Home /News /trend /

நீருக்கடியில் பட்டொளி வீசிய தேசியக்கொடி... இந்திய கடலோர காவல்படையின் அசத்தல் வீடியோ.! 

நீருக்கடியில் பட்டொளி வீசிய தேசியக்கொடி... இந்திய கடலோர காவல்படையின் அசத்தல் வீடியோ.! 

Viral Video

Viral Video

Viral Video | நாட்டுப்பற்றை பறைச்சாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்கள், காவல் துறையினர், கடலோர காவல் படையினர் ஆகியோர் வித்தியாசமான சாகசங்களை செய்து வருகின்றனர். தற்போது இந்திய கடலோர காவல் படை நீருக்கடியில் தேசியக்கொடியை நிலை நிறுத்திய வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது

மேலும் படிக்கவும் ...
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமரும், பிற மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றுவார்கள். எனவே சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சுதந்திர தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் தடுக்கும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் சுதந்திர தினத்திற்கான மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறைக்கைதிகள் முதல் பள்ளிச் சிறுவர்கள் வரை பலரும் தங்களுக்கே உரித்தான பாணியில் தேசியக்கொடிகளை தயாரித்து அசத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலமாக ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற இயக்கத்தை மக்கள் பேரியக்கமாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பிரச்சாரத்தின் படி, ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் தங்களது சோசியல் மீடியா டி.பி.க்களில் தேசியக்கொடியின் படத்தை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் தொடக்கமாக நேற்று பிரதமர் மோடியின் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியா அக்கவுண்ட்களின் டி.பி. மாற்றப்பட்டு, தேசியக்கொடியின் புகைப்படம் வைக்கப்பட்டது.

இதனிடையே நாட்டுப்பற்றையும், தேசியக்கொடியின் மரியாதையையும் பறைசாற்றும் விதமாக பல்வேறு சம்பவங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நாட்டுப்பற்றை பறைச்சாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்கள், காவல் துறையினர், கடலோர காவல் படையினர் ஆகியோர் வித்தியாசமான சாகசங்களை செய்து வருகின்றனர். தற்போது இந்திய கடலோர காவல் படை நீருக்கடியில் தேசியக்கொடியை நிலை நிறுத்திய வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை 29ம் தேதி அன்று, இந்திய கடலோர காவல்படை நீருக்கடியில் தேசியக்கொடயை ஏற்றி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. நீருக்கடியில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ​​இந்திய கடலோரக் காவல்படை ‘“ஹர் கர் திரங்கா’ (இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) ‘ஆஜாதி கா அமிர்த மஹோத்ஸ்வ இயக்கம் மற்றும் இந்தியாவின் 75வது சுதந்திரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய கடலோர காவல்படை கடலுக்கடியில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை நடத்தியுள்ளது. இந்த முயற்சி மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டும்” என பதிவிட்டுள்ளது.

Also Read : ராணுவ வீரரின் கால்களை தொட்டு வணங்கிய சிறுமி - இதயத்தை கொள்ளையடிக்கும் வீடியோ

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த வீடியோ குறித்து கமெண்ட் செய்துள்ள யூஸர் ஒருவர், ‘இதுவே தேசியக்கொடியை கொண்டாடுவதற்கான சிறந்த முறை’ என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “எங்களில் சிலருக்கு ஒரு திரைப்படத்திற்கு முன் திரையரங்குகளில் எழுந்து நிற்கவோ அல்லது தேசபக்தியை உணர தீவிரமான எதையும் செய்யவோ தேவையில்லை! எங்களுக்கு இயற்கையாகவே தேசப்பற்று உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ

2021 ஆம் ஆண்டில், மத்திய அரசு ‘இந்தியக் கொடி குறியீடு 2002’-யில் கொண்டு வரப்பட்ட திருந்தங்களின் படியே, செயற்கை துணியால் செய்யப்பட்ட மற்றும் இயந்திரத்தால் செய்யப்பட்ட கொடிகளை வாங்கவும் தயாரிக்கவும் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அதற்கு முன்னதாக, மூவர்ணக் கொடி பருத்தி, கையால் நெய்யப்பட்ட துணியால் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை கட்டயமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Independence day, Trending, Viral Video

அடுத்த செய்தி