• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மாமியாரின் உடையில் தவறுதலாக கிரேவி கொட்டிய வெயிட்டர் - சந்தோஷத்தில் ரூ.5500 டிப்ஸ் கொடுத்த மருமகள்!

மாமியாரின் உடையில் தவறுதலாக கிரேவி கொட்டிய வெயிட்டர் - சந்தோஷத்தில் ரூ.5500 டிப்ஸ் கொடுத்த மருமகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

பெண் ஒருவர் தான் பணியாற்றிய முதல் திருமணத்தில், தற்செயலாக மணமகனின் தாயின் மீது முழு கிரேவியையும் கொட்டியதை பகிர்ந்து கொண்டார்.

  • Share this:
பொதுவாக மேலை நாடுகளில் திருமணங்கள் நடைபெறும் பாணியே வேறு. இந்தியாவில் கலாச்சாரங்களுக்கு ஏற்ப திருமணங்கள் எவ்வாறு நடைபெறுகிறதோ, அதேபோன்று வெளிநாட்டு கலாச்சாரங்களும் வேறுபடுகின்றன. அதிலும், அந்த திருமணங்களில் பங்கேற்கும் அனைத்து விருந்தினர்களும் பின்பற்ற வேண்டிய ஆடைக் குறியீட்டைப் பற்றி பேசப்படாத சில விதிகள் காரணமாக திருமணங்கள் வேடிக்கை மற்றும் விளையாட்டுகள் நிறைந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விதிகளில் ஒன்று, மணமகளை தவிர்த்து வேறுயாரும் வெள்ளை உடை அணியக்கூடாது.

ஆனால் திருமணத்திற்கு முன்னதாக என்னதான் திட்டமிடல்கள் செய்திருந்தாலும், ஒருவர் விரும்பியபடி விஷயங்கள் சீராக நடக்காது. ஏதேனும் ஒரு வேடிக்கை சம்பவங்கள் நடந்தே தீரும். அந்த வகையில், பெண் ஒருவர், திருமண நிகழ்வில் பணியாளராக இருந்தபோது நடந்த ஒரு வேடிக்கையான கதையை டிக்டோக்கில் பகிர்ந்து கொண்டார். அது அவர் மணமகளின் மாமியார் உடையில் கிரேவி கொட்டிய சம்பவம்.

chloe beeee என்ற டிக்டாக் யூசர், ஒரு திருமணத்தில் வெய்ட்டாராக பணிபுரிந்தபோது, அவர் மிகவும் பதற்றத்தோடு இருந்ததை நினைவு கூர்ந்தார். மேலும் டிஸ்ப்ராக்ஸியா காரணமாக அடிக்கடி கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை கீழே விடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னால் நடந்த ஒரு பயங்கரமான சம்பத்தையும் பகிர்ந்துகொண்டார். புதுமணத் தம்பதியரின் முக்கியமான நாளை தான் முற்றிலும் சிதைத்து விட்டதாக எண்ணியுள்ளார். ஆனால் அதன் பின்னர் நடந்தது தான் சோலிக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.

தனது ஒரு நிமிட வீடியோ கிளிப்பில் பேசிய அந்தப் பெண், தான் பணியாற்றிய முதல் திருமணத்தில், தற்செயலாக மணமகனின் தாயின் மீது முழு கிரேவியையும் கொட்டியதை பகிர்ந்து கொண்டார். அந்த கிரேவி மிகவும் சூடாக இருந்ததாகவும், அவை மணப்பெண்ணின் மாமியார் உடையில் அனைத்து இடங்களிலும் சிதறியதாகவும் கூறினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இரு குடும்பங்களும் உள்ளூர் என்பதால் மணமகனின் தாய் உடை மாற்றுவதற்காக அருகில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

திருமண நிகழ்ச்சியை நாசப்படுத்தியதாக நினைத்து சோலி வேதனையில் அழ ஆரம்பித்துள்ளார். ஆனால் உண்மையில், அவருக்கு நடந்து என்னவோ மகிழ்ச்சியை தான் தந்துள்ளது. மாமியார் தனது வெள்ளை ஆடை சேதமடைந்ததை அடுத்து மாற்றுவதற்காக சென்ற நேரத்தில், சோலியை அணுகிய மணப்பெண் அவருக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் சோலிக்கு £ 55 யூரோ டாலர்களை டிப்ஸாக வழங்கியுள்ளார்.

அதாவது இந்தியா மதிப்பில் ரூ.55,000 வழங்கியுள்ளார். திருமணத்தில் கடைபிடிக்கும் சில விதிகளின்படி, மணமகளை தவிர்த்து நிகழ்ச்சிக்கு வரும் வேறுயாரும் வெள்ளை ஆடைகள் அணியக்கூடாது. இதையடுத்து மணமகள் சோலியிடம் கூறியதாவது, எனது மாமியார் வேறொருவரின் திருமண நாளில் வெள்ளை நிற ஆடையை அணிந்திருக்கக்கூடாது" என்று கூறியுள்ளார். இப்போதுகூட, எங்காவது பார்க்கும் போது நாங்கள் ஒருவருக்கொருவர் "ஹாய்" சொல்லி கொள்வோம் என்றும் டிக்டாக் வீடியோவில் சோலி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: