மணமகள் தேவை... டீக்கடைக்கு முன் போர்டு போட்ட நபருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து அழைப்பு

மணமகள் தேவை... டீக்கடைக்கு முன் போர்டு போட்ட நபர்

மணமகள் தேவை என்று டீக்கடை முன் போர்டு போட்ட நபருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து எல்லாம் அழைப்பு வந்து குவிகின்றன.

 • Share this:
  சமூக வலைதளங்களில் கல்யாணமாகாத 90s கிட்களின் பரிதாப நிலை குறித்து பல மீமஸ்கள் வைரலாகி வரும். 90s கிட்ஸ்கள் என்றாலே குழந்தை குணம் கொண்டவர்கள் என்று பலர் சொல்லி கொண்டு வரும் நிலையில் கேரளாவில் 33 வயதான நபர் மணமகள் தேவை என்று டீக்கடை முன் போர்டு வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த நபருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து அழைப்புகள் வருகின்றன.

  கேரளா மாவட்ட வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தான் மணமகள் தேவை என்று போர்டு வைத்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். மேலும் அந்த போர்டில் ஜாதி, மதம் பேதமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். டீக்கடை முன் எதற்காக இப்படி போர்டு வைக்கப்பட்டது என்பதை உன்னி கிருஷ்ணன் தெளிவாக கூறியுள்ளார்.

  நான் கூலி தொழிலாளியாக இருந்தேன். என் தலையில் ஒரு கட்டி இருந்ததை தொடர்ந்து நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அறுவை சிகிச்சைக்கு பின் முழுமையாக குணமடைந்து, வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற விரும்பினேன். கடந்த பிப்ரவரி மாதம் வீட்டுக்கு அருகே ஒரு லாட்டரி கடை வைத்தேன். பிறகு அதை டீக்கடையாக விரிவுப்படுத்தினேன். தற்போது வியாபாரம் நன்றாக போகிறது.

  எனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவைப்பட்டது. அதற்காக வழக்கம் போல் தரகரை சென்று பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை. எனது ஜாதகத்தை வைத்து கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த வரனும் அமையவில்லை. இதனல் என் டீக்கடை முன் போர்டு வைக்க முடிவெடுத்தேன் என்றார்.

  Also Read : திருமணத்தின்போது மணமகன் செய்த காரியம்.. பளார் விட்ட மணமகள் – வைரலாகும் வீடியோ

  டீக்கடை முன் வைக்கப்பட்ட போர்டை உன்னியின் நண்பர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து நிறைய அழைப்புகள் அவருக்கு வர தொடங்கி உள்ளது. சில சமயங்களில் வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அழைப்புகள் வருகிறது. தற்போது என்னால் அழைப்புகளை எடுத்து பேசுவதற்கு கூட நேரமில்லை என்கிறார் உன்னி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: