Home /News /trend /

கொட்டும் மழையில் குதூகலத்துடன் நிகழ்ந்த திருமணம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா.?

கொட்டும் மழையில் குதூகலத்துடன் நிகழ்ந்த திருமணம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா.?

Viral Video

Viral Video

Viral Video | சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக திருமணத்திற்கு இடையூறு வந்தால் என்ன செய்வது? நாம் ஏற்பாடு செய்த அனைத்தையும் வீணாகிவிடுமோ? என யோசிப்போம்.. தற்போது இதுப்போன்ற ஒரு நிலை தான் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நிகழ்ந்தது. ஆனால் இவர்கள் சற்றும் யோசிக்காமல் திருமணத்திற்காக செய்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் டிரெண்டாகிவருகிறது.

மேலும் படிக்கவும் ...
    திருமணங்கள் அனைத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஒரு வீட்டில் திருமண நிகழ்விற்கானப் பேச்சுகள் தொடங்கினாலே அங்கு விழாக்கோலம் தான்.. அதிலும் திருமணத் தேதி முடிவாகிவிட்டது என்றால் சொல்லவா வேண்டும்? ஒரு மாதத்திற்கு முன்னரே மணமகன், மணமகளுக்கு ஆடை எடுப்பது, நகைகள் வாங்குவது, பத்திரிக்கைள் அடிப்பது என கோலக்கலமாகத் தான் இருக்கும்.

    நல்ல படியாக தன் மகனோ? அல்லது மகளுக்கோ? திருமணத்தை நடத்த வேண்டும் என்ற ஆசையில் பெற்றோர்கள் இருக்கும் சூழலில், ஏதோ காரணத்தினால் தடங்கல் ஏற்பட்டால் இதுவரை எடுத்த அனைத்து முயற்சிகளும் முற்றிலும் வீணாகிவிடும். இது அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தான் கொடுக்கும். இதனால் தான் எந்த இடையூறும் வரக்கூடாது என வேண்டிக்கொள்வார்கள்..

    சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக திருமணத்திற்கு இடையூறு வந்தால் என்ன செய்வது? நாம் ஏற்பாடு செய்த அனைத்தையும் வீணாகிவிடுமோ? என யோசிப்போம்.. தற்போது இதுப்போன்ற ஒரு நிலை தான் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நிகழ்ந்தது. ஆனால் இவர்கள் சற்றும் யோசிக்காமல் திருமணத்திற்காக செய்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் டிரெண்டாகிவருகிறது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் திருமண வரவேற்பு மற்றும் மணமக்கள் ஊர்வலத்திற்காக இசைக்குழுவிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆனால் விசேஷ தினத்தன்று எதிர்பாரதவிதமாக மழை வெளுத்து வாங்கியுள்ளது. கனமழையில் எப்படி திட்டமிட்ட நிகழ்ச்சிகளை நடத்த முடியும்? என்ற யோசனைக் கூட வரவிடாமல், திருமண வீட்டார் செய்த ஏற்பாடு அமைந்துவிட்டது. கொட்டும் மழையிலும் இசை வாத்தியங்களோடு திருமண ஊர்வலத்தை நடத்தியதோடு, உறவினர்கள் நனையாமல் இருப்பதற்காக பெரிய தார்பாய் கொடுத்துவிட்டனர். பின்னர் உறவினர் திருமண ஊர்வலத்தில் மழையில் நனையாமல் மூடிக்கொண்டே நடந்து சென்றனர். இந்த திருமண ஊர்வல வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.



    மேலும் ட்விட்டரில் இதனை பார்த்த நெட்டிசன்கள், இது போன்ற வித்தியாசமான யோசனை இந்தியர்களுக்கு மட்டுமே வரும் எனவும், என்ன மழை பெய்தாலும் பெண்ணை பத்திரமாக அழைத்துச் செல்வோம் என கருத்துக்களைப் பகிர்வதோடு, கலாய்க்கும் படி ஈமோஜிகளையும் ட்விட் செய்து வருகின்றனர். மேலும் உங்களுக்கு என்ன தெரியும்? எத்தனை செலவு செய்து திருமணத்தை நடத்தியிருப்பார்கள் எனவும் புத்திசாலிதனமான யோசனை, நல்லா என்ஜாய் பண்ணுங்க.. என்பது போன்ற பதிவுகளையும் நெட்டிசன்கள் டிவிட் செய்துவருகின்றனர். இதோடு கனமழை காலம் என்பதாலே திருமண வீட்டார்கள் பெரிய தார்பாய்க்கு ஆர்டர் செய்திருப்பார்களோ? எனவும் கேள்வி கேட்டுள்ளனர்.

    Also Read : அட இப்படி கூட சாப்பிடலாமா.? ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த வீடியோ வைரல்.!

    சமீப காலங்களாக இந்தியாவில் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் வித்தியாசமாக நடைபெறும் திருமணங்கள் எல்லாம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக கேரள மாநிலம் ஆலாப்புழாவில் கடந்தாண்டு பெய்த கனமழையால் திருமணம் நடைபெறவுள்ள கோயிலுக்கு செல்ல முடியாத தம்பதிகளை, ஒரு பெரிய வெண்கல பாத்திரத்தில் வைத்து வெள்ள நீரில் கோவிலுக்கு அழைத்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் 60 அடி ஆழத்தில் காதலர்கள் மேற்கொண்ட திருமணம் என வித்தியாசமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Marriage, Trending, Viral Video

    அடுத்த செய்தி