்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பிறகு பல யூஸர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், சிலர் இந்த வீடியோவைப் பார்த்து கண்கலங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Viral Video