தனது உரிமையாளரை போலவே யோகாவில் அசத்தும் நாய் - நெட்டிசன்கள் வியப்பு!

தனது உரிமையாளரை போலவே யோகாவில் அசத்தும் நாய்

உரிமையாளர் செய்யும் யோகா அசைவுகளை அச்சு பிசகாமல் செய்யும் நாய், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இணைத்தில் வைரலாகியுள்ள வீடியோ ஒன்றில் உரிமையாளர் செய்யும் யோகா அசைவுகளை, நாயும் அச்சுபிசகாமல் செய்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் ஏதாவதொரு வீடியோ இணையத்தில் வைரலாகிக்கொண்டே இருக்கும். குறிப்பாக, நாய்க்குட்டிகளின் சேட்டை மற்றும் சாகச வீடியோக்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அந்தவகையில், இந்த வைரல் வீடியோ லிஸ்டில் ஆஸ்திரேலியன் செப்பர்டு நாய் ஒன்று இடம்பிடித்துள்ளது. உரிமையாளர் செய்யும் யோகா அசைவுகளை அச்சு பிசகாமல் செய்யும் நாய், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டில் வளர்க்கும் நாய்கள் பொதுவாக பந்துவிளையாடும், நீச்சல் குளத்தில் நீத்தும், உயரமான இடத்தில் இருந்து தாவிக் குதிக்கும். இதுபோன்ற வீடியோக்களை ஏராளமாக பார்த்திருப்போம். சில நேரங்களில் மட்டுமே வியக்க வைக்கும் அல்லது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நாய்களின் சேட்டைகளை காண முடியும். ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு நாயின் யோகா வீடியோவை அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ரெக்ஸ் சாம்பியன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also read... லாக்டவுனால் முடங்கிய மக்கள் - நம்பிக்கை தரும் புல்லாங்குழல் விற்பனையாளரின் கதை!

ஏற்கனவே ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ள அந்த வீடியோ, தற்போது மேலும் வைரலாகியுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு நாயின் உரிமையாளர் மேரி, யோகா செய்வதற்காக படுக்கயை விரிக்கிறார். அவருடன் இணைந்து தனக்கான படுக்கையையும் விரிக்கும் நாய் சீக்ரெட்(Secret), அதன்பிறகு அவர் செய்யும் யோகா அசைவுகளை அப்படியே செய்கிறது. பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் இந்த வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் வியப்படைந்துள்ளனர். லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.நாய் சீக்கரெட், யோகா செய்வது மட்டுமின்றி கிட்டார், டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளையும் லாவகமாக இசைக்கிறது. சில நெட்டிசன்கள், நாயின் யோகாவைப் பார்த்து, தங்களைவிட சிறப்பாக நாய் செய்வதாக கூறியுள்ளனர். இன்னும் சிலர், தங்கள் வீட்டில் இருக்கும் நாய், விளையாட அழைத்தால் கூட கடித்து வைப்பதாக நகைச்சுவையாக கூறியுள்ளனர். என்னைப்போலவே நாயும், இதுபோன்ற சாகசங்களை செய்யாது, உலகம் வேலைக்கு சென்றபிறகு தான் நாங்கள் இருவரும் விழிப்போம் என்றெல்லாம் காமெடியாக கமெண்ட் அடித்துள்ளனர்.

மேரி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அதில் அவருக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். தான் வளர்க்கும் நாய் சீக்கரெட்டுடன் செய்யும் வித்தியாசமான வீடியோக்களை அதில் பதிவிட்டு வருகிறார். ஏற்கனவே கூறியதுபோல், சீக்கரெட் வாசிக்கும் டிரம்ஸ் மற்றும் கிட்டார் வீடியோக்களை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களும் யோகா வீடியோவுக்கு இணையாக நல்ல வரவேற்பை பெற்றன. இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அதிக பின்தொடர்பாளர்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் அதிக பணத்துடன் கூடிய விளம்பரம் கொடுப்பதால், சுவாரஸ்யமான வீடியோக்களை பதிவேற்றுவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: