முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / காலையில் பள்ளி, மாலையில் Zomotoவில் வேலை.. குடும்பத்தை காக்க விபத்தில் சிக்கிய தந்தையின் வேலையை செய்யும் சிறுவன்- வைரல் வீடியோ

காலையில் பள்ளி, மாலையில் Zomotoவில் வேலை.. குடும்பத்தை காக்க விபத்தில் சிக்கிய தந்தையின் வேலையை செய்யும் சிறுவன்- வைரல் வீடியோ

Trending

Trending

Trending | வடமாநிலத்தை சேர்ந்த 7 வயதான சிறுவன், தனது தந்தை விபத்து ஒன்றில் காயமடைந்த நிலையில், நிர்கதியாய் நின்ற குடும்பத்தைக்காப்பாற்ற Zomato டெலிவரி பாயாக பணிபுரிவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேர் தந்தை தான். படிக்காதவராக இருந்தாலும் தனக்கு என்ன வேலை தெரியுமோ அனைத்து வேலைகளையும் செய்து குழந்தைகள் உள்பட குடுபத்தினர் அனைவரையும் காக்கும் கரங்கள் கொண்ட பெருமைக்குரியவர். இவர் இல்லையென்றால் சில நாட்களுக்கு குடும்பம் நிர்கதியாய் நின்றுவிடும் என்ற கூற்று உண்மை தான். அப்படியொரு சம்பவம் தான் வடமாநிலத்தில் அரங்கேறி அனைவரையும் கலங்க செய்துள்ளது.

வட மாநிலத்தை சேர்ந்த 7 வயதான சிறுவன், தந்தை விபத்தில் காயமடைந்த நிலையில், நிர்கதியாய் நின்ற குடும்பத்தைக் காப்பதற்காக தந்தையின் வேலையை செய்துவருகிறார். பள்ளி சென்று திரும்பியதும் Zomato வில் டெலிவரி ஏஜென்டாக பணிபுரிந்தாலும் இதுவரை வெளிச்சத்திற்கு வராத இவரை சமூகத்திற்கு வெளிக்கொணர்ந்தார் ஒரு டிவிட்டர் யூசர்.

ராகுல் என்ற டிவிட்டர் யூசர், “இந்த 7 வயது சிறுவன் தனது தந்தையின் வேலையைச் செய்கிறான்“ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றைப்பதிவிட்டுள்ளார். வாடிக்கையாளருக்கும் சிறுவனுக்கும் இடையிலான உரையாடலின் போது, சிறு வயதில் என்ன நீங்கள் வேலைப்பார்க்கிறாயா என்று கேட்டதற்கு, தனது தந்தை விபத்தில் சிக்கியதால், Zomato டெலிவரி ஏஜென்டாக வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது என்றார். காலையில் பள்ளிக்கு செல்வதாகவும் பின்னர் மாலை 6 மணிக்கு மேல் Zomato டெலிவரி ஏஜென்டாக பணியில் சேர்ந்து தொடர்ந்து இரவு 11 மணி வரை பணிபுரிவதாகவும் வீடியோவில் கூறியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த டிவிட்டர் யூசர் ஒருவர், இப்போதாவது சிறுவனின் பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததாகவும், இதுப்போன்று டெலிவரி வேலை செய்யும் பணிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், இதையெல்லாம் நிறுத்துவதற்கு கார்ப்பரேட் பாலிசி தேவை என்று பதிவிட்டிருந்தார்.

Also Read : மலைப்பாம்பிடம் அகப்பட்ட நாயை உயிரை பணயம் வைத்து மீட்ட சிறுவர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

மற்றொரு பயனர் ஒருவர், சிறுவனின் இந்த நிலைக்குறித்த வீடியோவைப்பார்த்து அழுதுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த குழந்தை துணிச்சலான மற்றும் கடின உழைப்பாளி எனத் தெரிவித்துள்ளார். இவருக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் யாராவது தொடர்பு விபரங்கள் இருந்தால் பகிருங்கள் எனவும் அச்சிறுவனின் கல்விக்கு உதவ விரும்புகிறேன் என்று டிவிட் செய்துள்ளார்.

Also Read : விமானத்தில் பிரேக்ஃபாஸ்ட் கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்.!

top videos

    மேலும் கையில் டெலிவரி செய்யும் உணவையும், முதுகில் பையோடு வலம் வரும் சிறுவனின் வீடியோ நெஞ்சை ரணமாக்குகிறது என்றும் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களையும் டிவிட் செய்துவருகின்றனர். மேலும் டெலிவரி ஏஜெண்டாக பணிபுரியும் சிறுவனின் கல்விக்கு உதவ Zomato நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Trending, Viral Video, Zomato