Home /News /trend /

Viral Video : மனதை உலுக்கும் சோகம்... உக்ரைன் பெண்மணியின் கண்ணீர் வீடியோ வைரல்!

Viral Video : மனதை உலுக்கும் சோகம்... உக்ரைன் பெண்மணியின் கண்ணீர் வீடியோ வைரல்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

தலைநகர் கீவ்-வில் ஏவுகணை தாக்குதலால் நொறுங்கி விழுந்த தனது வீட்டின் கண்ணாடி துண்டுகளை சுத்தப்படுத்தும் பெண் ஒருவர், கண்ணீர் சிந்திய படியே உக்ரைன் தேசிய கீதத்தை பாடுகிறார்.

உக்ரைன் போரில் பொது மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் அவர்களுடைய தைரியம் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது உக்ரேனிய பெண் ஒருவர் கண்ணீர் மல்க தேசிய கீதம் பாடிய படியே, தனது வீட்டில் உடைந்து கிடக்கும் கண்ணாடி சில்லுகளை அள்ளும் வீடியோ மனதை ரணமாக்குகிறது.

கடந்த சில வாரங்களாகவே உக்ரைனின் எல்லை பகுதியில் ரஷ்யா தனது படைகளை குவித்து வந்தது. உலக நாடுகள் அனைத்தும் போர் பதற்றத்துடன் உக்ரைனை உற்று நோக்கிக் கொண்டிருந்த சமயத்தில், கடந்த வியாழக்கிழமை ரஷ்யா போர் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஏவுகணை வீசி, உக்ரைன் தலைநகரில் உள்ள துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து 5வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்து வருகிறது. பெலாரூஸிலிருந்து யுக்ரேன் தலைநகரமான கீவ் மீது தரை வழி, வான் வழி மற்றும் கடல் வழியாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் உள்நாட்டு மக்கள் உயிருக்குப் பயந்து வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் :  பள்ளிக்கு மாணவர்கள் எடுத்த வந்த மொபைல்களை நெருப்பில் போட்டு எரித்த ஆசிரியர்கள் – வைரலாகும் வீடியோ

உக்ரைன் - ரஷ்யா இடையில் நடைபெற்று வரும் போரில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உக்ரைனில் உயிரிழந்துள்ளனர். 116 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 684 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த போரில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

  

5 நாட்களாக தனியாக போராடிய உக்ரைனுக்கு உதவ நேட்டோ நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிகிறது. ஏவுகணை தடுப்பு சாதனங்கள், பீரங்கி அழிப்பு ஆயுதம் மற்றும் நிதி உதவி அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் தாக்குதலால் உருகுலைந்து போன உக்ரைன் நகரங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பெண்மணி ஒருவரின் கண்ணீர் வீடியோ உலக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

  
 உக்ரைன் தூதரக அதிகாரி ஒருவரால் பகிரப்பட்டுள்ள வீடியோவில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் ஏவுகணை தாக்குதலால் நொறுங்கி விழுந்த தனது வீட்டின் கண்ணாடி துண்டுகளை சுத்தப்படுத்தும் பெண் ஒருவர், கண்ணீர் சிந்திய படியே உக்ரைன் தேசிய கீதத்தை பாடுகிறார். தனது நாட்டிற்கும், வீட்டிற்கும் ஏற்பட்ட நிலையை எண்ணி, கண்ணீர் சிந்தியபடி அவர் பாடும் தேசிய கீதத்தில் கணமான சோகம் இழையோடுகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

 

இதையும் படியுங்கள் : சிசிடிவியல் வசமாக சிக்கிய சேட்டை பைக்கர் - ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை
 சமூக ஊடகங்களில் வலம் வரும் மற்றொரு வீடியோவில் பிபிசியில் பணிபுரியும் உக்ரைனிய பத்திரிகையாளர் ஓல்கா மல்செவ்ஸ்காவின் வீடியோ உள்ளது. ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் கட்டிடம் சிதைந்ததைக் காட்டும் காட்சிகளைப் பார்த்தபோது, ​​மல்செவ்ஸ்கா நேரலை தொலைக்காட்சியில் கிழிக்கப்படுவதைக் கண்டார். BBC பத்திரிக்கையாளர் Karin Giannione ட்விட்டரில் பகிர்ந்துள்ள காணொளியில் அவர் உக்ரைனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து Malchevska உடன் விவாதித்ததைக் காட்டுகிறது. வீடியோவில், மல்செவ்ஸ்கா, கியானியோனிடம் தனது தாயிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றதாகக் கூறும்போது, ​​கியேவின் வளர்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்.

 

இதையும் படியுங்கள் : 4வது மாடி பால்கனியில் நின்று கொண்டு பெண் செய்த காரியம்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!
 பிபிசியில் பணிபுரியும் உக்ரைனிய பத்திரிகையாளர் ஓல்கா மல்செவ்ஸ்கா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மற்றொரு வீடியோவில், உக்ரைன் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை விளக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், யாரென்றே தெரியாத நபர் ஒருவர் டிரம்பெட் மூலமாக உக்ரைனின் தேசிய கீதத்தை வாசிக்கிறார். அதை நன்றாக தெளிவாக கேட்க முடிகிறது. உக்ரைனின் பரிதாப நிலையை கண்முன் காட்டும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி