பிஸியான தெருவில் கூலாக வாக் போன முதலை..! - வைரல் வீடியோ

பிஸியான தெருவில் கூலாக வாக் போன முதலை..! - வைரல் வீடியோ
  • Share this:
மாண்ட்ரீல் மாகணத்தில் போக்குவரத்து நெரிசலான நேரத்தில் முதலை ஒன்று எந்தவித சலசலப்புமின்றி சாலையில் சென்ற வீடியோ இணையத்தி்ல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸின் மாண்ட்ரீல் மகாணத்தில் வசிக்கும் மெய்சம் சமஹா என்ற பெண்மணி இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மெய்சம் சமஹா பதிவு செய்துள்ள வீடியோவில் முதலை ஒன்று சாலையில் கூலாக நடந்து சென்று அங்கிருக்கும் காரின் அடியில் சென்று மறைந்து விடுகிறது.

இந்த வீடியோவை மதியம் சுமார் 1 மணிக்கு எடுத்துள்ளார். ஜெரி தெருவிலிருக்கும் காபி ஷாப்பிற்கு அவர் சென்ற போது முதலை நடந்து சென்றததை பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே அதை வீடியோ எடுத்தது உடன் இது தொடர்பாக காவல்துறைக்கும் அவர் தகவல் கொடுத்துள்ளார்.

Also Read :  இணையத்தில் வைரலாகும் அமீர் கான் மகள் ஐரா கானின் கவர்ச்சி போட்டோ ஷூட் 

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து மாண்ட்ரீல் மாகண மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். ஆனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், இதுப்போன்ற சம்பவங்களின் போது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மகாண மேயரும், காவல்துறையினரும் கூறி உள்ளனர்.
First published: December 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading