வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு - நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தாம்பூலப் பை!

வண்ணாரப்பேட்டை போராட்டம்
- News18 Tamil
- Last Updated: February 26, 2020, 7:57 PM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வரும் மேடையில் பாக்கியலட்சுமி என்ற இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், என்.ஆர்.சி, என்.பி.ஆர் உள்ளிட்ட நடைமுறைகளை எதிர்த்தும் வண்ணாரப்பேட்டையில், சென்னையில் ஒரு ஷாகின்பாஃக்’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை முன்னெடுத்தனர் இஸ்லாமியர்கள். கடந்த 14-ம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடியில் முடிவடைந்ததை அடுத்து இப்போராட்டம் தொடர் போராட்டமாக மாறியது.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களுக்கு அப்பகுதியில் உள்ள இந்து மக்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில் போராட்டம் நடைபெறும் மேடையில் இந்து மதத்தைச் சார்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணி பெண்ணிற்கு இந்து முறைப்படி வளைகாப்பு நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய பெண்கள், பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்தும், அட்சதை தூவியும் வாழ்த்தினர்.
மேலும், வளைகாப்பு விழாவில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் “இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது அனைவரையும் நெகிழச்செய்தது.

முன்னதாக இந்தப் போராட்டத்தின் காரணமாக ஷயின்ஷா, சுமையா தம்பதிக்கு நடைபெறவிருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டு பின்னர், இங்குள்ள போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் அறிவுறுத்தலின்படி கடந்த 17-ம் தேதி மணமக்களுக்கு போராட்டக்களத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இந்த மணமகளை, மணமகனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை” என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பீகாரைப் போல் தமிழகத்திலும் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா? - முதலமைச்சர் பதில்