முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சேற்றில் சிக்கிய வாகனத்தை பொம்மை ட்ராக்ட்டர் கொண்டு இழுக்கும் குழந்தை - ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!

சேற்றில் சிக்கிய வாகனத்தை பொம்மை ட்ராக்ட்டர் கொண்டு இழுக்கும் குழந்தை - ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!

பொம்மை ட்ராக்ட்டர் கொண்டு இழுக்கும் குழந்தை

பொம்மை ட்ராக்ட்டர் கொண்டு இழுக்கும் குழந்தை

சிறுவன் தனது மஹிந்திரா பொம்மை டிராக்டரில் கட்டப்பட்ட கயிற்றின் உதவியுடன் சிக்கிய எக்ஸவேட்டாரை இழுக்க முயற்சிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

ஆனந்த் மஹிந்திரா சிறந்த தொழில் அதிபராக இருப்பது மட்டுமல்லாமல், ட்விட்டரில் ஒரு ராக்ஸ்டாராகவே இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெற்றிகரமான வணிக சாம்ராஜ்யத்தை எவ்வாறு நடத்துவது என்பதை தெரிந்து வைத்திருப்பதுடன், தனது சமூக ஊடகப் பக்கத்தில் தன்னை பின்தொடர்பவர்களையும் ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்கான வழிகள் குறித்து ஆனந்த் மஹிந்திரா தெரிந்து வைத்திருக்கிறார்.

இவர், பல ரசிக்கும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தொழிலதிபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறுவன் தனது சிறிய பொம்மை டிராக்டரின் உதவியுடன் சேறும் சகதியுமான சாலையில் சிக்கிய எக்ஸவேட்டாரை வெளியே இழுக்க முயற்சிக்கும் ஒரு அழகான வீடியோவை வெளியிட்டார். இளம் குழந்தைகளில் தன்னம்பிக்கையை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த இந்த வீடியோ பெற்றோருக்கான சரியான பாடமாக இருக்கலாம் என அவர் பகிர்ந்துள்ளார்.

சிறுவன் தனது மஹிந்திரா பொம்மை டிராக்டரில் கட்டப்பட்ட கயிற்றின் உதவியுடன் சிக்கிய எக்ஸவேட்டாரை இழுக்க முயற்சிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. குழந்தை தனது டிராக்டரை ஓட்டத் தொடங்கும் போது, ​​அதனுடன் இணைக்கப்பட்ட எக்ஸவேட்டாரும் பின்தொடர்கிறது. உண்மையில் எக்ஸவேட்டாரில் இருக்கும் ஓட்டுநர் சிறுவனின் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் வாகனத்தை மிக பொறுமையாகவும் கவனமாகவும் நகர்த்துவதை வீடியோவில் பார்க்கலாம்.

அந்த வீடியோவை பகிர்ந்ததோடு ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளதாவது, "உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்க இது ஒரு சிறந்த வழி. ஆனால் உங்களில் எவரேனும் எங்கள் பொம்மை மஹிந்திரா டிராக்டருடன் இதை முயற்சி செய்தால், இந்தப் பெற்றோர் போல எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!” என கேப்ஷன் செய்திருந்தார்.

இந்த வீடியோ விரைவில் சமூக ஊடக தளத்தில் வைரலானது. சுமார் 4.2 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் கிட்டத்தட்ட 30,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. இளம் குழந்தையை ஊக்குவிக்கும் புதுமையான யோசனை, பாராட்டத்தக்கது என நெட்டிசன்கள் கருது தெரிவித்து வருகின்றன. அதில் ஒரு ட்விட்டர் யூசர் கருத்து பதிவிட்டதாவது, "அந்த குழந்தையின் வெளிப்பாடுகளைப் பார்க்கவும், அவர் ராட்சத இயந்திரத்தை இழுத்துவிட்டார் என்பதில் உறுதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார்." என்று எழுதினார்.

Also read... மொபைலில் கேம் விளையாடி கொண்டிருந்தபோது தவறுதலாக ரூ.64,900-க்கு ஐஸ்கிரீம், கேக்குகள் ஆர்டர் செய்த சிறுவன்

இருப்பினும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான இந்த யோசனை நல்ல நோக்கத்திற்கு உதவாது என்றும், சிறுவன் யதார்த்தத்திலிருந்து விலகி பல விபரீத எண்ணங்களுடன் வளரக்கூடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். சிலர் அதை ஆபத்தான செயல் என்றும் கருதினர். அதில் ஒரு ட்விட்டர் யூசர் பதிவிட்டதாவது, “பல விஷயங்களுக்காக உங்களைப் பாராட்டுகிறேன் சார். ஆனால் இது மிகவும் ஆபத்தானது... இந்த முறையில் உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மதிப்புக்குரியது அல்ல." என்று குறிப்பிட்டிருந்தார்.

மஹிந்திரா குழுமம் 2019 இல் "வளரும் விவசாயிகளுக்காக" மின்சார பொம்மை டிராக்டரை வெளியிட்டது. மோட்டார் பொருத்தப்பட்ட டிராக்டர் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது குறித்த ட்வீட்டை பின்வருமாறு காணலாம்.

First published:

Tags: Anand Mahindra, Parenting, Video