மனிதர்கள் நாயை போன்று வாழலாம் என்று நினைத்து பார்க்க முடிகிறதா? ஆனால் அமெரிக்காவை சேர்ந்த 31 வயதான இளைஞர் கடந்த ஒராண்டு காலமாக நாய் போன்று நடந்து செல்கிறார். கடந்த ஒராண்டு காலமாக தினமும் சுமார் 30 நிமிடங்கள் இவ்வாறு நாய் போன்று நடப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இளைஞர் நாதானியேல் தெரிவிக்கும் தகவல் கேட்போரை சுவாரஸ்சிமாக்கியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் பதிவிட்டதோடு தற்போது வைரலாகியும் வருகிறது. ஏன் இவ்வாறு செய்கிறார்? என்பது குறித்து இங்கே நாமும் அறிந்து கொள்வோம்.
அமெரிக்காவை சேர்ந்த நாதனியேல், பெர்சனல் பயிற்சியாளராக உள்ளார். இவர் தனது கை, கால்களை குனிந்தபடி நாய் போன்று புல் வெளி முழுவதும் சுற்றி இறுதியில் தனது அறையை வந்தடைகிறார். இவ்வாறு நான்கு கால்களில் நடக்கும் போது, உடலில் பல அதிசய மாற்றங்களை செய்துள்ளதாக கூறும் இவர், ஜிம்மிற்கு செல்வோர் அனைவரும் இதை முயற்சிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார். ஏனென்றால் அதிக தீவிரமான உடற்பயிற்சியின் போது மூட்டு வலியுடன் போராடிய இவர், தனது வலிமை மற்றும் உடலின் வளைந்து கொடுக்கும் தன்மையை மீட்டெடுக்க இந்த முயற்சியை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
பொதுவாக யார் புதிய விஷயங்களை கடைப்பிடித்தாலும் பல விமர்சனம் வரக்கூடும். அதை போல தான், நாய் போன்று நடக்கும் அமெரிக்க இளைஞர் குறித்து இணையத்தில் மக்கள் கேளிக்கையாக பேசி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பதிலளிக்கும் நாதனியேல், என்னுடைய உடல் நலத்திற்காக, நான் மேற்கொள்ளும் இந்த முயற்சி குறித்து யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. எப்படி பார்க்கிறார்கள்? என்ற கவலை இல்லை. என்னுடைய வாழ்க்கைக்கு என்ன தேவையோ? அதைத்தான் நான் செய்கிறேன் என்கிறார்.
மேலும் பொது வெளியில் வந்து நாய் போன்று நடக்கும் போது தான் விமர்சனங்கள் அதிகளவில் வருகிறது. ஆனாலும் இவ்வாறு மேற்கொள்ளும் போது என்னுடைய இயல்பு வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. எனவே தான் நாய் போன்று நடப்பதைத் தினமும் சுமார் 30 நிமிடங்கள் மேற்கொள்கிறேன் எனவும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் நிச்சயம் இதை பின்பற்றுங்கள் என்கிறார்.
Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ
இன்ஸ்டாவில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நாய் போன்று வெளியில் நடந்து செல்வதை நினைத்து பார்க்கவே முடியவில்லை எனவும், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன சொல்வார்கள்? குழந்தைகள் தான் இதனை மிகவும் விரும்புவார்கள் எனவும் இதுப்போன்ற சுவாரஸ்சிய விஷயங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வித்தியாசமான அனுபவங்களைத் தான் கொடுக்கும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் நாய் போன்று நடப்பது என்பது ரொம்ப கஷ்டம் தான் ப்பா… என்பது போன்ற பதிவுகளோடு ஈமோஜிகளையும் இன்ஸ்டாவில் இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.