ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டிவிட்டரில் வைரலாகும் புதிர்..! இதை உங்களால் செய்து காட்ட முடியுமா..?

டிவிட்டரில் வைரலாகும் புதிர்..! இதை உங்களால் செய்து காட்ட முடியுமா..?

வைரலாகும் புதிர்

வைரலாகும் புதிர்

இணையத்தில் எவ்வளவு செய்திகள் வைரலாக பகிரப்பட்டாலும், சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் பல்வேறு புதிர்கள் சார்ந்த செய்திகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இணையத்தில் எவ்வளவு செய்திகள் வைரலாக பகிரப்பட்டாலும், சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் பல்வேறு புதிர்கள் சார்ந்த செய்திகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. புதிர்களை கண்டுபிடியுங்கள் என்று பல வகையான புதிர்கள் உள்ளன. இதில் ஸ்மார்ட்டாக, வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வைக்கும் புதிர்கள் பல உள்ளன. கண் முன்னே தெரியும் ஒரு மிகச்சிறிய விஷயம் அல்லது லாஜிக்கலான ஒரு விஷயம் புதிரின் விடையாக இருக்கலாம். ‘ச்சே, இது தெரியாம போச்சே’ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு விடை எளிமையாக ஆனால் புதிர்கள் சுற்றிவளைந்து காணப்படும். சமீபத்தில் டிவிட்டரில் ஒரு புதிர் ஒன்று வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

மொரிசா ஷ்வார்ட்ஸ் என்பவர் தனது டிவிட்டர் கணக்கில், இந்த புதிரை உங்களால்  தீர்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு காயிலில் நீளமான குச்சி ஒன்று மாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் உட்புற வரிசையில் மாட்டியிருக்கும் அந்த குச்சியை காயிலில் இருந்து நீக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உங்களால் செய்து காட்ட முடியுமா?

பொதுவாக ஸ்பைரல் சுருள் என்று கூறும்பொழுது நமக்கு நினைவுக்கு வருவது கொசுவர்த்தி சுருள்தான். இரண்டு கொசுவர்த்தி சுருள்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் அதை உடைக்காமல் மெதுவாக பிரித்து எடுக்க வேண்டும். இதேபோன்ற ஸ்பைரல் சுருளில் ஏதாவது ஒரு பொருள் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுது அதை ஒவ்வொரு லேயராக மெதுவாக பிரித்து அதில் மாட்டி இருக்கும் பொருளை எடுக்க வேண்டும். இந்த நீளமான குச்சி ஒன்று ஸ்பைரல் சுருளில் நடுப்பகுதியில் இருக்கின்றது. இந்த சுருளுக்கு பூட்டு இருந்தாலும் அந்த பூட்டை நீக்காமல் இந்த குச்சியை எடுக்க வேண்டும்.

49 நொடிகள் நீடிக்கும் இந்த வீடியோவில் ஸ்பெஷல் சூழலில் இருந்து குச்சியை லாவகமாக வெளியில் இருப்பது எப்படி என்பதை பற்றி நீங்கள் பார்ப்பதற்கு முன்னர் நீங்கள் பார்க்கலாம் கண்ணிமைக்கும் நொடியில் குச்சி வெளியில் வந்துவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கும் இதன் இரண்டாவது பகுதியில், இதே போல மற்றொரு புதர் இருக்கிறது.

Read More : மூளைக்கு சவால்.. இந்த படத்துல பெரிய தப்பு நடந்து போச்சு... 5 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

அதில் குதிரை லாடத்தின் நடுவில் ஒரு வளையம் பூட்டப்பட்டு, இரண்டு லாடங்களும் ஒரு சங்கிலிகளால் கோர்க்கப்பட்டுள்ளது. குதிரை லாடத்தின் சங்கிலியிலிருந்து மோதிரத்தை அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது என்றாலும், அதை எப்படி எளிதாக பிரிப்பது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான இந்த வீடியோவை கிட்டத்தட்ட1.7 லட்சம் ட்விட்டர் யூசர்கள் பார்த்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இது உண்மையிலேயே சாத்தியமா அல்லது ஏதாவது கண் கட்டு வித்தையா என்று பலரும் வியப்புடன் கமெண்ட்ஸ் செய்தும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral