வீடற்ற மனிதனுக்கு முடி வெட்டி, சுத்தம் செய்து ஸ்டைலாக மாற்றிய ஹேர் டிரெஸ்ஸர் - வைரலாகும் வீடியோ!
வீடற்ற மனிதனுக்கு முடி வெட்டி, சுத்தம் செய்து ஸ்டைலாக மாற்றிய ஹேர் டிரெஸ்ஸர் - வைரலாகும் வீடியோ!
வைரலாகும் வீடியோ
தற்போதைய காலகட்டத்தில் இரக்கம், பெருந்தன்மை, தாராள மனப்பான்மை உள்ளிட்ட நற்குணங்களை வெகு சிலரிடம் மட்டுமே காண முடிகிறது. மனிதர்களுக்கு மனிதர்களே எதிரியாக இருக்கும் இந்த நேரத்தில் தன்னலமற்று பிறருக்கு கருணை உள்ளத்துடன் சேவை மற்றும் உதவிகள் செய்வதை பார்க்கும் போது நாம் நெகிழ்கிறோம்.
தற்போதைய காலகட்டத்தில் இரக்கம், பெருந்தன்மை, தாராள மனப்பான்மை உள்ளிட்ட நற்குணங்களை வெகு சிலரிடம் மட்டுமே காண முடிகிறது. மனிதர்களுக்கு மனிதர்களே எதிரியாக இருக்கும் இந்த நேரத்தில் தன்னலமற்று பிறருக்கு கருணை உள்ளத்துடன் சேவை மற்றும் உதவிகள் செய்வதை பார்க்கும் போது நாம் நெகிழ்கிறோம்.
சோஷியல் மீடியாவில் இதுபோன்ற காட்சிகள் ஷேர் செய்யப்படும் போது அது உலகளவில் வைரலாகி விடுகிறது. இதுபோன்ற வைரல் வீடியோக்கள் மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த உதவுகிறது. தற்போது அப்படிப்பட்ட ஒரு வைரல் வீடியோவைப் பற்றி தன பார்க்க போகிறோம். நாம் சாலைகளில் செல்லும் போது வீடற்ற பல மனிதர்களை பார்க்க நேரிடும். நமக்கு மனது அன்று நன்றாக இருந்தால் அல்லது முடிந்தால் காசு அலல்து உண்ணும் பொருட்களை கொடுத்து உதவி அவர்களை கடந்து சென்று விடுவோம்.
வீடற்ற ஒரு நபரின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை அல்லவா? வீடின்றி நாடோடியாக சுற்றி திரியும் நபர் ஒருவரின் தோற்றத்தை முற்றிலும் ஸ்டைலாக மாற்றி அவரின் முகத்தில் புன்னகையை வர வைக்க முயற்சித்துள்ளார் முடிதிருத்தும் கலைஞர் ஒருவர். லைட் வொர்க்கர்ஸ் என்ற ஃபேஸ்புக் பேஜில் வெளியிடப்பட்ட வீடியோவில், ஒரு முடிதிருத்தும் நபர் வீடற்ற மனிதனிடம் ஒரு பைசா கூட வசூலிக்காமல் அவருக்கு ஒரு அற்புதமான தோற்றத்தை அளித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த வைரல் வீடியோவில் ஒரு வீடற்ற மனிதன் அழுக்கான தலைமுடி மற்றும் தாடியுடன் காணப்படுகிறார். மேலும் பார்த்தாலே தெரிகிறது அவர் குளித்து பல நாள் ஆகிறது என்று அவரது லுக்கை மாற்ற நினைக்கும் அந்த முடிதிருத்தும் நபர் அவரை ஒரு ஆடம்பர சலூனுக்கு அழைத்து சென்று, அவருக்கு ஹேர்கட் மற்றும் ஷேவ் செய்வதை கீழ்காணும் வீடியோவில் காணலாம்.
ஹேர் கட், ஷேவ் மற்றும் பியர்ட் ட்ரிம்மிங் மற்றும் ஷேப்பிங் செய்து விட்டதோடு அந்த வீடற்ற மனிதரை சோப்பு போட்டு நன்றாக குளிக்கவும் உதவி செய்கிறார் முடிதிருத்தும் கலைஞர். கடைசியாக அவரது புதிய லுக்கிற்கு இன்னும் அழகு சேர்க்கும் வகையில் ஒரு ஸ்டைலான ஜாக்கெட்டையும் வழங்கி, ஷூ மற்றும் ஷாக்ஸ் முதற்கொண்டு அவருக்கு போட்டு விடுகிறார்.
இதற்கிடையே சலூன் கடையின் கண்ணாடியில் தனது புதிய தோற்றத்தை பார்த்து ஒருகணம் ஷாக்காகி என்ன சொல்வது என்று சொல்ல முடியாமல் திகைத்து போய் தன்னை பார்த்தபடியே இருக்கிறார் அந்த வீடற்ற மனிதர். வீடற்று அழுக்காக காணப்பட்ட அந்த நபரை மிகவும் ஸ்டைலான நபராக மாற்றி சலூனிலிருந்து முடி திருத்தும் கலைஞர் வழியனுப்பி வைக்கும் இந்த வீடியோவிற்கான கேப்ஷன் என்ன தெரியுமா "இரண்டு அழகான ஆத்மாக்கள், உள்ளேயும் வெளியேயும்" (“Two Beautiful Souls, Inside and Out").. உண்மை தானே..
viral video : வைரல் வீடியோவில் ஒரு வீடற்ற மனிதன் அழுக்கான தலைமுடி மற்றும் தாடியுடன் காணப்படுகிறார். மேலும் பார்த்தாலே தெரிகிறது அவர் குளித்து பல நாள் ஆகிறது என்று அவரது லுக்கை மாற்ற நினைக்கும் அந்த முடிதிருத்தும் நபர் அவரை ஒரு ஆடம்பர சலூனுக்கு அழைத்து சென்று, அவருக்கு ஹேர்கட் மற்றும் ஷேவ் செய்வதை கீழ்காணும் வீடியோவில் காணலாம்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.