முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் - வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊர் சுற்றும் தம்பதி!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் - வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊர் சுற்றும் தம்பதி!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்

உணவுக்காக, இந்த ஜோடி மலிவான விலையில் கிடைக்கக்கூடிய உணவகங்களை தேர்வு செய்து சாப்பிட்டு வருகின்றனர்

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் வேலையை விட்டுவிட்டு இந்தியா முழுவதும் பயணம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

உலகில் சாதாரணமாக ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளில் சிக்கித் தவிக்கின்றனர். மக்களில் பெரும்பாலானோர் எந்த கவலையும், சலிப்பான வழக்கமும் இல்லாமல், பயணம் செல்ல வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பலருக்கு அது கனவாக மட்டும்தான் இருக்கிறது. நாம் அனைவரும் எந்த வருத்தமும் இல்லாமல் ஒரு ஊரோ, மாநிலமோ, நாடோ அல்லது உலகமோ பயணம் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறோம்.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த தம்பதியினர் அதனை மெய்ப்பித்துள்ளனர். இதற்காக தங்களுடைய வேலையை விட்டுவிட்டு இந்தியா முழுவதும் பயணம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். திரிசூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி கிரிஷன் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையை மிகவும் சாகசமாக்க முடிவு செய்து, தங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு நாடு முழுவதும் பயணம் செய்ய கிளம்பி இருக்கின்றனர்.

தங்கள் குடும்பங்களின் ஆதரவை பெற்றே இந்த முடிவை இருவரும் எடுத்துள்ளனர். 2.5 லட்சம் பட்ஜெட்டில் இந்த சாலைப் பயணத்தை எளிமையாகவும், எளிதாகவும் செய்ய முடிவு செய்தனர். முதலில் தாங்கள் பயணம் செய்யும் காரின் வடிவமைப்பினை மாற்றினார்கள். குடிப்பதற்கு 10 லிட்டர் கேன்களை 3 எடுத்துக்கொண்டனர். இரவில் தூங்குவதற்கு ஏற்ப படுக்கையும் தயார் செய்தனர்.
 
View this post on Instagram

 

A post shared by TinPin Stories (@tinpinstories)உணவுக்காக, இந்த ஜோடி மலிவான விலையில் கிடைக்கக்கூடிய உணவகங்களை தேர்வு செய்து சாப்பிட்டு வருகின்றனர். உணவு கிடைக்காத போது, தாமே சமைக்கவும் செய்தனர். இதுபற்றி பேசிய ​​ஹரிகிருஷ்ணன், “நாங்கள் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் மற்றும் ஒரு பர்னர் அடுப்பை எடுத்துக்கொண்டோம். வழக்கமாக காலை மற்றும் மதிய உணவிற்கு சமைப்போம். இரவில் வெளியே சாப்பிடுவோம். மிகவும் குறைந்தபட்ஜெட்டில் இந்த பயணத்தை திட்டமிட்டோம்” என கூறியுள்ளார்.

இந்த ஜோடி அக்டோபர் 28, 2020 அன்று இன்று முதல் கிட்டத்தட்ட ஒரு வருடம் திருச்சூரில் இருந்து தங்கள் சாகச பயணத்தை தொடங்கியது. இதுவரை, அவர்கள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியேபயணம் செய்து, பெங்களூரு, உடுப்பி, கோகர்ணா, கோலாப்பூர், மும்பை போன்ற நகரங்களை கடந்து சென்றனர். அவர்கள் சமீபத்தில் குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஜம்மு -காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டனர்.
 
View this post on Instagram

 

A post shared by TinPin Stories (@tinpinstories)இதுவரை, அவர்கள் 15,000 கிமீ தூரம் பயணித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கலாச்சாரங்களை ஆராய்ந்துள்ளனர். ’டின்பின் ’ (TinPin) என்ற இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களின் பயணத்தை பற்றி அறிய முடியும்.இதில் இவர்கள் செல்லும் இடங்களின் படங்களையும், பயணத்தையும் அறியலாம்.
 
View this post on Instagram

 

A post shared by TinPin Stories (@tinpinstories)தற்போதைய பெரும்பாலான இளைஞர்கள் மனதில், இந்தியா முழுவதும் அல்லது விரும்பிய இடங்களுக்கு செல்ல வேண்டும். நிறைய இடங்களுக்கு பயணம் செல்ல வேண்டும் என்பதே ஆகும். லடாக் வரை செல்ல வேண்டும் என்று முடிவு செய்து நிறைய இளைஞர்கள் தற்போது பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Couples, Ladakh, Tour, Travel, Trip